Early Grey Beard: இந்த வயசுலயே தாடி நரைத்திருக்கா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்

  • SHARE
  • FOLLOW
Early Grey Beard: இந்த வயசுலயே தாடி நரைத்திருக்கா? அதுக்கு இதெல்லாம் தான் காரணம்


Causes Of Premature Grey Beard: பல்வேறு காரணங்களால் இளம்வயதிலேயே சருமம் மற்றும் முடி பிரச்சனைகளை பெரும்பாலானோர் சந்தித்து வருகின்றனர். பொதுவாக தாடி வளர்ப்பது ஆண்களுக்கு சிறந்த தோற்றத்தைத் தரும். எனினும் இளம் வயதிலேயே தாடி நரைப்பது பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது, வெள்ளை தாடி வருவது முதுமையின் அறிகுறிகளில் ஒன்றாகும். இளம் வயதிலேயே தாடி நரைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இந்த காரணங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பின்பற்றுதலின் மூலம் முன்கூட்டியே தாடி நரைப்பதைத் தடுக்கலாம்.

முன்கூட்டியே தாடி நரைப்பதற்கான காரணங்கள்

ஆண்களுக்கு இளம் வயதிலேயே ஏற்படும் தாடி நரைப்பிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: Male Fertility Supplements: ஆண்மை அதிகரிக்க வேண்டுமா? இந்த மாத்திரைகளை ட்ரை பண்ணுங்க..

மெலனின் குறைபாடு

சருமத்திற்கும், கூந்தலுக்கும் இயற்கை நிறத்தைத் தரும் ஹார்மோன்களில் ஒன்று மெலனின் ஆகும். இந்த ஹார்மோனை உடல் போதுமான அளவு உற்பத்தி செய்யவில்லை எனில், தலைமுடி முன்கூட்டியே நரைத்துவிடும் பிரச்சனையைச் சந்திக்கலாம். ஏனெனில் இது முடியின் நிறத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மன அழுத்தம் காரணமாக

இன்றைய கால சூழ்நிலையில், பெரும்பாலானோர் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். இவை மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையவையாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக அமைகிறது. இதனால் இளம் வயதிலேயே தாடி மற்றும் தலைமுடி நரைப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்

புகைப்பிடிப்பது, மது அருந்துவதால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் அதிகமாகிறது. இது நம் உடலின் செல்களைச் சேதமடையச் செய்கிறது. மேலும் இரத்த நாளங்களைச் சுருக்குகிறது. இதனால், மயிர்க்கால்களுக்குத் தேவையான போதுமான ஊட்டச்சத்து கிடைக்காதத்தால், முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தம் விறைப்புச் செயலிழப்புக்கு வழிவகுக்குமா?

ஊட்டச்சத்து குறைபாடு

உடலில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க மற்றும் இரத்தப் பற்றாக்குறையை நீக்க பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சில ஊட்டச்சத்து குறைபாடுகளால், தாடி நரைப்பு ஏற்படலாம். எனவே ஆரோக்கியமான மற்றும் சீரான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

தவறான தோல் பராமரிப்பு பொருள்கள் பயன்பாடு

தாடி வளர்ச்சி அல்லது சரும பராமரிப்புக்கு சில தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அடங்கிய பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை சருமத்திற்கு எடுத்துக் கொள்வது தாடியை வெண்மையாக்கலாம்.

தொடர் மருந்து

ஏதேனும், உடல் நிலை பிரச்சனை காரணமாக தொடர்ந்து மருந்துகளை உட்கொள்வதும் தாடி நரைப் பிரச்சனையை உண்டாக்கும். இதனால் தாடியில் உள்ள முடிகளும் வெண்மையாகிவிடும்.

இந்த பதிவும் உதவலாம்: Sleeping Naked Benefits: ஆடை இல்லாமல் தூங்குவது ஆண்களுக்கு கருவுறுதல் தன்மையை அதிகரிக்குமா?

மரபியல் காரணம்

உங்கள் பரம்பரையில் தந்தை அல்லது வேறு எந்த குடும்ப உறவினருக்கும் வெள்ளை தாடி பிரச்சனை இருப்பின், அது உங்களுக்கும் வர வாய்ப்புள்ளது. மரபணு ரீதியாக எதிர்காலத்தில் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

முன்கூட்டியே தாடி நரைப்பது தடுப்பது எப்படி?

தாடி நரைப்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டு, வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் அல்லது காரணங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவதன் மூலம், பிரச்சனை படிப்படியாக மறையலாம். எனினும், மரபியல் ரீதியாக மேம்பாடு செய்வது இயலானது.

  • ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்
  • மன அழுத்தத்தை நிர்வகிப்பது
  • கடுமையான தோல் பராமரிப்புப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது
  • போதுமான நல்ல தூக்கம் பெறுவது
  • மது அருந்துதல் மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது
  • வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல்

இந்த வகை வாழ்க்கை முறை நடவடிக்கைகளைக் கையாள்வதன் மூலம், முன்கூட்டிய தாடி நரையைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Liver Cancer In Men: இந்த அறிகுறிகள் ஆண்களுக்கு கல்லீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்!

Image Source: Freepik

Read Next

Sleeping Naked Benefits: ஆடை இல்லாமல் தூங்குவது ஆண்களுக்கு கருவுறுதல் தன்மையை அதிகரிக்குமா?

Disclaimer