$
Ratan Tata: மூத்த தொழிலதிபர் ரத்தன் டாடா திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வேகமாக பரவின. அதோடு மட்டுமின்றி 86 வயதான அவருக்கு இரத்த அழுத்தம் வேகமாக குறைந்து வருவதாகவும் தகவல்கள் பரவியது.
தற்போது ரத்தன் டாட்டா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் தகவல் பரவியதால் பலரும் இதனால் வருத்தம் அடைந்தனர்.
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதியா? (Ratan Tata Admitted in Hospital?)
மேலும் இந்த தகவல் துக்க செய்தியாக சமூகவலைதளங்களில் வேகமாக பரவின. ரத்தன் டாடாவிற்கு என்னதான் ஆச்சு, உண்மை தகவல் என அவரது பிரியர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இதுகுறித்த சுவாரஸ்ய மற்றும் உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது.
ரத்தன் டாடா ஆரோக்கியம் குறித்து விளக்கம்
ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவிய வதந்திகளுக்கு அவரே தனது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். இந்த பதிலையும் தனக்கே உரிய பாணியில் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவை பார்க்கலாம்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரத்தன் டாடா (Ratan Tata put an end to Health Rumours)
ரத்தன் டாடா இன்ஸ்டாவில் பதிவிட்ட பதிவில், "எனது உடல்நிலை குறித்து சமீபத்திய வதந்திகள் பரவுவதை நான் அறிவேன், மேலும் இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.

எனது வயது மற்றும் தொடர்புடைய உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன். கவலைக்கு எந்த காரணமும் இல்லை.
நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன், பொதுமக்களும் ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். அதாவது ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை, தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றுள்ளார்.