Chennai Air Show 2024: 5 பேர் இறக்க காரணம்! 200 பேர் ஏன் மயங்கினர்? நடந்தது என்ன?

  • SHARE
  • FOLLOW
Chennai Air Show 2024: 5 பேர் இறக்க காரணம்! 200 பேர் ஏன் மயங்கினர்? நடந்தது என்ன?


Chennai Air Show 2024: இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சியானது சரியாக காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடத்தப்பட்டது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் குவிந்த கூட்டம்

மெரினா கடற்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர் என கூறப்படுகிறது. விமானப் படை வீரர்கள் வானில் பல சாகசங்கள் செய்தனர். கூட்டம் அலைமோத சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த சாகசத்தை கண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியை காண ஒரே இடத்தில் மக்கள் இவ்வளவு பேர் குவிந்ததால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் நேர்ந்த சோகம்

நிகழ்ச்சி முடிந்த உடன் அனைவரும் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் போக்குவரத்து மிக மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் நகர கூட முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கான உரிய முன்னேற்பாடுகள் செய்யாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதோடு நிகழ்ச்சி மதியம் வெயில் நேரத்தில் நடந்ததால் பலரும் கூட்டத்தில் நகர முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

200க்கும் மேற்பட்டோர் மயக்கம்

கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்ளனர். இதில் பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பலர் ஆம்புலன்ஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளனர். கூட்டம் சாலையெங்கும் அலை மோதிய காரணத்தினால் ஆம்புலன்ஸ் வரவே தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

5 பேர் உயிரிழப்பு

மேலும் இதில் 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் நாடெங்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வெயில் மற்றும் கூட்டத்தால் நீரிழப்பு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் மயக்க நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பலர் தற்போதுவரை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

நீரிழப்பு பிரச்சனை என்றால் என்ன?

உடலின் இரத்தக் குழாய்களில் உள்ள நீர் மற்றும் உப்புகளின் சமநிலையில் மாற்றம் ஏற்படும் போது நீரிழப்பு ஏற்படுகிறது. வெயில் மற்றும் கூட்ட நேரத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுவது வழக்கம். இந்த நிலைியல் உடலின் இரத்த அழுத்தம் குறைந்து உடனே வியர்க்கத் தொடங்குகிறது.

இதனால் உடலில் நீர் வற்றிப்போகி இதயம் மற்றும் மூளை வரையிலான அனைத்து உறுப்பின் சராசரி செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். இதுதான் நீரிழப்பு பிரச்சனை எனப்படுகிறது. இதுபோன்ற நிலையில் உடலுக்கு போதுமான நீர், ஆரோக்கிய பானம் உள்ளிட்டவையை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

Image Source: Social Media

Read Next

கொழுப்பு கல்லீரலை விரைவில் குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்.!

Disclaimer

குறிச்சொற்கள்