உடல் முழுவதும் பரவிய புற்றுநோய்... பிரபல காமெடி நடிகர் பரிதாப மரணம்...!

வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், மீண்டும் உடல் நிலை மோசமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
  • SHARE
  • FOLLOW
உடல் முழுவதும் பரவிய புற்றுநோய்... பிரபல காமெடி நடிகர் பரிதாப மரணம்...!

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவரின் சிகிச்சைக்காகவும், குடும்பத்தின் செலவுக்காகவும் நடிகர், நடிகைகள், திரைப்பட சங்கங்கள் மற்றும் நண்பர்கள் உதவி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" என்ற படத்திற்கு தானாக முன்வந்து டப்பிங் பேசி கொடுத்தார். பிறகு, வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், மீண்டும் உடல் நிலை மோசமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு வந்த புற்றுநோய் அவரின் மூளை உட்பட உடல் முழுவதும் பரவியதால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.

மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணிக்கு மனைவி மற்றும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கிறார்கள்.தற்போது சூப்பர் குட் சுப்பிரமணியின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கிறது. இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்படும். நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரவுவதற்கான காரணங்கள்:

புற்றுநோய் செல்கள் கட்டுப்பாட்டை மீறிப் பெருகுகின்றன:

புற்றுநோய் செல்கள் இயல்பான செல்களைப் போல இல்லாமல், கட்டுப்பாடின்றி பெருகி, உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளன.

புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கான வழி:

புற்றுநோய் செல்கள் கட்டியிலிருந்து வெளியேறி, இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் அமைப்பு மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்கின்றன.

புதிய கட்டிகளை உருவாக்கும் திறன்:

புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளில் புதிய கட்டிகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன.

மரபணு மாற்றங்கள்:

புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றங்கள் செல்கள் கட்டுப்பாட்டை மீறி பெருகவும், உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவவும் காரணமாகின்றன.

சிக்னல்கள்:

புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு உதவி செய்யும் பல சிக்னல்களும் உள்ளன, அதைப் பற்றிய ஆய்வு ஒன்று dr arvind-ன் இணையதளத்தில் உள்ளது.

எங்கே பரவுகிறது?

புற்றுநோய் செல்கள் உடலின் பல பகுதிகளுக்குப் பரவலாம், ஆனால் பொதுவாக எலும்புகள், கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகளுக்குப் பரவுவது அதிகமாக உள்ளது.

பரவினால் என்ன நடக்கும்?

புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவினால், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் மாறுபடலாம். புற்றுநோய் பரவுதல், நோயாளியின் வாழ்நாள் மற்றும் சிகிச்சை முறைகளை பாதிக்கலாம்.

Read Next

உங்க நோயெதிர்ப்புச் சக்தியை பாதிக்கும் இந்த பழக்கங்களை நீங்க கட்டாயம் தவிர்க்கணும்

Disclaimer

குறிச்சொற்கள்