"என்னை நினைத்ததற்கு நன்றி" ரத்தன் டாடாவின் இறுதி வார்த்தை.. மரணத்திற்கான காரணம்!

  • SHARE
  • FOLLOW
"என்னை நினைத்ததற்கு நன்றி" ரத்தன் டாடாவின் இறுதி வார்த்தை.. மரணத்திற்கான காரணம்!


தேசத்தின் அடையாளமாக திகழ்ந்த ரத்தன் டாடா தனது 86 வயதில் மும்பை மருத்துவமனையில் காலமானார். இந்த தகவல் நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தனை ஏற்படுத்தி உள்ளது. ரத்தன் டாடாவின் மரணத்திற்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் உட்பட சாமானிய மக்கள் வரை அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரத்தன் டாடா தனது முதுமை பருவத்திலும் ஆக்டிவாக பொதுவெளியில் செயல்பட்டு வந்தார். நாட்டில் பல தொழிலதிபர்கள் இருந்தாலும் ரத்தன் நேவல் டாடாவிற்கு காஷ்மீர் முதல் குமரி வரை ரசிகர்கள் உள்ளனர்.

தொழில் தொடங்கும் பலருக்கும் இவர் எடுத்துக் காட்டாக திகழ்ந்தார். ரத்தன் டாடா மோட்டிவேஷன் பேச்சை பலரும் தங்களது வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸாக வைத்து தங்களை ஊக்கப்படுத்திக் கொள்வார்கள்.

ரத்தன் டாடா மரணத்திற்கு பலரும் அஞ்சலி

ரத்தன் டாடா மரணத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நேரத்தில், அவர் இறுதியாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட பதிவு தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.

தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 7ம் தேதி (திங்கட்கிழமை) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் தெரிவித்தன.

ரத்தன் டாடா கடைசியாக பதிவிட்ட பதிவு

இந்த தகவல் வைரலான போது, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உடல்நல ஆரோக்கியம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், "எனது உடல்நிலை குறித்து சமீபத்திய வதந்திகள் பரவுவதை நான் அறிவேன், மேலும் இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.எனது வயது மற்றும் தொடர்புடைய உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன்.

கவலைக்கு எந்த காரணமும் இல்லை. நான் நல்ல மனநிலையில் இருக்கிறேன், பொதுமக்களும் ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

என்னை நினைத்ததற்கு நன்றி: ரத்தன் நேவல் டாடா இறுதி பதிவு

இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு தலைப்பாக "Thank you for thinking of me" ""என்னை பற்றி நினைத்ததற்கு நன்றி" என தன்மையோடு பதிவிட்டிருந்தார். தற்போது அவர் காலமான நிலையில் இந்த பதிவு மக்களை உருக்கமடைய வைத்துள்ளது. மேலும் இந்த பதிவுக்கு கீழேயே அவரது ஃபாலோவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரத்தன் டாடா மரணத்திற்கு காரணம்

ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 86 வயதான அவர் வயது மூப்பினால் வரும் உடல்நல பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"டாடா குழுமத்தை மட்டுமின்றி நமது தேசத்தின் கட்டமைப்பையும் வடிவமைத்த அவரது அளவிட முடியாத பங்களிப்புகள்.. உண்மையிலேயே, அசாதாரணமான தலைவரான திரு.ரத்தன் நேவல் டாடாவிடம் இருந்து நாங்கள் விடைபெறுகிறோம்" என்று தலைவர் என் சந்திரசேகரன், டாடா சன்ஸ் தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா மரணத்திற்கு பிரதமர் மோடி அஞ்சலி

இந்த தகவல் வெளியான உடன் முக்கிய தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார், அதில் "இரக்கமுள்ள ஆன்மா மற்றும் அசாதாரண மனிதர்" என குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஸ்ரீ ரத்தன் டாடா ஜி ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர், இரக்கமுள்ள ஆன்மா மற்றும் ஒரு அசாதாரண மனிதர். அவர் இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு நிலையான தலைமையை வழங்கினார். அவர் அன்பானவர். அவரது பணிவு, கருணை மற்றும் நமது சமூகத்தை மேம்படுத்துவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நன்றி என பிரதமர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரத்தன் டாடா மரணத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அஞ்சலி

"ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் நீடித்த முத்திரையை பதித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், டாடா சமூகத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Read Next

Ratan Tata: தேசத்தின் அடையாளமான ரத்தன் டாடா காலமானார்!

Disclaimer

குறிச்சொற்கள்