$
How to use soaked almond for hair growth : தினமும் பாதாம் சாப்பிடுவதால் மூளை கூர்மையாகி ஆரோக்கியமாக இருக்கும் என்று உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே அளவு, இது முடி வளர்ச்சிக்கும் உதவும். நாம் பெரும்பாலும், தலைமுடிக்கு பாதாமை எண்ணெய் வடிவில் மட்டுமே பயன்படுத்துவோம்.
ஆனால், ஊறவைத்த பாதாமை பயன்படுத்துவதால் பல மடங்கு பலன் கிடைக்கும் என உங்களுக்கு தெரியுமா?. இது உங்கள் முடியை வேகமாக வளரச் செய்வதுடன், அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும். வாருங்கள் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற பாதாமை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான கூந்தலுக்கு பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத குறிப்புகள்
ஊறவைத்த பாதாம் தலை முடிக்கு நல்லதா?

ஊறவைத்த பாதாம் பருப்பை தினமும் காலை உணவில் சேர்த்து சாப்பிட பலர் விரும்புவார்கள், ஏனெனில் அது உடலுக்கு சக்தியை தருகிறது. ஆனால், அதை தலைக்கும் பயன்படுத்தலாம். அது உங்கள் முடிக்கு பல நன்மைகளை கொடுக்கும்.
பாதாம் ஹேர் பேக் செய்வது எப்படி?
- இதற்கு முதலில் 6-7 பாதாம் பருப்பை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- மறுநாள் காலையில் அவற்றை மிக்சியில் இட்டு நன்கு அரைக்கவும்.
- பிறகு அதில் முட்டையின் வெள்ளை காரு சேர்த்து அடிக்கவும்.
- பின்னர், இந்த கலவையை ஹேர் பிரஷ் அல்லது கைகளின் உதவியுடன் உச்சந்தலையில் தடவவும்.
- இந்த பேக்கை தலைமுடியில் 1 மணி நேரம் விடவும்.
இதை தொடர்ந்து பயன்படுத்திவர ஒரே மாதத்தில் நல்ல மாற்றம் தெரியும். முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் மாறுவதுடன் கூந்தல் பளபளப்பாக இருக்கவும் இது உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? உங்களுக்கான 6 ஆசனங்கள் இங்கே…
முடியை இயற்கையாக மென்மையாக மாற்ற

உங்கள் தலைமுடியை இயற்கையாக மென்மையாக மாற்ற விரும்பினால், நீங்கள் பாதாமை பயன்படுத்தலாம். இதற்கு பாதாமை பாலுடன் சேர்த்து வீட்டிலேயே கண்டிஷனர் தயாரித்து பயன்படுத்தவும். இதுவும் உங்கள் தலைமுடியை பட்டுப் போலவும் பளபளப்பாகவும் மாற்றும்.
பாதாம் முடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மை

இதில், ஒமேகா கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, பி2 மற்றும் பி6 ஆகியவை பாதாமில் காணப்படுகின்றன. இதனால் முடிக்கு ஊட்டச்சத்து கிடைப்பதுடன் அவற்றின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. முடி வளரவும் இதைப் பயன்படுத்தலாம். எனவே, நீங்கள் விரும்பினால், வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை இந்த பேக்கை உங்கள் தலைமுடியில் பயன்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!
குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் சோதனை செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் முடி அமைப்பும் வித்தியாசமாக இருக்கும், மேலே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உடனடி பலன்களைத் தரும் என்று நாங்கள் கூறவில்லை. நீங்கள் ஒருமுறை உங்கள் நிபுணரிடம் ஆலோசித்து, பின்னர் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
Image Credit- Freepik