இன்றைய வாழ்க்கை நடைமுறையில் முடி உதிர்தல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இளைஞரோ, முதியவர்களோ, ஆண்களோ, பெண்களோ, ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முடி உதிர்வை சந்திக்கின்றனர். 10-ல் 9 இந்தியர்கள் மரபணு சார்ந்த முடி உதிர்தலால் பாதிக்கப்படுவதாக, டிராயா வெளியிடப்பட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கன் சொசைட்டி ஃபார் டெர்மட்டாலஜிக் சர்ஜரி (ASDS) நடத்திய மற்றொரு ஆய்வில், 42% ஆண்கள் மிதமான முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 18-29 வயதுடைய ஆண்களுக்கு 16 % மற்றும் 40-49 வயதுடைய ஆண்களுக்கு 53% வயது அதிகரிக்கும்போது முடி உதிர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆண்களில் முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள்:
முடி உதிர்தல் எந்த வகையிலும் ஏற்படலாம். இருப்பினும், இது ஆண்களில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பொதுவான காரணங்களில் சில:
* பரம்பரை காரணிகளால் ஏற்படும் முடி உதிர்வு. இது ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா என்றும் அழைக்கப்படுகிறது.
* ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மருத்துவ நிலைமைகளால் ஏற்படும் முடி உதிர்வு. இந்த வகை அலோபீசியா அரேட்டா எனப்படும்.
* புற்றுநோய், மூட்டுவலி, மனச்சோர்வு, இதயப் பிரச்சனைகள், கீல்வாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவம் காரணமாக ஏற்படும் முடி உதிர்வு.
முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தினசரி பழக்கம்:
முடி உதிர்தல் ஆண்களிடையே ஒரு பொதுவான கவலையாக உள்ளது. சில அன்றாட பழக்கவழக்கங்கள் அல்லது தவறுகள் முடி உதிர்வுக்கு பங்களிக்கக்கூடும். அதாவது,
*கடுமையான ஷாம்புகளை பயன்படுத்துதல்.
*முடியை சரியாக அலசாமல் இருப்பது.
*அதிகப்படியான சிகை அலங்காரம்.
*போதிய சத்துக்கள் இல்லாமை.
*மன அழுத்தம்
*புகை பிடித்தல்
*போதுமான தூக்கம் இல்லாமை.
இதையும் படிங்க: முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!
யார் ஆபத்தில் உள்ளனர்?
முடி உதிர்தல் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக வெளிப்படும். சிலரின் தலை மேல் பகுதி படிப்படியாக மெலிவதால் முடி உதிர்வு ஏற்படலாம். சிலருக்கு வட்ட வடிவ அல்லது வழுக்கைப் புள்ளிகளை உருவாக்கலாம். தலை மட்டுமின்றி முழு உடல் முடி உதிர்தல் உள்ளவர்களும் உள்ளனர். இது பெரும்பாலும் புற்றுநோய்க்கான கீமோதெரபி போன்ற மருத்துவ சிகிச்சையின் விளைவாகும். எல்லோரும் முடி சேதம் அல்லது முடி உதிர்தல் போன்றவற்றை அனுபவிக்கலாம். சிலர் ஆபத்தில் இருக்கலாம். பொதுவான ஆபத்து காரணிகள் பின்வருமாறு,
* தாய் அல்லது தந்தையின் குடும்பத்தின் வழி வழுக்கை.
* குடும்ப வரலாறு
* வயது
* குறிப்பிடத்தக்க எடை இழப்பு
* நீரிழிவு மற்றும் லூபஸ் போன்ற சில மருத்துவ நிலைமைகள்
* மன அழுத்தம்
* மோசமான ஊட்டச்சத்து
பின்பற்ற வேண்டிய குறிப்புகள்:
ஆண்கள் தங்கள் முடியை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் பழக்கங்களை அடையாளம் கண்டுகொள்வது முக்கியம். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், பொதுவான தவறுகளைத் தவிர்ப்பதன் மூலமும், ஆண்கள் முடி உதிர்வு அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். முடி உதிர்தலைத் தடுக்கும் சில குறிப்புகள் பின்வருமாறு,
* மென்மையான ஷாம்புகளை பயன்படுத்துதல்
*முடியை தவறாமல் அலசுதல்
* அதிகப்படியான ஸ்டைலை தவிர்க்கவும்.
* வெப்ப சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* சரிவிகித உணவை உட்கொள்ளவும்.
* மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
* புகைபிடிப்பதை நிறுத்துதல்
* 7-8 மணிநேர தூக்கத்தை இலக்காகக் கொள்ளுதல்.
* பொடுகு போன்ற எந்த உச்சந்தலை ஆரோக்கிய பிரச்சனைகளையும் விரைந்து தீர்வு காண வேண்டும்.
குறிப்பிட்ட முடி உதிர்தல் பிரச்னைகளுக்கான சிறந்த சிகிச்சை திட்டத்தை மருத்துவர்கள் தீர்மானிக்க முடியும் என்பதால், தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
Image Source: Freepik