Benefits of Rose Water: வெயிலால் உங்க சருமம் கருப்பாகி விட்டதா? அப்போ ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
Benefits of Rose Water: வெயிலால் உங்க சருமம் கருப்பாகி விட்டதா? அப்போ ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க!

சருமத்தில் ஏற்பட்டுள்ள சன் டானை நீக்க ரோஸ் வாட்டர் போதும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வெயிலால் உங்கள் சருமம் கருமையாக மாறினால், நீங்கள் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். சன் டானை நீக்க ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்

சன் டானை போக்க ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்துவது?

ரோஸ் வாட்டர் மற்றும் அலோ வேரா ஜெல்

ரோஸ் வாட்டர் மற்றும் அலோ வேரா ஆகிய இரண்டும் இயற்கையான பொருட்கள். வெயில் தாக்கத்தால், கருமையான சருமத்தை சரிசெய்ய கற்றாழையை ரோஸ் வாட்டரில் கலந்து தடவலாம். இதற்கு நீங்கள் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில், ரோஸ் வாட்டரை கலந்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவவும். இதை 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். ரோஸ் வாட்டர் மற்றும் கற்றாழை சருமத்தின் சிவப்பையும் கருமையையும் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!

ரோஸ் வாட்டரை நேரடியாக தடவவும்

நீங்கள் விரும்பினால், ரோஸ் வாட்டரை நேரடியாகவும் உங்கள் சருமத்தில் தடவலாம். இதற்கு இயற்கையான ரோஸ் வாட்டரை எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தி உருண்டையின் உதவியுடன் உங்கள் தோலில் ரோஸ் வாட்டரை தடவவும். பின்னர், அதை தோலில் 10-15 நிமிடங்கள் அப்படியே விடவும்.

இல்லையெனில், ரோஸ் வாட்டரையும் தடவிய பின் இரவு முழுவதும் அப்படியே விடவும். ரோஸ் வாட்டர் வெயிலில் கருப்பான சருமத்தை குணப்படுத்த உதவுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்தை அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. குளிக்கும் தண்ணீரிலும் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளலாம்.

ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மிட்டி

சன் டானை நீக்க ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மிட்டியையும் கலந்து முகத்தில் தடவலாம். முல்தானி மிட்டி சூரிய ஒளியால் சருமம் கருமையாவதை போக்குகிறது. மேலும், எண்ணெய் பசை சருமத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மிட்டியை உபயோகித்தால் முகம் மேம்மையாவதுடன் பொலிவு அதிகரிக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Summer Skin Care: கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்?

ரோஸ் வாட்டர் மற்றும் கடலை மாவு

சூரிய ஒளியால் உங்கள் சருமம் கருப்பாக மாறியிருந்தால், ரோஸ் வாட்டரில் கடலை மாவு மற்றும் மஞ்சளைப் பயன்படுத்தலாம். இதற்கு 3-4 ஸ்பூன் கடலை மாவு எடுத்துக் கொள்ளவும். அதில் ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சளை கலக்கவும்.

இப்போது இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்யவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை தடவினால், சரும பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Home Remedies For Skin Tanning: சருமத்தில் உள்ள கருமையை நீக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறைகள்

Disclaimer