Thu Oct 29, 2026 | 03:30 PM IST

Doctor Verified

Home Remedies For Skin Tanning: சருமத்தில் உள்ள கருமையை நீக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறைகள்

Home Remedies For Skin Tanning: சருமத்தில் உள்ள கருமையை நீக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறைகள்Home Remedies For Skin Tanning: சருமத்தில் உள்ள கருமையை நீக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறைகள்

Tips To Remove Skin Tanning: ஸ்கின் டான் பிரச்சனை இன்று அனைவரும் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒன்றாகும். குறிப்பாக சூரியக் கதிர்களால் ஏற்படக்கூடியதாகும். எனினும், இந்த பிரச்சனையைப் போக்க சில இயற்கையான வீட்டு வைத்திய முறைகள் உதவுகின்றன. இவை சருமத்தின் கருமை நிறத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இப்போது, சருமத்தின் கருமை நிறத்தைக் குறைக்கும் மற்றும் நீக்கும் தன்மை கொண்ட சில இயற்கை முறைகள் உள்ளன. சருமத்தின் கருமையை நீக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் குறித்து பீகார், தர்பங்கா, பிஹார் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை (BAMS) டாக்டர் கணேஷ் சௌத்ரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

சருமத்தின் கருமையை நீக்க உதவும் வீட்டு வைத்தியம்

உங்கள் சருமத்தின் கருமையை நீக்க சில வீட்டு வைத்திய முறைகளைக் காணலாம்.

தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு

  • தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு சம பாகங்களாகச் சேர்க்கவும்.
  • இந்த கலவையைத் தோலில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதில் எலுமிச்சை பழுப்பு நிறத்தைக் குறைக்கவும், தேன் சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது.

எலுமிச்சைப்பழம் ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஆகும். மேலும், தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.

பப்பாளி மற்றும் முல்தானி மிட்டி

  • சருமத்தின் கருப்புத் தன்மையை நீக்க பழுத்த பப்பாளியை மசித்து, அதை முல்தானி மிட்டியுடன் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
  • பின் இந்த கலவையை தோலில் 15-20 நிமிடங்கள் தடவ வேண்டும்.

இதில், பப்பாளியில் உள்ள என்சைம்கள், சருமத்தில் உள்ள கருப்புத் தன்மையை வெளியேற்றி ஒளிரச் செய்கிறது. மேலும், முல்தானி மிட்டி சருமத்தை சுத்தப்படுத்த மற்றும் குளிர்விக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!

சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர்

  • சந்தனப் பொடியுடன் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும்.
  • இந்த பேஸ்டை ஸ்கின் டான் பகுதிகளில் தடவி அது காய்ந்து போகும் வரை விட்டு, பின் தண்ணீரில் கழுவவும். இந்த தீர்வு குறிப்பாக எரியும் பகுதிக்கு இனிமையானதாக இருக்கும்.

சந்தனம் குளிர்ச்சி மற்றும் சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது.

மஞ்சள் மற்றும் தயிர் மாஸ்க்

  • முதலில், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சளுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து பேஸ்ட் செய்யவும்.
  • பின் இந்தக் கலவையை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து, அதை கழுவவும்.

மஞ்சள், சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சரும பராமரிப்பில் முதன்மையானதாக விளங்குகிறது.

வெள்ளரி மற்றும் தக்காளி

  • வெள்ளரி, தக்காளி இரண்டையும் நன்றாக பேஸ்ட் செய்யவும்.
  • பின் இந்த கலவையை சருமத்தில் தடவி சுமார் 15-20 நிமிடங்கள் விட்டு கழுவ வேண்டும்.

வெள்ளரியில் உள்ள குளிர்ச்சியூட்டும் பண்புகளும், தக்காளில் உள்ள இயற்கையான அமிலங்களும் சருமத்தை குளிர்ச்சியாகவும், ஒளிரவும் செய்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!

தயிர் மற்றும் கடலை மாவு

  • கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
  • இதை சருமத்தில் தடவி, உலர வைத்து பின் கழுவவும்.

இந்த பேக் டான் நீக்குவது மட்டுமின்றி இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. மேலும், கடலை மாவு சருமத்தை பளபளப்பாக வைக்க சிறந்த தேர்வாகும்.

அலோ வேரா ஜெல்

  • தோல் பதனிடப்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல் தடவ வேண்டும்.
  • இதை 20-30 நிமிடங்கள் வைத்து பின் கழுவவும்.

கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பல்துறை தாவரமாகும்.

சருமத்தில் உள்ள கருமையை நீக்க இந்த வீட்டு வைத்திய முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும். அதே சமயம், சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது, பாதுகாப்பு ஆடைகளை அணிவது, தேர்ந்தெடுத்த மருந்துடன் ஒத்துப் போகுதல், சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாப்பது போன்றவற்றின் மூலம் சருமத்தை மென்மையாகவும், பாதுகாப்பாகவும் வைக்கலாம். தோல் பராமரிப்பு வழக்கத்தில், இந்த இயற்கையான முறைகளை இணைத்துக் கொள்வதன் மூலம், முழுமையான அழகு பராமரிப்பின் பிரகாசமான மற்றும் கூடுதல் நிறத்தைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Skin Tanning Remedies : உங்க ஸ்கின் ரொம்ப கருப்பா இருக்கா? அப்போ குளிக்கும் போது இதை யூஸ் பண்ணுங்க!

Read Next

→ Skin Care Tips: ஸ்கின் அலர்ஜி இருந்தால் மறந்தும் இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்!!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.