Half Boil Egg Side Effects: உங்கள் தினசரி காலை உணவில் ஹாஃப் பாயில் முட்டை சேர்க்கிறீர்களா? இது ஃபுட் பாய்சனுக்கு வழிவகுக்கலாம். முட்டையை பச்சையாகவோ, ஹாஃப் பாயிலாகவோ சாப்பிடுவதால், முட்டையில் இருக்கும் சால்மோனெல்லா என்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவின் அபாயத்தை மட்டுமல்ல, பறவைக் காய்ச்சலின் போது பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. சால்மோனெல்லா மிகவும் ஆபத்தான ஒன்று. இது ஃபுட் பாய்சன், இரைப்பை குடல் பிரச்னை, வயிற்று போக்கு, வயிற்று பிடிப்பு மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும்.

ஹாஃப் பாயில் ஏன் ஆபத்து?
புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று முட்டை. முட்டைகள் சுவையாக இருக்கும். நம்பமுடியாத அளவிற்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முட்டை சாப்பிடுவதால் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து எடை குறைக்க உதவும்.
முட்டையில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உள்ளது. இது கோழியில் இருந்து பெறப்படுகிறது. இந்த கிருமிகள் உங்கள் முட்டைகளை சரியாக வேகவைக்கவில்லை அல்லது தயாரிக்கவில்லை என்றால் உங்கள் உடலில் நுழைந்து உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இதையும் படிங்க: Egg Side Effects: அளவுக்கு அதிகமா முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
அதிக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
- ஒரு நாளைக்கு அதிக அளவு முட்டைகளை உட்கொள்வது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது, இதய நோய் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
- மஞ்சள் கரு முழுக்க முழுக்க கொலஸ்ட்ராலால் ஆனது, முட்டையின் வெள்ளைக்கரு முழுக்க புரதங்களால் ஆனது. எனவே, வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டாலும் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கும். இது உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
- திக முட்டைகளை சாப்பிட்டால், உங்கள் செரிமான அமைப்பு பாதிக்கப்படலாம் மற்றும் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படலாம். உங்களுக்கு முட்டை உணர்திறன் இருந்தால், இது இன்னும் மோசமாகிவிடும்.
- முட்டையின் அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் நீரிழிவு, புரோஸ்டேட், பெருங்குடல் புற்றுநோய் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதய பிரச்சனை உள்ளவர்கள், முட்டைகளை சாப்பிடும் போது குறைவான மஞ்சள் கரு மற்றும் அதிக வெள்ளைக்கருவை சாப்பிடுவது ஆரோக்கியமான மாற்றாக இருக்கலாம்.
குறிப்பு
இந்த பதிவில் உள்ள குறிப்புகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. முட்டை குறித்த உண்மை தன்மையை அறிய உணவியல் நிபுணரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik