Cumin Water Benefits: சீரகத்தை இப்படி சாப்பிட்டால் குடலில் உள்ள அழுக்குகள் நீங்குமாம்!

  • SHARE
  • FOLLOW
Cumin Water Benefits: சீரகத்தை இப்படி சாப்பிட்டால் குடலில் உள்ள அழுக்குகள் நீங்குமாம்!


குடலில் அழுக்கு அல்லது நச்சுகள் குவிவதால், செரிமான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இந்நிலையில், மக்கள் ஆரோக்கியமாக இருக்க அவ்வப்போது தங்கள் குடல்களில் உள்ள நச்சுக்களை நீக்குகிறார்கள். இதற்கு சிலர் ஜூஸ் சாப்பிடுகிறார்கள், சிலர் டீடாக்ஸ் டயட்டை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், சீரகத்தை வைத்து மூலம் குடலில் உள்ள அழுக்கை நீக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆரோக்யா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷியன் டாக்டர் சுகீதா முத்ரேஜா, குடலில் உள்ள அழுக்குகளை நீக்க சீரகத்தை எப்படி உட்கொள்வது என கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம் : Urad dal: வெள்ளை உளுந்தை விட கருப்பு உளுந்து ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நல்லதா?

குடல் அழுக்குகளை நீக்க சீரகத்தை எப்படி சாப்பிடுவது?

சீரகப் பொடியை தண்ணீருடன் கலந்து சாப்பிடலாம்

குடலில் படிந்துள்ள அழுக்குகளை நீக்க வேண்டுமானால், சீரகப் பொடியைப் பயன்படுத்தலாம். இதற்கு சீரகத்தை நன்றாக வறுக்கவும். பின் இதை நைசாக அரைக்கவும். இப்போது, சீரகப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். சீரகப் பொடியை தினமும் காலை, மாலையில் சாப்பிடலாம். இதன் மூலம் உங்கள் உடலில் சேரும் அழுக்குகள் அனைத்தும் எளிதில் வெளியேறிவிடும்.

சீரகத்தை இரவு முழுவதும் ஊற வைக்கவும்

குடலில் சேரும் அழுக்குகளை நீக்க சீரகம் உதவியாக இருக்கும். இதற்கு சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போடவும். இதை ஒரே இரவில் அப்படியே விடவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி காலையில் குடிக்கவும். நீங்கள் விரும்பினால், இந்த தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேன் சேர்க்கலாம். இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள். காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இது உங்கள் வயிற்றை எளிதில் சுத்தப்படுத்துவதோடு, நச்சுக்களும் அகற்றப்படும். சீரகத் தண்ணீரைக் குடித்து ஒரு மணி நேரம் கழித்து மட்டுமே காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : Almonds Benefits:: பாதாமில் உள்ள முழு சத்துக்களும் கிடைக்க… எப்போது, எப்படி சாப்பிடனும் தெரியுமா?

நாள் முழுவதும் சீரகம் தண்ணீர் குடிக்கவும்

குடல் அழுக்குகளை சுத்தம் செய்ய, நாள் முழுவதும் சீரக நீரை குடிக்கலாம். இதற்காக நீங்கள் 2-3 கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சீரகத்தைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இப்போது இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைக்கவும். இந்த நீரை நாள் முழுவதும் உட்கொள்ளலாம். இந்த தண்ணீரை நாள் முழுவதும் குடிப்பதால் குடல் அழுக்குகள் சுத்தமாகும், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் அனைத்தும் எளிதில் வெளியேறும். சீரக நீரை குடிப்பதும் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Pineapple Benefits: வெளிப்புறத்தை பார்த்து ஏமாறாதீங்க… அன்னாச்சி பழத்தில் மறைந்திருக்கும் அளவில்லா நன்மைகள்!

சீரகப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிடவும்

சீரகப் பொடியை தேனுடன் கலந்தும் சாப்பிடலாம். இதற்கு ஒரு ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை ஸ்பூன் சீரகத்தூள் சேர்க்கவும். இப்போது நீங்கள் அதை தினமும் உட்கொள்ளலாம். தினமும் காலையில் சீரகத்தைப் பொடி செய்து தேனுடன் சாப்பிட்டு வந்தால் செரிமானம் சீராகும். இது குடலையும் சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும்.

Pic Courtesy: Freepik

Read Next

Jaggery Benefits: சீனிக்கு பதில் வெல்லத்தைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

Disclaimer

குறிச்சொற்கள்