உடற்பயிற்சி செய்வதால் உடல்நல பிரச்சனைகள் மட்டுமல்ல இந்த பிரச்சனையும் வராது

  • SHARE
  • FOLLOW
உடற்பயிற்சி செய்வதால் உடல்நல பிரச்சனைகள் மட்டுமல்ல இந்த பிரச்சனையும் வராது

உடற்பயிற்சிக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு

உடற்பயிற்சி செய்யும் போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உயிரணு மீளுருவாக்கம் மற்றும் பழுதுபார்க்க சருமத்திற்கு ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை வழங்குகிறது. கூடுதலாக, வியர்வை ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயல்பட்டு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அடைபட்ட துளைகளைக் குறைக்கிறது. மேலும், வழக்கமான உடல் செயல்பாடுகளின் மூலம் சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, சருமத்தை இளமையாக மற்றும் உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Lifting Benefits: வெயிட் லிஃப்டிங் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இது தவிர, உடற்பயிற்சியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். ஏனெனில், மன அழுத்தத்தின் காரணமாக முகப்பரு அல்லது அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆய்வு ஒன்றில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பொலிவான சருமத்தைப் பெறலாம். உடலில் கலோரிகளை எரிப்பது பதட்டத்தைத் தடுக்க உதவுகிறது. இதன் மூலம் தோலழற்சி, முகப்பரு, தடிப்புத் தோலழற்சியைத் தடுக்க முடியும். ஏனெனில், இது மன அழுத்தத்தால் ஏற்படக்கூடிய காரணங்களில் ஒன்றாகும். அதே சமயம், மன அழுத்தத்தால் முடி ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து முடி உதிர்வைத் தடுத்து, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சருமம், முடிக்கு உடற்பயிற்சி தரும் நன்மைகள்

உடற்பயிற்சி செய்வதால் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

சரும பிரச்சனைகள் நீங்க

ஆய்வு ஒன்றில், உடற்பயிற்சி செய்வது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் திறனை மேம்படுத்துகிறது எனக் கூறப்படுகிறது. இவை எதிர்காலத்தில் சரும பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. உடல் அதிக செயல்பாட்டில் இருப்பது, அதிகளவு நீரேற்றத்தைத் தருகிறது. இது சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

சருமத்தை சுத்தப்படுத்துவதற்கு

உடற்பயிற்சி செய்வது மேம்பட்ட இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இது சருமத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. வொர்க்அவுட்டின் போது சருமம் வழியாக பாயும் இரத்தம் மற்ற்ம் ஆக்ஸிஜன், உடலிலிருந்து நச்சுக்களை இழுக்க உதவுகிறது. இவை சருமத்தின் துளைகளை அடைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Stopping Exercise Effects: உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் உடலில் என்ன ஆகும் தெரியுமா?

செல்லுலார் பழுது

உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இது உடல் முழுவதும் சுழற்சியை மேம்படுத்தி, உடலில் உள்ள அனைத்து செல்களும் ஊட்டமளிக்கிறது. இது சேதமடைந்த செல்களை சரிசெய்யவும், புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், உடற்பயிற்சியானது வயது தொடர்பான உயிரணு பெருக்கத்தைத் தடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க

சருமம் மட்டுமல்லாமல், தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி சிறந்தது ஆகும். உடற்பயிற்சி செய்யும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், இரத்த அணுக்களில் அதிக ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இது முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடி நீளமாக வளர உதவுகிறது. மன அழுத்தம் காரணமாகவே முடி உதிர்தல் போன்ற முடி சார்ந்த பிரச்சனைகள் எழுகிறது. இந்நிலையில் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் முடி சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

இவ்வாறு உடற்பயிற்சி செய்வது சருமம் மற்றும் முடி ஆரோக்கியம் இரண்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Jogging Vs Exercise: ஜாகிங் vs உடற்பயிற்சி. இது ரெண்டுல எது பெஸ்ட்டா இருக்கும்?

Image Source: Freepik

Read Next

Stopping Exercise Effects: உடற்பயிற்சி செய்வதை நிறுத்தினால் உடலில் என்ன ஆகும் தெரியுமா?

Disclaimer