Empty stomach Juice: ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உணவு முறை என்பது மிக முக்கியம். பொதுவாக உடல்நலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவர்கள் பரிந்துரைப்பது உடல் பழங்களை சாப்பிடுங்கள், பழச்சாறுகளை குடியுங்கள் என்பதுதான். ஆனால் எதற்கும் நேரம் காலம் என்பது இருக்கிறது. பழச்சாறுகளையும் நேரம் பொறுத்து தான் குடிக்க வேண்டும்.
தவறான உணவுப் பழக்கங்களால் பல பாதிப்பு ஏற்படும். குறிப்பாக கோடைக்காலத்தில் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். கோடைக் காலத்தில் பழச்சாறு குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது உடலுக்கு நல்லதா என்பது குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆயுர்வேதத்தின்படி வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா என்பது குறித்து பார்க்கலாம்.
ஆயுர்வேதத்தின்படி வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பது நல்லதா? கெட்டதா?
இதுகுறித்து மருத்துவர் ஷ்ரே ஷர்மா கூறுகையில், செரிமான பிரச்சனை தொடர்பாக பல நோயாளிகள் தன்னிடம் வருகிறார்கள். அவர்களிடம் உணவுமுறை குறித்து விசாரிக்கையில் தங்களது உணவுமுறை ஆரோக்கியமாக இருப்பதாகவும், தங்களது நாளை பழச்சாறுடன் தொடங்குவதாகவும் கூறுகிறார்கள்.
உண்மையில் பழச்சாறை வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் வயிறு தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும். காலையில் பழச்சாறு குடிப்பதற்குப் பதிலாக, பழங்களை நன்றாகக் கழுவிய பிறகே சாப்பிடலாம். ஆப்பிள், சப்போட்டா போன்ற பழங்களை தோல்களுடன் சாப்பிடலாம். இது உடலுக்கு ஊட்டச்சத்தை அளித்து ஆற்றலோடு வைத்திருக்கும்.
வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
ஆயுர்வேதத்தின்படி வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பது தவறு. இது உடலில் இருக்கும் மூன்று தோஷங்களான வாத, பித்த, தோஷ போன்றவைகளை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் சாறு உட்கொண்டால் அது செரிமான அமைப்பை பலவீனப்படுத்தும். எனவே காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
உடல் வலிமை அல்லது டயட் முறைப்படி நீங்கள் ஜூஸ் குடிக்க விரும்பினால் முறையாக நிபுணரின் ஆலோசனைப் பெற்று இதை குடிப்பது நல்லது.
வெறும் வயிற்றில் சாறு குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோய் உருவாக இதுவும் காரணமாக இருக்கலாம்.
வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு தேவையான பிற சத்துக்களின் குறைபாடு பிரச்சனை ஏற்படலாம். காரணம் பழற்றில் நார்ச்சத்து இருக்காது. இதனால்பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image Source: FreePik