Climbing stairs benefits for weight loss: இன்றைய மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, உடல் எடை அதிகமாகி நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்டவற்றைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த நாள்பட்ட நோய்களைத் தவிர்க்க உடல் எடையைக் குறைப்பது மிகவும் அவசியமாகும். உடல் எடையைக் குறைக்க பல வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக உடல் ரீதியான செயல்பாடுகளின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
அதே சமயம், உடற்பயிற்சி, சீரான வாழ்க்கை முறை, நிம்மதியான தூக்கம் மற்றும் உணவுக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் உதவியுடன் உடல் எடையைக் குறைக்க முடியும். இது தவிர, படிகளில் ஏறுவது உடல் எடை குறைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது தெரியுமா? ஆம். உண்மையில் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வழக்கமான உடற்பயிற்சியாக படிக்கட்டுகளில் ஏறுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். ஏனெனில், சமதளத்தில் நடப்பதை விட படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் பயனுள்ளதாக அமையும். படி ஏறுவது உடலில் உள்ள அதிக கலோரிகளைக் குறைக்க உதவுகிறது. இதில் உடல் எடை குறைய படிகட்டுகளில் ஏறுவது எவ்வாறு உதவுகிறது என்பதைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips : இதை செய்தால் போதும் வெறும் 21 நாளில் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்!
படிகட்டு ஏறுவதால் உடல் எடை குறையுமா?
உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்கள் அனைவருமே, ஒரு நாளைக்கு உடலில் கரைக்கப்பட்ட கலோரிகளின் அளவை தெரிந்து கொள்வது அவசியமாகும். நம் உடல் செலவழிக்கும் ஒட்டுமொத்த ஆற்றல் செலவானது, அவர்களது எடையைப் பொறுத்ததாகும். அதன் படி, ஆராய்ச்சி ஒன்றில் சமதள தரையில் நடப்பதை விட, படிக்கட்டுகளில் ஏறும் போது உடலின் கலோரிகள் 20 மடங்கு அதிகமாக எரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. படிக்கட்டுகளில் இறங்கும் போதும், தசைகள் உடலை மெதுவாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இது ஐந்து மடங்கு அதிகமாக கலோரிகளை எரிப்பதாகக் கூறப்படுகிறது.
உடல் எடை குறைய படிகட்டு ஏறுவதற்கான குறிப்புகள்
பெரும்பாலும் உடல் எடையைக் குறைக்க ஆரம்பத்திலேயே நாம் அதிக முயற்சி செய்வோம். அவ்வாறே, பலரும் எடை குறைய முயற்சிப்பவர்கள் ஒரே நாளில் 100 முதல் 200 வரை பயிற்சி செய்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான ஒன்று. தொடக்கத்தில் 20-20 படிகளுடன் படிகட்டுகளில் ஏறத் தொடங்க வேண்டும். அதன் பிறகு நேரத்தைப் பொறுத்து 30, 40 என எடுத்துக் கொள்ளலாம்.
படிகட்டுகளில் ஏறும் போது ஒரு நேரத்தில் இரு படிகட்டுகளில் ஏறுவதையும், கீழிறங்கும் போது ஒவ்வொரு படிகட்டுகளில் செல்வதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதே சமயம், படிகட்டுகளுக்கு இடையில் அதிக இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும். இதன் மூலம் விழும் பயத்தைத் தவிர்க்க முடியும். இந்த உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தொப்பயையும் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!
மேலும் சமதளத்தில் நாம் நடக்கும் போது உடல் எடை குறைவாக இருக்கும். ஆனால், படிகளில் ஏறும் போது உடலில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்படுகிறது. எனவே படிகளில் ஏறுவதும், இறங்குவதும் உடல் எடையைக் குறைப்பதில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனினும், இதைத் தவிர உடல் எடையைக் குறைக்க பலவிதமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எப்போது செய்வது?
படிகட்டுகளில் ஏறி, இறங்குவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க கலோரி பற்றாக்குறை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. இது குறைந்த கலோரிகளைச் சாப்பிடுவதன் மூலமும் மற்றும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும், அதிக கலோரிகளை எரிப்பதன் மூலமும் உடல் எடை குறைவது கணக்கிடப்படுகிறது. அதன் படி, தினந்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் படிகட்டுகளில் ஏறுவதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என கூறப்படுகிறது.
இவ்வாறு எளிதான முறையில் உடல் எடையைக் குறைக்க படிகட்டுகளில் ஏறி, இறங்கி பயிற்சி செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Climbing Stairs: படிகட்டு ஏறுவதில் உடல் எடையைக் குறைக்கலாமா? நிபுணர் தரும் விளக்கம்
Image Source: Freepik