$
Normal Delivery Tips: கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உண்மையில், தற்போது பெரும்பாலான பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், அது அவர்களின் கர்ப்பத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
சொல்லப்போனால், வீட்டில் தயாரிக்கும் உணவை விட, பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்களே அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது. அதேசமயம், இதுபோன்ற விஷயங்கள் குழந்தையின் வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கிறது. ஒரு குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், அவரது மன-உடல் வளர்ச்சி நின்றுவிடும்.
பல நேரங்களில், சரியான ஊட்டச்சத்து இல்லாததால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நிரந்தர உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம். அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது சுகப் பிரசவத்திற்கு வழிவகுக்கும்.
சில பெண்கள் பிரசவத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு படிகட்டுகளில் ஏறவும் இறங்கவும் செய்வார்கள். இது பிரசவத்திற்கு உதவுமா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
படிக்கட்டுகளில் ஏறுவது நார்மல் டெலிவரிக்கு உதவுமா?
கர்ப்ப காலத்தில் படிக்கட்டுகளில் ஏறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இதுகுறித்து து தில்லியில் உள்ள மதர்ஸ் லேப் ஐவிஎஃப் மையத்தின் மகளிர் மருத்துவ இயக்குநர் மற்றும் ஐவிஎஃப் நிபுணரான டாக்டர் ஷோபா குப்தா கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
கர்ப்பத்தின் ஒன்பதாவது மாதத்தில் படிகட்டை பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. குறிப்பாக, ஒன்பதாவது மாதத்தை கடக்கும் பெண்களுக்கு படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் நல்லது.

இருப்பினும், அவர்களுக்கு எந்த விதமான உடல் பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், கர்ப்பிணிகள் சாதாரண மனிதர்களைப் போல் படிக்கட்டுகளில் வேகமாக நடக்கக் கூடாது. கைப்பிடி ஆதரவோடு மெதுவாக படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போது பாதுகாப்பு மிக முக்கியம். டாக்டர் ஷோபா குப்தாவும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்துகிறார். அவர் கூறுகையில், "தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நார்மல் டெலிவரிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
நடைபயிற்சி போன்ற லேசான உடற்பயிற்சி கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த வகையான உடற்பயிற்சிகளையும் செய்யும்போது அவசரப்படக்கூடாது. உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் நீங்கும். ஆனால் முறையான மருத்துவர் ஆலோசனை மிக முக்கியம்.
கர்ப்ப காலத்தில் என்ன மாதிரியான செயல்களைச் செய்யக்கூடாது
கர்ப்ப காலத்தில், பெண்கள் பல வகையான உடல் செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
ஒரே நேரத்தில் பல படிக்கட்டுகளில் ஏறுவதைத் தவிர்க்கவும்.
வேகமாக படிகளில் ஏறக் கூடாது
தீவிர உடற்பயிற்சிகள் மற்றும் கனரக பொருட்களை தூக்க கூடாது.
உடற்பயிற்சி செய்யும் போது உங்களுக்கு அசௌகரியம், உடல் வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றை உணர்ந்தால், உடனடியாக ஓய்வெடுக்கவும்.
அதேபோல் உங்களுக்கு ஏதேனும் அசௌகரிய உணர்வோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையோ இருந்தால் இந்த பயிற்சிகள் செய்வதற்கு முன் மருத்துவரை முறையாக அணுகுவது நல்லது.
Image Source: FreePik