Expert

Climbing Stairs: படிகட்டு ஏறுவதில் உடல் எடையைக் குறைக்கலாமா? நிபுணர் தரும் விளக்கம்

  • SHARE
  • FOLLOW
Climbing Stairs: படிகட்டு ஏறுவதில் உடல் எடையைக் குறைக்கலாமா? நிபுணர் தரும் விளக்கம்

பின்னர் தங்களது வழக்கமான நிலைக்குத் திரும்பி விடுவர். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும், நீண்ட நாள்கள் தொடர்ந்து பயிற்சி செய்யவும் படிகட்டுகளில் ஏறி, இறங்குவதை முயற்சிக்கலாம். இதன் மூலம் மட்டும் உடல் எடையைக் குறைக்க முடியாது. உடல் தோற்றத்தையும் பராமரிக்கலாம். இதில் உடல் எடையைக் குறைக்க படிகட்டுகள் எவ்வாறு உதவும் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Strawberries for Weight Loss: உடல் எடையை ஈஸியா குறைக்க ஸ்ட்ராபெர்ரியை இப்படி சாப்பிடுங்க!

ஏன் படிகட்டு ஏறுவது உடல் எடை இழப்புக்கு உதவும்?

உடற்பயிற்சி மாடல் Nicoletta Coca அவர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் படிகட்டுகளில் ஏறுவதன் மூலம் உடலில் உள்ள கூடுதல் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இவ்வாறு ஏறுவதும், இறங்குவதுடம் உடற்தகுதிக்கு ஏற்றதாகும். எடையைக் குறைக்க குறைந்த படிக்கட்டுகளை கார்டியோ உடற்பயிற்சியாக மாற்றலாம்.நிபுணர்களின் கூற்றுப்படி, படிகட்டுகளில் ஏறும் போதும் இறங்கும் போதும் உடல் வியர்க்கிறது. இது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

படிகட்டுகள் ஏறும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

நிபுணர்களின் கூற்றுப்படி, படிகட்டுகளில் ஏறி, இறங்கி உடல் எடை குறைய முயற்சிப்பவர்கள் ஒரே நாளில் 100 முத 200 முறை பயிற்சி செய்கின்றனர். ஆனால் இது தவறு. 20-20 படிகளுடன் படிகட்டுகளில் ஏறத் தொடங்க வேண்டும். பின் நேரத்தைப் பொறுத்து 30, 40 என எடுத்துக் கொள்ளலாம்.

படிகட்டுகளில் ஏறும் போது ஒரு நேரத்தில் இரண்டு படிகட்டுகளில் ஏறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கீழிறங்கும் போது ஒவ்வொரு படிகட்டுகளில் செல்லலாம். மேலும் படிகட்டுகளில் அதிக இடைவெளி இருக்கக் கூடாது. இதனால் விழும் பயத்தைத் தவிர்க்கலாம். இந்த உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாம, பெரிய தொப்பையையும் குறைக்கலாம்.

எடை இழப்புக்கான நேரம்?

படிகட்டுகளில் ஏறி, இறங்குவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க கலோரி பற்றாக்குறை இருப்பது அவசியமாகிறது. இது குறைந்த கலோரிகளைச் சாப்பிடுவதன் மூலமும், உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிப்பதன் மூலமும் கணக்கிடப்படுகிறது. தோராயமாக 500 கிராம் எடையைக் குறைக்க, 3,500 கலோரிகளைக் குறைக்க வேண்டும். இதில் தினந்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் படிகட்டுகளில் ஏறுவதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Spinach For Weight Loss: உடல் எடையைக் குறைக்க கீரையை இப்படி சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

Strawberries for Weight Loss: உடல் எடையை ஈஸியா குறைக்க ஸ்ட்ராபெர்ரியை இப்படி சாப்பிடுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்