$
Ways to use rosemary for hair growth: யாருக்குத்தான் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் பிடிக்காது. இன்றைய வாழ்க்கைமுறை காரணமாக நாம் பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்கிறோம். குறிப்பாக, தலைமுடி உதிர்வு பிரச்சினை. முடி உதிர்வை ரோஸ்மேரி டீ குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், ரோஸ்மேரி டீ உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, முடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உதவும்.
ரோஸ்மேரி டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நம் தலைமுடிக்கு பல வழிகளில் பயனளிக்கும். கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க ரோஸ்மேரி டீயை எப்படி பயன்படுத்தலாம் என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். மேலும், தொகுப்பில் ரோஸ்மேரி டீயின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!
முடிக்கு ரோஸ்மேரி டீயின் நன்மைகள்

- முடியின் நீளத்தை அதிகரிக்க உதவுகிறது.
- முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்கிறது.
- முடியை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
- உச்சந்தலையை ஆரோக்கியமாக வைப்பதுடன், இறந்த சருமத்தை உயிரூட்டுகிறது.
- பொடுகு மற்றும் உச்சந்தலை அலர்ஜியை நீக்குகிறது.
- இயற்கையாகவே வெள்ளை முடியை கருப்பாக மாற்றுகிறது.
முடிக்கு ரோஸ்மேரி டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரை ஊற்றி அதில் ஒரு கொத்து ரோஸ்மேரி இலைகளை சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர், பாத்திரத்தை மூடியவாறு வைத்து ஆற விடவும். தண்ணீர் ஆறியதும் இதை தலைக்கு பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Care Tips: பார்லருக்கு செல்லாமல் வீட்டிலேயே நரைமுடியை கறுப்பாக்கலாம்!
ரோஸ்மேரி டீயை முடிக்கு எப்படி பயன்படுத்துவது?

ரோஸ்மேரி டீயை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, குளித்த பிறகு உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் ஸ்ப்ரே செய்யவும். அதன் பிறகு முடியை இயற்கையாக உலர வைக்கவும்.
இல்லையெனில், குளித்த பிறகு ரோஸ்மேரி டீயைப் பயன்படுத்தி தலைமுடியைக் கழுவலாம். பின்னர் உங்கள் தலையை வெறும் தண்ணீர் ஊற்றி கழுவவும்.
ரோஸ்மேரி டீயை உங்கள் ஹேர் ஆயிலில் கலந்து, தலைமுடியில் தடவி மசாஜ் செய்யலாம். இதுவும் முடிக்கு அபரிமிதமான நன்மைகளை அளிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : தேங்காய் பாலை தலை முடிக்கு இப்படி பயன்படுத்தி பாருங்கள்!
இந்த வழியில், ரோஸ்மேரி டீயை கூந்தலுக்கு தடவுவது பல பொதுவான முடி பிரச்சனைகளை அகற்ற உதவும். வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால் முடிக்கு அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
Pic Courtesy: Freepik