$
தேங்காய் பால் முடியை நீளமாகவும், உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். தேங்காய் பால் முடி வளர்ச்சிக்கு பெரிதளவு உதவுகிறது. அதேபோல் தேங்காய் பால் ஹேர் பேக்குகள் உங்கள் கூந்தலை வலுவாக வைக்க பெருமளவு உதவியாக இருக்கும். இதை எப்படி பயன்படுத்துவது, இதன் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.
தேங்காய் பாலினால் முடிக்கு கிடைக்கும் நன்மைகள்
சுற்றுச்சூழல் மாசு, தவறான உணவுப் பழக்கம், ஊட்டச் சத்து குறைபாடு, வயது முதிர்வு, முடிக்கான கவனிப்பு இல்லாதது என பல காரணங்களால் பலர் முடி தொடர்பான பிரச்சனைகளில் அவதிப்படுகின்றனர். நமது வயது வெளிப்பாடு, இடத்திற்கு தேவையான லுக் என அனைத்தையும் வெளிகாண்பிப்பது நமது தலை முடி தான். தலைமுடியை மட்டும் சரியான நேரத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருமுறை ஒரு பிரச்சனையை தலைமுடி சந்தித்து விட்டால் அதை மீட்டெடுக்க மிக கடுமையாக பாடுபட வேண்டும்.
இதையும் படிங்க: பொடுகை விரட்ட வீட்டிலிருக்கும் எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
முடி பராமரிப்பு வழிமுறை
முடி உதிர்தல், நரைத்தல், மெலிதல், வறட்சி, பொடுகு, எண்ணெய் பசை போன்ற பல பிரச்சனைகள் தலைமுடி சந்திக்கிறது. சந்தையில் பல முடி பராமரிப்பு பொருட்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் பலன் தருகிறதா என்றால் அது கேள்விக்குறிதான். எனவே நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே முடி பராமரிப்பை மேற்கொள்ளலாம். இதில் தேங்காய் பால் என்பது பிரதானமான ஒன்று.

பொதுவாகவே தேங்காய் முடி தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. இதில் தேங்காய் பாலும் குறிப்பிடத்தக்க ஒன்று. தேங்காய் பாலில் வைட்டமின் ஏ, சி, ஈ, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் இயற்கை புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தேங்காய் பால் முடியை நீளமாகவும், உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
தேங்காய் பால் நன்மைகள்
ஒரு கப் தேங்காய் பாலை எடுத்து சூடாக்கவும். அவை சூடு ஆறிய பிறகு.. அதை உச்சந்தலையிலும் கூந்தலிலும் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் ஷவர் கேப் மூலம் முடியை மூடவும். . ஒரு மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பூவைக் கொண்டு குளிக்கவும். வாரம் ஒருமுறை இப்படி செய்து வந்தால்.. கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போலவும் மாறும். முடியின் வேர் வலுவடையும். அதேபோல் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
தேங்காய் பாலும், தயிரும்
5 டீஸ்பூன் தேங்காய் பாலும், தயிர் 1 டீஸ்பூனும், கால் தேக்கரண்டி கற்பூரவள்ளி எடுத்துக் கொள்ளவும்.
இந்த மூன்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கலக்கவும். வேர்கள் முதல் முனைகள் வரை இதைப் பயன்படுத்துங்கள். ஒரு மணி நேரம் உலர விடவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் முடியை பளபளப்பாக்கும். அதேபோல் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். பொடுகு, பேன், அரிப்பு போன்ற பிரச்சனைகளும் இதன்மூலம் தீரும்.
தேங்காய் பால், ஆலிவ் எண்ணெய்
4 டீஸ்பூன் தேங்காய் பால், 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 1 டீஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து இரண்டு நிமிடம் சூடாக்கவும். சூடானதும் தேன் சேர்க்கவும். இந்த கலவையை உச்சந்தலையிலும் முடியிலும் தடவி மசாஜ் செய்யவும். ஷவர் கேப் மூலம் முடியை மூடி வைக்கவும். . பின்னர் ஷாம்பு கொண்டு கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கூந்தல் மென்மையாக மாறும்.

தேங்காய் பால், தேன்
4 டீஸ்பூன் தேங்காய் பால், தேன் 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் மற்றும் தேன் கலக்கவும். வேர்கள் முதல் முனைகள் வரை தடவி மசாஜ் செய்யவும். அதன் பிறகு.. ஷவர் கேப் மூலம் தலைமுடியை மூடவும். இரண்டு மணி நேரம் கழித்து.. லேசான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். நல்ல பலனைப் பெற வாரத்திற்கு ஒருமுறை இந்த பேக்கை முயற்சிக்கவும்.
அடர்த்தியாக முடி வளர என்ன செய்வது?
ஒரு கப் தேங்காய் பாலை இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைத்து, காலையில் வேர் முதல் நுனி வரை தடவவும். மெதுவாக மசாஜ் செய்து அரை மணி நேரம் விட்டு குளிக்கவும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும், நீளமான கூந்தலையும் பெறுவீர்கள்.
இதையும் படிங்க: இயற்கையான முறையில் நரை முடியைக் கருப்பாக்க வேண்டுமா? இந்த 5 வழிகள் உங்களுக்கு உதவலாம்
முடி வளர்ச்சிக்கு இதுபோன்ற பல தகவலை நாம் தொகுத்து வழங்கியுள்ளோம். இருப்பினும் எந்த ஒரு பிரச்சனையின் தீவிரத்தையும் அறிந்து உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik