Mental Health: ஒருவருக்கு உடல்நிலை ஆரோக்கியம் போல் மன ஆரோக்கியம் என்பதும் மிக முக்கியம். உடல் உறுப்புகளில் பிரச்சனை வந்தால் உடனே தீர்வு காண விரும்பும் பலரும் அதே அளவு அக்கறையை மன ஆரோக்கியத்திற்கு செலுத்துவதில்லை. உடல் உறுப்பு பாதிப்பு மட்டுமல்ல மனநல பாதிப்பும் உயிருக்கே தீங்குவிளைவுக்கும் விஷயமாகும்.
அதிக மன அழுத்தம் காரணமாக, மக்கள் திடீரென பீதி தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள், அதில் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்குகிறது, சுவாசம் குறுகியதாகிறது, மேலும் உடலைக் கட்டுப்படுத்துவதும் கடினமாகிறது.
முக்கிய கட்டுரைகள்
இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த முயற்சித்தால் இதை சரிசெய்யலாம். இதற்கான வழிகளும் உள்ளது. இதுகுறித்து மனநல மருத்துவர் டெய்லர் ப்ரோன் தனது இன்ஸ்டா பதிவில் பதிவிட்டு தகவலை இப்போது விரிவாக பார்க்கலாம்.
மன பதட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி? (how to control mental health in tamil)

மன பதட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
ஆழ்ந்து மூச்சு விடுங்கள்
உங்கள் மன பதட்டத்தை கட்டுப்படுத்த ஆழ்ந்து மூச்சுவிடுதல் என்பது பெரிய உதவியாக இருக்கும். உங்களுக்கு இந்த நிலை ஏற்படும் போது மூச்சுவிடுவது என்பதில் சிரமம் ஏற்படும், இதை சரிசெய்ய தொடர்ந்து ஆழ்ந்து மூச்சுவிட முயற்சி செய்யுங்கள். ஆழமாக சுவாசிப்பது மன அழுத்தத்தைக் குறைத்து, உங்களை நன்றாக உணர வைக்கும். ஆழ்ந்த மூச்சை எடுத்து 4 வினாடிகள் பிடித்து, பின்னர் 8 விநாடிகள் மூச்சை வெளியே விடவும்.
புளிப்பாக ஏதாவது சாப்பிடுங்கள்
உங்களுக்கு மன அழுத்தம் அல்லது பீதி உணர்வு ஏற்படும் போது புளிப்பாக ஏதாவது சாப்பிடுங்கள். புளிப்பு பொருட்களை சாப்பிடுவது உங்கள் கவனத்தை திசைதிருப்பும் அதோடு உங்கள் மன அழுத்தத்தை சமாளிக்க உதவும்.
குளிர்ந்த நீரை உங்கள் கைகளில் ஊற்றவும் அல்லது பனிக்கட்டை கையில் பிடிக்கவும்
கைகளில் பனிக்கட்டியை வைத்திருப்பதன் மூலம் பீதி தாக்குதல்களைத் தடுக்கலாம். இது உங்கள் கவனத்தை திசைதிருப்பும், பனிக்கட்டி குளிருக்கு ஏற்ப உங்கள் கைகள் திசைமாறும் அதேநேரத்தில் உங்கள் கவனமும் குறையும். அதேபோல் குளிர்ந்த நீரை உங்கள் கைகளில் ஊற்றுவதும் உங்கள் கவனத்தை திசை திருப்ப உதவும். இது பதட்ட நிலையை சரிசெய்யும்.
தரையில் படுத்து ஆழ்ந்து மூச்சு விடுங்கள்
உங்களுக்கு பீதி ஏற்பட்டால் என்ன செய்வது என்று புரியவில்லை என்றால், அதே இடத்தில் தரையில் படுத்து ஆழமாக சுவாசிக்கத் தொடங்குங்கள். இது பேருதவியாக இருக்கும்.
5 முதல் 10 நிமிடம் ஜாக் செய்யவும்
மன பதட்ட தாக்குதல் ஏற்பட்டால் பீதி அடைய வேண்டாம். 5 முதல் 10 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடக்கவும் அல்லது ஜாக் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் பீதி தாக்குதல்கள் அதிகரிப்பதைத் தடுக்கலாம் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
குளிர்ந்த நீரில் குளிக்கவும்
மன பதட்டம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். குளிர்ந்த நீரில் குளிப்பதால் சிலருக்கு பதட்ட உணர்வு குறைவதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனக் கவலையின் பொதுவான அறிகுறிகள்

பதட்டமான உணர்வு ஏற்படும்
இதயம் படபடக்கும்
வேகமான சுவாசம் வரும்
தேவையில்லாமல் அதிக வியர்வை வரும்
உடலில் மிகவும் பலவீனமான உர்வு வரும்
தூக்கமின்மை வரும்
இதையும் படிங்க: Bigg Boss Tamil: பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க இதுக்கு ரெடியா இருக்கனும்.. சும்மா இல்லா பாஸ்!
பல நேரங்களில் மக்கள் பீதி தாக்குதலையும் மாரடைப்பையும் குழப்பிக் கொள்கிறார்கள். இரண்டுக்கும் இடையேயான அறிகுறிகளை அடையாளம் காண்பது முக்கியம். மேலும் பிரச்சனை தீவிரமாகிவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
Pic Courtesy: FreePik