2025 புத்தாண்டில் இந்த நல்ல பழக்கங்களை ஆரம்பிக்கலாமே! 1 ரூபாய் செலவு இல்ல..

2025ம் புத்தாண்டில் என்னென்ன புதிய பழக்கங்களை தொடங்கினால் இனி வரும் காலத்தை ஆரோக்கியமாக வாழலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
2025 புத்தாண்டில் இந்த நல்ல பழக்கங்களை ஆரம்பிக்கலாமே! 1 ரூபாய் செலவு இல்ல..

2025ம் புத்தாண்டு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டும் ஒரு புதிய நல்ல பழக்கத்தை தொடங்க வேண்டியது முக்கியம். இதற்காக பலர் பல சிந்தனைகளில் இருப்பார்கள், இனி இந்த குழப்பம் வேண்டாம். உங்களுக்கான சிறந்த ஆலோசனைகளை நாங்கள் வழங்குகிறோம். ஆரோக்கியமாகவும், நோய்களிலிருந்து விடுபடவும், வாழ்க்கைமுறையில் சிறிது மாற்றம் அவசியம்.

தற்போது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் தொற்று நோய்களின் ஆபத்துகள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும், ஒரு புதிய வகை வைரஸ் தொடர்பான செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. உணவுக் கலப்படம், ரசாயனங்கள் பயன்படுத்திய காய்கறிகள் பயன்படுத்துதல் மற்றும் காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் மக்கள் அதிகமாக நோய்வாய்ப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாழ்நாளில் மறதி என்பதே வராமல் தடுக்க இதை மட்டும் மறக்காம பண்ணுங்க!

உணவே மருந்து என்ற காலம் முடிந்து தற்போது குறிப்பிட்ட உணவுகள் சாப்பிட்டதால்தான் மருந்து சாப்பிட வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. உணவுமுறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. நமது பெற்றோர்கள் எந்த உணவுகளை இயல்பாக சாப்பிட்டார்களோ, இப்போது அதைதான் ஆரோக்கியமான உணவு என தேடித்தேடி வாங்கி சாப்பிட வேண்டிய நிலை வந்துவிட்டது.

2025ம் ஆண்டில் புதிதாக தொடங்க வேண்டிய நல்ல பழக்கங்கள்

body-health-tips

அதிகாலையில் எழுதல்

ஆரோக்கியமாக இருக்க அதிகாலையில் எழுந்திருப்பது மிகவும் அவசியம். காலையில் எழுந்திருப்பது கார்டிசோலின் அளவை மேம்படுத்துகிறது மற்றும் சர்க்காடியன் தாளத்தை சமநிலைப்படுத்துகிறது. இதனால் நோய்களின் அபாயமும் குறைக்கிறது. ஆரோக்கியமாக இருக்க, காலையில் கண்களைத் திறந்தவுடன் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீருடன் நாளைத் தொடங்குங்கள்

செம்பு பாத்திரத்தில் 300 மில்லி தண்ணீரைக் குடித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள். செம்பு பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மலம் வழியாக எளிதில் வெளியேற்றப்பட்டு, உடல் நச்சுத்தன்மை நீங்குகிறது. அதேபோல் வெறும் வயிற்றில் செம்பு பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரை குடிப்பதால் செரிமானம் மேம்படும்.

புரதம் நிறைந்த காலை உணவு

காலை உணவை எந்த சூழ்நிலையிலும் தவிர்க்கக் கூடாது. உயர் புரத பொருட்களை காலை உணவில் உண்ணுங்கள். அதிக புரதச்சத்து கொண்ட காலை உணவை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது வயிறுக்கு நிறைந்த உணர்வை அளிக்கிறது, இதன்மூல் உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம்.

கார்டியோ பயிற்சி முக்கியம்

தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது கார்டியோ உடற்பயிற்சி செய்யுங்கள். தினமும் கார்டியோ செய்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது உடல் எடையை குறைக்கவும், சருமத்தை பளபளப்பாகவும், நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

உணவை உண்ணும் முன் மூன்று முறை ஆழமாக சுவாசிக்கவும்

உணவு உண்ணும் முன் ஆழ்ந்து மூச்சை எடுத்துக்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, உணவை உண்ணும் முன் மூன்று முறை ஆழமாக சுவாசிப்பது கார்டிசோலைக் குறைக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

சாப்பிட்ட பிறகு இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கவும்

செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்தவும், உணவுக்குப் பிறகு இலவங்கப்பட்டை தண்ணீரை குடிக்கவும். இதை செய்ய, ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியை கலக்கவும்.

சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கவும்

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உணவு சாப்பிட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இது தவிர, வாயு, அஜீரணம் மற்றும் வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.

உணவுக்கு இடையில் 12-14 மணிநேர இடைவெளி

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளின் முதல் மற்றும் கடைசி உணவுக்கு இடையில் 12 முதல் 14 மணிநேர இடைவெளியை கடைபிடியுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் உள்ள நச்சு நீக்கம் மற்றும் உணவு செரிமானம் எளிதாகிறது.

அதிகம் படித்தவை: உயரமான தலையணை வைத்து தூங்கினால் இந்த நோய் வருமா? எத்தனை தலையணை வைத்து தூங்கலாம்?

அன்புக்குரியவர்களுடன் பேசுங்கள்

பெரும்பாலானோர் வீட்டுக்கு வந்த பிறகும் மொபைலில் அதிக நேரம் செலவிடுவார்கள். அதிகமாக மொபைலை பயன்படுத்துவதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே, அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு, உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பேசுங்கள். இது ஆக்ஸிடாஸின் சுரப்பை மேம்படுத்துகிறது, இதன்மூலம் புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.

pic courtesy: freepik

Read Next

Bone Health: எலும்புகளை வலிமையாக்கும் கால்சியல் நிறைந்த உணவுகள் இங்கே..

Disclaimer

குறிச்சொற்கள்