Doctor Verified

பொது இடங்களில் வாயு வெளியேற்றம்.. சங்கடத்திற்கு தள்ளும் சூழல்.. மருத்துவர் கூறும் சுலபமான தீர்வு இங்கே.!

பொது இடங்களில் அதிக வாயு வெளியேறுவது (Farting) சங்கடமாக இருக்கிறதா? மருத்துவர் கூறும் இந்த இயற்கை வழிகளை பின்பற்றுங்கள். எல்லாம் விரைவில் குணமடையும்.
  • SHARE
  • FOLLOW
பொது இடங்களில் வாயு வெளியேற்றம்.. சங்கடத்திற்கு தள்ளும் சூழல்.. மருத்துவர் கூறும் சுலபமான தீர்வு இங்கே.!


வாயு வெளியேற்றம் என்பது ஒரு இயற்கையான உடல் செயல்பாடு. ஆனால், பொது இடங்களில் அதிகமாக வாயு வெளியேறுவது பெரும்பாலும் சங்கடத்துக்கும் சிரமத்துக்கும் வழிவகுக்கிறது. இந்த பிரச்சினைக்கு எளிய இயற்கை தீர்வுகளை வழங்கியுள்ளார் இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் விளக்கியுள்ளார்.

வாயு தொல்லையை கட்டுப்படுத்தும் வழி..

டாக்டர் சல்ஹாப் கூறியதாவது “நீங்கள் பொது இடங்களில் இருக்கும்போது அதிக வாயுத் தொல்லை ஏற்பட்டால், மிளகுகீரை டீ குடிப்பது உடனடி நிவாரணம் தரும். இது வயிற்று வலி, வாயுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் அதிக வாயுவை குறைக்க உதவும்” எனத் தெரிவித்தார்.

artical  - 2025-08-30T113038.278

வாயுவின் வாசனை – குடல் நுண்ணுயிரின் ரகசியம்

வாயு வெளியேறுவது சங்கடமாக இருந்தாலும், அது குடல் ஆரோக்கியம் மற்றும் நுண்ணுயிர் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

* சல்பர் சேர்மங்கள் இருந்தால், அழுகிய முட்டை அல்லது பூண்டு வாசனை போல இருக்கும்.

* ஆவியாகும் அமின்கள் இருந்தால், மீன் அல்லது அம்மோனியா போன்ற வாசனை தெரியும்.

* குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் இருந்தால், இனிப்பு அல்லது பழம் போன்ற வாசனையாக இருக்கும்.

இதன் மூலம், நமது உணவுச் செரிமான நிலையும் குடல் நுண்ணுயிர் சமநிலையும் புரிந்துகொள்ள முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Bloated Stomach: மொத்த வாயுவை வெளியேற்றி உப்பிய வயிறு ஒல்லியா மாற்றலாம்- இதை பண்ணுங்க!

மருத்துவரின் எச்சரிக்கை

வீட்டில் சில இயற்கை முறைகள் பயனுள்ளதாக இருந்தாலும், தொடர்ந்து அதிக வாயுத் தொல்லை இருந்தால் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம் என்று டாக்டர் சல்ஹாப் எச்சரித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Dr. Joseph Salhab (@thestomachdoc)

இறுதியாக

வாயு பிரிதல் இயல்பானதுதான். ஆனால் அதனை புறக்கணிக்காமல், உணவு பழக்க வழக்கங்களில் சிறு மாற்றங்கள் செய்து, இயற்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. இது தொழில்முறை மருத்துவ ஆலோசனையை மாற்றுவதில்லை. உங்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தால், எப்போதும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

Read Next

கோதுமை மாவுடன் வெள்ளை எள் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்