கோதுமை மாவுடன் வெள்ளை எள் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Why you should mix white sesame with wheat flour: எள், குறிப்பாக வெள்ளை எள், இந்திய சமையலறையில் ஒரு முக்கிய உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் வெள்ளை எள்ளை கோதுமை மாவில் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கோதுமை மாவுடன் வெள்ளை எள் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


Health benefits of adding white sesame seeds to wheat flour: அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. இதில் முக்கியமானதாக அமைவது வெள்ளை எள் விதைகள் ஆகும். ஆயுர்வேதம் முதல் நவீன ஊட்டச்சத்து அறிவியல் வரை அனைத்திலும் வெள்ளை எள்ளின் நன்மைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் படி, வெள்ளை எள்ளில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இது எலும்புகள், தோல், இதயம் மற்றும் செரிமான அமைப்பு போன்றவற்றிற்கு நன்மை பயக்கும். ஆனால், இதை கோதுமை மாவில் சேர்த்து சாப்பிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம் அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய கோதுமை மாவில் வெள்ளை எள்ளைக் கலந்து ரொட்டி செய்தால், அது சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டிலும் சிறந்ததாக இருக்கும். குறிப்பாக குளிர்காலத்தில், வெள்ளை எள்ளுடன் ரொட்டி உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்க உதவும். மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதில் மேவார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஜெய்ப்பூரில் உள்ள பாபு நகரில் உள்ள இயற்கை மருத்துவ மருத்துவமனையின் யோகா, இயற்கை மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணருமான மூத்த மருத்துவர் டாக்டர் கிரண் குப்தா அவர்கள் கோதுமை மாவில் வெள்ளை எள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து குறிப்பிட்டுள்ளதைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Seeds for blood pressure: எகிறும் இரத்த அழுத்த அளவை குறைக்க நீங்க சாப்பிட வேண்டிய விதைகள் என்னென்ன தெரியுமா?

கோதுமை மாவில் வெள்ளை எள்ளை கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆயுர்வேதத்தில், எள் ஒரு 'சூப்பர்ஃபுட்' ஆகக் கருதப்படுகிறது. இவை உடலில் எலும்புகளை வலுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் வெள்ளை எள்ளை மாவில் கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க

ஆயுர்வேதத்தின் படி, எள் இயற்கையில் காரமானதாகும். குளிர்காலத்தில் மாவில் எள் கலந்து சாப்பிடுவது உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது சளி பிடிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இது குளிரால் ஏற்படும் மூட்டுவலி மற்றும் விறைப்பையும் குறைக்கிறது.

எடை கட்டுப்பாடு

வெள்ளை எள்ளில் உள்ள புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவுகிறது. இவை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தைக் குறைத்து, எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

வெள்ளை எள்ளில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் கூறுகள் நிறைந்துள்ளன. இவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தையும் சீரானதாக வைத்திருக்க உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்த

வெள்ளை எள்ளில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனை, வாயுவை நீக்கவும் உதவுகிறது. தினமும் எள் ரொட்டி சாப்பிட்டால், வயிறு சுத்தமாக இருக்கும். மேலும் இது வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்க உதவுகிறது.

இரத்தக் குறைபாட்டை நீக்க

வெள்ளை எள்ளில் உள்ள இரும்புச்சத்துக்கள் ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த சோகைக்கு பெரிதும் உதவுகிறது. எள்ளை மாவில் கலந்து சாப்பிடுவது இரத்த சோகையை குணப்படுத்தவும், உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ellu Laddu: மாதவிடாய் பிரச்சினையை நீக்கும் எள்ளு லட்டு... செய்வது எப்படி?

எலும்புகளை வலிமையாக்க

வெள்ளை எள் விதைகள் கால்சியம் நிறைந்த சிறந்த மூலமாகும். மேலும், தினமும் மாவில் எள் கலந்து சாப்பிடுவது எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது. குறிப்பாக, வயதான காலத்தில் மிகுந்த நன்மை பயக்கும். இதன் மூலம் எலும்பு பலவீனம்மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

வெள்ளை எள்ளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் சளி, காய்ச்சல் மற்றும் பருவகால தொற்றுகளைத் தடுக்கலாம்.

வெள்ளை எள்ளை கோதுமை மாவில் எப்படி கலப்பது?

1 கிலோ கோதுமை மாவில் சுமார் 100-150 கிராம் வெள்ளை எள்ளைக் கலந்து கொள்ளலாம். எள்ளை லேசாக வறுத்து அரைத்தால் சுவை மற்றும் செரிமானத்தை அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு 2-3 எள் ரொட்டி போதுமானதாக அமையும்.

குளிர்காலத்தில், காலையிலோ அல்லது மதிய உணவிலோ இதைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், கோடையில் பகலில் ஒரு ரொட்டியை மட்டும் சாப்பிட வேண்டும். ஏனெனில், எள்ளை அதிக அளவில் சாப்பிடுவது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். எனவே அதை சீரான அளவில் உட்கொள்ள வேண்டும்.

முடிவுரை

வெள்ளை எள்ளை கோதுமை மாவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிதான மற்றும் சுவையான வழியாக அமைகிறது. இது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு ஊட்டமளிக்கக் கூடியதாக அமைகிறது. மேலும் நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள், எள் ரொட்டியை அன்றாட உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்புக்கு கருப்பு எள் நல்லதா? நிபுணர்கள் பதில் இங்கே!

Image Source: Freepik

Read Next

PCOS, PCODக்கு உதவும் Top 5 ஆயுர்வேத உணவுகள் - நிபுணர் பரிந்துரை

Disclaimer