How to prevent memory loss : வயது அதிகரிக்க அதிகரிக்க, நமது உடல் ஆரோக்கியத்தை போலவே நினைவாற்றலும் பலவீனமடையத் தொடங்குகிறது. இதனால், நாம் பல விஷயங்களை மறந்துவிடுவோம். உடலில் ஊட்டச்சத்து இல்லாதது முதல் மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான சிந்தனை வரை பல காரணங்கள் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும், சிலர் டிமென்ஷியா காரணமாக ஞாபக மறதி பிரச்சனையையும் சந்திக்க நேரிடும்.
டிமென்ஷியா (Dementia) என்பது ஒரு மனநோய், இது பொதுவாக வயதானவர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் விஷயங்களை நினைவில் கொள்ளும் திறன், கவனம் செலுத்துதல் மற்றும் நியாபக சக்தி போன்றவை குறையத்துவங்கும். ஞாபக மறதி பிரச்சனைக்கு நமது அன்றாட வாழ்க்கை முறையும் காரணமாக இருக்கலாம். இவற்றை சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் எளிமையாக அதிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம் : நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
அதுமட்டும் அல்ல, இந்த எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் டிமென்ஷியா அல்லது நினைவாற்றல் இழப்பு பிரச்சனையையும் தடுக்கலாம். எய்ம்ஸ் நரம்பியல் நிபுணர் டாக்டர். பிரியங்கா செஹ்ராவத் (MD, DM- Neurology, AIIMS Delhi) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியாபக மறதியை அதிகரிப்பதற்கான 5 எளிய குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். இதை பின்பற்றுவதன் மூலம், வயதானாலும் உங்கள் நினைவாற்றல் பலவீனமடையாமல் அப்படியே இருக்கும். இதோ உங்களுக்கான வழிமுறைகள் -
ஞாபக மறதியை தடுக்க உதவும் 5 வழிகள்:

1. உங்கள் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சரியாக வைத்திருங்கள்.
2. உடலில் வைட்டமின் B12 குறைபாட்டை அனுமதிக்காதீர்கள். மேலும், தைராய்டு சுரப்பியை சாதாரணமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், வைட்டமின் பி12 குறைபாடு மற்றும் தைராய்டு இரண்டும் டிமென்ஷியா அல்லது ஞாபக மறதிக்கு வழிவகுக்கும். இவை நினைவாற்றல் இழப்புக்கான ஆபத்து காரணிகளாகக் கருதப்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம் : Vitamin B12 Deficiency: கவனிக்க வேண்டியவை இது தான்…
3. ஒரே நேரத்தில் பல பணிகள் (Multitask) செய்வதை தடுக்கவும். நீங்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யும்போது, உங்கள் மூளை எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் விஷயங்களை மறந்துவிடுகிறது.
4. மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். டிமென்ஷியா மற்றும் நாள்பட்ட நினைவாற்றல் இழப்பு போன்ற நிலைமைகளுக்கான முக்கிய ஆபத்து காரணிகளில் இது தொடர்புடையது. நீங்கள் எப்போதாவது மது உட்கொண்டால், மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…
5. தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் நிறைய நன்மைகளைப் பெறலாம். இது நினைவாற்றல் இழப்பிலிருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் கவனம் அதிகரித்து மனதைக் கூர்மைப்படுத்துகிறது.
Image Source: Freepik