வழக்கத்துக்கு மாறாக தமிழகத்தின் பல இடங்களில் குளிர்காலம் அதிகமாகவும் நீண்டதாகவும் இருந்தது. குளிர் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருந்ததோ ஆரம்பக்கட்ட வெயிலே அந்த அளவு அதிகமாக இருக்கிறது. திடீரென வெயில் காலம் உக்கிரமாக தொடங்கி இருப்பாதல் மக்கள் பலர் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
ஆரம்பமே உக்கிரமாகும் வெயில்
வெயில் காலத்தில் உடல் தொடர்பான பல பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோடை காலத்தில் பலர் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுகிறார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, தவறான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தில் முன்னெச்சரிக்கைகள் எடுக்காதது போன்றவை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: எடை குறைய தினமும் இத்தனை அடிகள் நடக்கனும்..
கோடை கால ஆரம்பத்தில் வரக்கூடிய நோய்கள்
உடலில் அதிகமாக அழுக்குகள் தேங்குவதும் கோடையில் நோய்வாய்ப்படுவதற்கு காரணமாக இருக்கலாம். சுகாதாரத்தை கடைபிடிக்காததால், உடல் தொற்று மற்றும் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. கோடை காலத்தில் பாக்டீரியா தொற்று, பூஞ்சை தொற்று, காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, ஃபுட் பாய்சன் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன. கோடையில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிய சுகாதார குறிப்புகள் உள்ளன.
கோடையில் வியர்வை வெளியேறுவதை தவிர்க்கவும்
- கோடை காலத்தில் அதிக வியர்வை பிரச்சனையை தவிர்க்க வேண்டும்.
- அதிக வியர்வையால் சருமத்தில் சிவப்பு வெடிப்பு, உஷ்ண வெடிப்பு மற்றும் தொற்று ஏற்படலாம்.
- வியர்வை காரணமாக உடல் துர்நாற்றம் தொடங்குகிறது. அரிப்பும் உணரப்படுகிறது.
- அதிக வியர்வை பிரச்சனையை தவிர்க்க, இறுக்கமான ஆடைகளை அணியாமல், பருத்தி ஆடைகளை தேர்வு செய்யவும்.
- அதிகமான தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தினசரி மறக்காமல் குளிக்கவும்
- நீங்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க விரும்பினால், தினமும் குளிக்கவும்.
- குளிப்பது நோய் மற்றும் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது.
- குளித்தால் வியர்வையால் வளரும் பாக்டீரியாக்கள் குறையும்.
- குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
- கோடையில் ஏற்படும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை குளித்தால் தவிர்க்கலாம்.
கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்
- பெரும்பாலான மக்கள் காலையில் குளித்துவிட்டு சாப்பிட்ட பிறகு மட்டும்தான் கைகளை கழுவுகிறார்கள். இதனால் பல நோய்கள் வருகிறது.
- அழுக்கு கைகளால் உணவு உண்பதால் உணவு விஷம் ஏற்படும்.
- உணவு விஷம் காரணமாக, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
- இதைத் தவிர்க்க ஒவ்வொரு முறையும் எதையும் சாப்பிடுவதற்கு முன் உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள்.
- கைகளை குறைந்தது 2 நிமிடங்களுக்கு சோப்புப்போட்டு கழுவ வேண்டும்.
கழிப்பறையை சுத்தமாக வைப்பது முக்கியம்
- கோடை காலத்தில் பெண்கள் UTI பிரச்சனை (சிறுநீர் பாதை தொற்று) சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.
- இந்த பிரச்சனை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
- இதைத் தவிர்க்க, அந்தரங்க உறுப்புகளின் தூய்மை, கழிவறை சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
- கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் ஃப்ளஷ் செய்யவும்.
- கழிப்பறை அழுக்காக உள்ளதா என சரிபார்க்கவும்.
- இது தவிர, கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை நன்கு சுத்தம் செய்யவும்.

மறக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்
- உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுப்பது மிக முக்கியம்.
- மறக்காமல் அவ்வப்போது தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
- குறிப்பாக கோடை காலத்தில். உடலில் இருக்கும் நச்சுப் பொருட்கள்தான் நோயை உண்டாக்குகின்றன.
- உடலில் இருந்து நச்சுகளை அகற்ற அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும்.
- எலுமிச்சை தண்ணீர், தேங்காய் தண்ணீர் மற்றும் காய்கறி சாறு போன்றவற்றையும் குடிக்கலாம்.
- உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றுவது முக்கியம், ஏனெனில் அவை ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும்.
- ஹார்மோன் சமநிலையின்மை நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான உணவுமுறை முக்கியம்
- கோடை காலத்தில் செரிமான அமைப்பைக் கெடுக்கும் உணவுகளை சாப்பிடக் கூடாது.
- குறிப்பாக எண்ணெயில் வறுத்த உணவு, அதிக காரம் நிறைந்த மசாலா உணவை சாப்பிடக் கூடாது.
- தயிர், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க: Excessive thirst: தண்ணீர் குடித்த பிறகும் தாகம் அடங்கவில்லையா? அப்போ இதுதான் காரணம்!
வெயில் நேரத்தில் தேவையில்லாமல் வெளியே செல்லக் கூடாது
வெயில் நேரத்தில் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம். வெயிலில் வெளியே செல்வதால் தான் உடலில் தோல் பிரச்சனை உட்பட பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படியே வெளியே செல்வதாக இருந்தால் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது.
கோடை காலத்தில் நோய்கள் வராமல் இருக்க, வியர்வையை தவிர்க்கவும், தினமும் குளிக்கவும், கை சுகாதாரத்தில் கவனம் செலுத்தவும், கழிப்பறை சுகாதாரத்தை கவனித்து, போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். அதோடு பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அவ்வப்போது குடிப்பது முக்கியம்.
pic courtesy: freepik