Tips to get pregnant: பணிச்சூழல், மன அழுத்தம், உடல் பருமன், மாதவிடாய் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் பெண்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும். குறிப்பாக குழந்தைக்கு முயற்சிக்கும் தம்பதிகளுக்கு உடலுறவு முதல் ஓவுலேஷனை டிராக் செய்வது வரை ஏராளமான அழுத்தங்கள் மற்றும் சந்தேகங்கள் ஏற்படுகின்றன.
மாதவிடாய் சுழற்சி ஏற்பட்ட 12வது நாளில் இருந்து 21 நாட்களுக்குள் கருமுட்டை வெளியேறும். இந்த நாட்களில் தொடர்ந்து உடலுறவு கொள்வது கருத்தரித்தலுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவரான நிவேதா சின்னராஜுலு.
குழந்தைப் பேறு வாய்ப்பை அதிகரிக்க உதவும் குறிப்புகள் என்னென்ன...
1. உடலுறவு:
குழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிக்கு உடலுறவு பற்றிய சந்தேகம் தான் முதலில் வரக்கூடும். தினந்தோறும் உடலுறவு கொள்ள வேண்டுமா?, ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்திற்கு ஒருமுறை உடலுறவு கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. மருத்துவரின் அறிவுரையின் படி, தினந்தோறும் அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உடலுறவு கொள்வது என்பது குழந்தைப்பேறுக்கான வாய்ப்பை அதிகரிக்க கூடும் என்கிறார். ஏனெனில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது ஓவுலேஷன் காலத்தை கணக்கிட்டு உறவு கொள்ளும் போது விந்தணுவின் தரம் குறையக்கூடும் என்றும், இதனால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் தள்ளிப்போகலாம் என்றும் விளக்கியுள்ளார்.
2. ஓவுலேஷன்:
மாதவிடாய் முடிந்தவுடன் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்ள வேண்டும். இதனால் கருவுறுதல் வாய்ப்பு மேலும் அதிகரிக்ககூடும்.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்சனை இருந்தால் என்ன செய்வது?
3. உடல் எடை பராமரிப்பு:
கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் பெண்கள் சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும். ஓவர் குண்டாகவோ அல்லது ஒல்லியாகவோ இருப்பது மாதவிடாய் சுழற்சியில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். எனவே குழந்தைக்கு திட்டமிடும் முன்பே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சரியான உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும். கருத்தரிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர்கள் தரும் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
4. புகைப்பிடித்தல், மது வேண்டாம்:
புகைபிடிப்பவராக இருந்தால், நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் முன் அதை நிறுத்த என மருத்துவர் பரிந்துரைக்கிறார். புகையிலை கருவுறுதலுக்கு எதிரினாது. எனவே புகைப்பிடிப்பர் எனில் அதனை விடுவதற்கான ஆலோசனைகளை பெற வேண்டும்.
அதேபோல் அதிக ஆல்கஹால் உட்கொள்வதும் கருவுறுதலை பாதிக்கிறது. ஆண், பெண் யாராக இருந்தாலும் கருத்தரிக்க விரும்புவோர் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டியது கட்டாயமாகும்.
5. காஃபினை கட்டுப்படுத்துங்கள்:
காபி, டீ போன்ற காஃபின் நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும். பல்வேறு ஆராய்ச்சிகளின் படி, ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம்களுக்கு குறைவான காஃபின் உட்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கப்படாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் வரை மட்டுமே காபி பருக வேண்டும்.
6.அதிக உடற்பயிற்சி கூடாது:
கடுமையான உடற்பயிற்சியை அதிகமாக செய்யாதீர்கள். வாரத்திற்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான, தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்வது கருமுட்டை வெளிப்பாட்டை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Joint Pain: கர்ப்ப காலத்தில் மூட்டு வலி வருவது சகஜமா? டாக்டர் கூறுவது இங்கே!
Image Source: Freepik