உங்க உயரத்துக்கு ஏற்ப வெயிட் எவ்ளோ இருக்கணும் தெரியுமா? இத நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

How much should i weigh for my height and age: ஆண்கள் மற்றும் பெண்களின் உயரத்திற்கு ஏற்பட உடல் எடையை சீராக வைத்திருப்பது அவசியமாகும். இதில், இவர்கள் எந்தெந்த உயரத்திற்கு என்ன உடல் எடையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உங்க உயரத்துக்கு ஏற்ப வெயிட் எவ்ளோ இருக்கணும் தெரியுமா? இத நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்


How much should i weigh for my height and age chart: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு தொடர்பான பிரச்சனையும் அடங்குகிறது. உடல் எடை அதிகரிப்பு தொடர்பான பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உயரத்திற்கும் எடைக்கும் இடையில் உள்ள தொடர்பைப் பற்றி தெரியுமா?

உயரத்திற்கும் எடைக்கும் இடையில் ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பது என்பது தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் முக்கிய குறிகாட்டியாக அமைகிறது. இந்த சமநிலையை மதிப்பீடு செய்வதற்கு மருத்துவ அறிவியல் நீண்ட காலமாக ஒரு நிலையான முறையை நம்பியுள்ளது. இதில் உடல் நிறை குறியீட்டெண் அல்லது பிஎம்ஐ அமைகிறது. எனினும், பிஎம்ஐ ஒரு பயனுள்ள வழிகாட்டுதலை வழங்கினாலும், அது முழு படத்தையும் வரைவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Height Weight Chart: உங்க வயது & உயரத்திற்கு ஏற்ற சரியான எடை என்ன? முழு விவரம் உள்ளே!

BMI என்றால் என்ன?

ஒரு நபரின் எடை அவரது உயரத்திற்கு ஏற்றதா என்பதை தீர்மானிப்பதற்கு பிஎம்ஐ அல்லது உடல் நிறை குறியீட்டெண் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மெடிக்கல் நியூஸ் டுடேயில் குறிப்பிட்டபடி, பிஎம்ஐ குறியீடு விவரங்கள் குறித்து இதில் காணலாம்.

பிஎம்ஐ = எடை (கிலோ) / உயரம்² (மீட்டர்கள்)

உதாரணமாக, ஒரு நபர் 70 கிலோ எடையும் 6 அடி உயரமும் இருந்தால், பிஎம்ஐ எவ்வளவு இருக்கும்?

மீட்டரில் உயரம் = 1.83

பிஎம்ஐ = 70 / (1.83 × 1.83) = 20.90

இதில் பிஎம்ஐ அளவு 18.5 முதல் 24.9 வரையில் இருப்பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதே சமயம், 18.5 க்குக் கீழே உள்ள மதிப்பெண் எடை குறைவாக இருப்பதையும், 25 க்கு மேல் உள்ள பிஎம்ஐ அதிக எடை அல்லது உடல் பருமனையும் குறிக்கிறது.

பிஎம்ஐ ஒரு பயனுள்ள தொடக்கப் புள்ளியாக இருப்பினும், இது எப்போதும் துல்லியமாக இருக்காது. குறிப்பாக இந்தியர்களுக்கு, "பிஎம்ஐ தொப்பை கொழுப்பை அளவிடாது. மறுபுறம், தொப்பை கொழுப்பு மிகவும் ஆபத்தான வகை உடல் பருமன்” என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இதை அங்கீகரித்து, ஒரு படி மேலே சென்று வயிற்று கொழுப்பை அளவிட பரிந்துரைத்துள்ளது.

அதன் படி, ஒரு ஆணின் இடுப்பு சுற்றளவு 90 செ.மீ.க்கு அதிகம் இருந்தால் அல்லது ஒரு பெண்ணின் இடுப்பு சுற்றளவு 80 செ.மீ.க்கு அதிகம் இருந்தால், அவர்களின் பிஎம்ஐ சாதாரணமாகத் தோன்றினாலும், உடல் பருமன் தொடர்பான சிக்கல்களின் அதிக ஆபத்தைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

ஹெல்த்லைன் தளத்தில் குறிப்பிட்ட படி, சிறந்த உடல் எடையைக் கண்டறிய சரியான சூத்திரம் எதுவும் இல்லை. ஏனெனில் இது பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படலாம். உதாரணமாக,

  • உயரம்
  • மரபியல்
  • பிறக்கும் போது ஒதுக்கப்படும் பாலினம்
  • தூக்கம்
  • செயல்பாட்டு நிலை
  • உடல் அமைப்பு
  • அடிப்படை சுகாதார நிலைமைகள்
  • நீங்கள் ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்களா

இந்த பதிவும் உதவலாம்: Obesity and overweight: எக்ஸ்ட்ரா வெயிட்டைக் குறைக்க படாதபாடு படுறீங்களா? - முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க!

பெரியவர்களுக்கு ஏற்ற எடையைக் கணக்கிடும்போது, வயது பொதுவாக ஒரு காரணியாக இருக்காது. ஏனெனில் ஒரே வயதுடையவர்கள் உயரம், வடிவம் மற்றும் அளவு போன்றவற்றால் வேறுபடுகின்றனர். இதில் உங்களுக்கு எது சிறந்தது என்பது வயதின் வேறொருவருக்கு சிறந்ததாக இருக்காது.

எனினும், 2 முதல் 19 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் டீனேஜர்களுக்கான ஏற்ற எடையைக் கணக்கிடும்போது வயது ஒரு காரணியாக அமைகிறது. ஏனெனில், அவர்கள் இன்னும் வளர்ந்து வருகின்றனர்.

சிறந்த எடையை பராமரிக்க சிறந்த குறிப்புகள்

  • பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தினமும் தேர்வு செய்ய வேண்டும்.
  • இனிப்புகள், கேக்குகள், இனிப்பு வகைகள் மற்றும் சர்க்கரை பானங்கள் அதிகப்படியான கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே இதற்கு மாற்றாக சர்க்கரை சேர்க்கப்படாத ஆரோக்கியமான விருப்பங்களுக்கு மாறலாம்.
  • உணவு எடுத்துக் கொள்ளும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இது அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது.
  • நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றவும், நீரேற்றமாகவும், திருப்தியாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.
  • அன்றாட வழக்கத்தில் சில வழக்கமான உடல் செயல்பாடுகளை இணைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு நடுத்தர வேகத்தில் 40-45 நிமிடங்கள் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் கார்டியோ, வலிமை பயிற்சி மற்றும் நெகிழ்வு பயிற்சிகளில் ஈடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் பருமன் Vs அதிக எடை: இரண்டுமே வேற வேற., இதை தெரிஞ்சா நீங்களும் ஸ்லிம் ஆகலாம்!

Image Source: Freepik

Read Next

வெயிட் லாஸ்க்கு இந்த டயட்டை ஃபாலோ பண்றீங்களா? ரொம்ப ஆபத்து.. உடனே நிறுத்துங்க

Disclaimer

குறிச்சொற்கள்