Sat Sep 12, 2026 | 12:45 AM IST

Doctor Verified

என்ன செய்தாலும் எடையைக் குறைக்க முடியவில்லையா? அதுக்கு இது தான் காரணம்..

இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை காரணமாக, சிலருக்கு உடல் எடையை இழப்பது கடினமாக இருக்கலாம். இது ஏன் நடக்கிறது? இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் உடல் எடையை எவ்வாறு குறைக்க முடியும் என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் நீரிழிவு நோயும் அடங்குகிறது. பெரும்பாலும் உடல் எடை அதிகரிப்பானது நீரிழிவு நோய்க்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, இன்சுலின் எதிர்ப்பு என்பது உடலின் தசை, கொழுப்பு மற்றும் கல்லீரல் செல்கள் இன்சுலின் ஹார்மோனுக்கு சரியாக பதிலளிக்காத ஒரு நிலையைக் குறிப்பதாகும். இது இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

ஏனெனில் உடலின் செல்கள் குளுக்கோஸை ஆற்றலுக்காகப் பயன்படுத்த முடியாது. ஒரு நபர் நீண்ட காலமாக இந்த நிலையை அனுபவிப்பதன் காரணமாகவே, டைப் 2 நீரிழிவு நோய் உட்பட பல்வேறு நோய்களைச் சந்திக்கக்கூடிய அதிக ஆபத்தில் உள்ளனர். எனினும், இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிப்பது இந்த நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இன்சுலின் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு எடை கட்டுப்பாடு பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இன்சுலின் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் தங்கள் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த போராடுகின்றனர்.

இதில் இன்சுலின் எதிர்ப்பு கொண்டவர்களால் ஏன் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்பதற்கான காரணங்களையும், அவர்கள் எடையைக் குறைப்பதற்கான வழிகளையும், சர்வோதயா மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஸ்வப்னில் ஷிகா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 பானங்கள் குடிச்சா எடை குறைவது கேரண்டி.. நிபுணர் தரும் விளக்கம்

இன்சுலின் எதிர்ப்பு எடை இழப்பை கடினமாக்குமா?

இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை சமாளிக்க விரும்புபவர்கள், உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது முக்கியமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் எடை இழப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது. மருத்துவர்களும் இதையே உறுதிப்படுத்துகின்றனர்.

மருத்துவரின் கூற்றுப்படி, "இன்சுலின் எதிர்ப்பில் எடை இழப்பது கடினம். உங்கள் உடல் கூடுதல் குளுக்கோஸை கொழுப்பாக சேமித்து வைப்பதால் இது நிகழ்கிறது. அதே நேரத்தில், சேமிக்கப்பட்ட கொழுப்பை ஆற்றலுக்காக வெளியிடுவதில் சிக்கல்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில், இன்சுலின் அளவு அதிகரிக்கிறது, அதிக கொழுப்பு சேமிக்கப்படுகிறது மற்றும் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை ஏற்படத் தொடங்குகிறது." என்று விளக்குகிறார். மேலும் அவர், "இது மட்டுமல்லாமல், இன்சுலின் எதிர்ப்பு காரணமாக வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்படுகிறது. எனவே, இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு எடை இழப்பது சவாலாகிறது" என்று குறிப்பிடுகிறார்.

இன்சுலின் எதிர்ப்புடன் எடை குறைப்பதற்கான குறிப்புகள்

உடற்பயிற்சி செய்வது

அமெரிக்க நீரிழிவு சங்க வழிகாட்டுதல்களின்படி இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதில் விறுவிறுப்பான நடைபயிற்சி, ஏரோபிக்ஸ் மற்றும் வலிமை பயிற்சி போன்றவை அடங்குகிறது. இன்சுலின் உணர்திறன்ஆற்றலை அதிகரித்து கலோரிகளை எரித்து, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: வேக வேகமா உடல் எடை குறைய ஒரு வாரம் தொடர்ந்து இந்த ட்ரிங்க் குடிங்க.. நிபுணர் தரும் கூடுதல் டிப்ஸ்

உணவில் மாற்றங்களைச் செய்வது

மருத்துவர் கூறியதாவது, "இன்சுலின் எதிர்ப்பு உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி, சரியான செயல்பாட்டை பாதிக்கிறது என்பது உண்மைதான். இந்த சூழ்நிலைகளில் எடை இழப்பது சவாலானதாகும். எனினும், அவர்கள் தங்கள் உணவில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதத்தை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். அதே சமயம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை அவர்களின் உணவில் இருந்து நீக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

சீரான எடையைப் பராமரிப்பது

அதிக உடல் எடையுடன் இருந்தால், சீரான எடையைப் பராமரிக்க முயற்சிக்க வேண்டும். எடை இழப்பது கடினம் என்றாலும், சிறிய இலக்குகளை தவறாமல் நிர்ணயித்து அவற்றை அடைய பாடுபடலாம். இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

முடிவுரை

இன்சுலின் எதிர்ப்பு என்பது ஒரு கடுமையான பிரச்சனையாக இருப்பதால், அதை நிர்வகிப்பது கடினமாக இருக்கக்கூடும். எனினும், சீரான எடையை பராமரிப்பது இந்த பிரச்சனையை சமாளிக்க உதவுகிறது. மேலும், அதிக எடையுடன் இருந்தால், பல்வேறு வாழ்க்கை முறை மாற்றங்கள் இருந்தபோதிலும் எடையை நிர்வகிக்க முடியாவிட்டால், ஒரு நிபுணரை அணுகி அவர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியமாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சட்டென உடல் எடையைக் குறைக்க இந்த சூப் ரெசிபிஸ் செய்து சாப்பிடுங்க..

Image Source: Freepik

Read Next

ஹை லெவல் சுகரையும் நொடியில் குறைக்க இந்த 5 உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 16, 2025 22:52 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content