Can Exercise Strengthen Brain Function: உடற்பயிற்சி என்றால் உடல் வடிவத்தை மேம்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும் என்பது பலரின் கருத்து. ஆனால், உடற்பயிற்சி செய்வது உடல், மன ஆரோக்கியத்துடன் மூளை ஆரோக்கியத்துடனும் தொடர்புடையதாகும். வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்வது மூளைக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. உடற்பயிற்சி செய்வது மூளைக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து காணலாம்.
மூளை ஆரோக்கியத்திற்கு ஏன் உடற்பயிற்சி உதவுகிறது?
அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியை மேற்கொள்வது மூளை ஆரோக்கியத்தை எந்த வழிகளில் உதவுகிறது என்பதை குறித்து காண்போம்.
சிந்திக்கும் திறன் கூர்மையாக வைக்க
வழக்கமான உடற்பயிற்சி செய்வது, மூளையின் முன் பகுதி மற்றும் நடுப்பகுதியை பெரிதாக வைப்பதாக பல ஆய்வுகளில் கூறப்படுகிறது. இது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்தவும், நினைவாற்றலுக்குப் பொறுப்பான மூளையின் பகுதியாகக் கருதப்படுகிறது. எனவே மற்றவர்களை விட உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த நினைவாற்றலைப் பெறுவர்.
இந்த பதிவும் உதவலாம்: Cycling Side Effects: அதிகப்படியாக சைக்கிள் ஓட்டுவதால் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா?
புதிய மூளை செல்கள் உருவாக்கம்
மூளை முழு நேரமும் வேலை செய்யக் கூடிய உறுப்பாகும். இது வேலை செய்வதை நிறுத்தினால், உடலின் மற்ற பாகங்கள் எந்தப் பயனும் இல்லாமல் போகலாம். மூளை ஆரோக்கியத்திற்கு பழைய சேதமடைந்த செல்கள் சரிசெய்யப்படுவதுடன், அவ்வப்போது புதிய செல்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நன்றாக தூங்க உதவுவதுடன், புதிய மூளை செல்களை வேகமாக உற்பத்தி செய்கிறது.
மன அழுத்தம் நீங்க
பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இது ஹார்மோன் ஏற்ற இறக்கங்களினால் ஏற்படுவதாகும். மூளை சரியான ஹார்மோன்களை சீரான அளவில் உற்பத்தி செய்யும் போது மன அழுத்தம் மற்றும் பதட்டம் இருக்காது. வழக்கமான உடற்பயிற்சி செய்வது மூளை அதிகப்படியாக மகிழ்ச்சியான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Running Daily Benefits: வெறும் 10 நிமிஷம் தினமும் ஓடுனா, இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த
வழக்கமான உடற்பயிற்சியாக ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளைச் செய்வது கற்றல் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியை மிகவும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. சிறு குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்க இந்த பயிற்சி உதவுகிறது. கோடைக்காலத்தில் தினமும் சிறிது நேரம் நடப்பது, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் அடிப்பது போன்றவற்றின் மூலம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்க
உடற்பயிற்சி செய்யும் போது இதயத்துடிப்பு அதிகரிக்கலாம். இது சுவாசத்தை மேம்படுத்தவும், அதிகளவு ஆக்ஸிஜன் நுரையீரலை சென்றடையவும் உதவுகிறது. இந்த ஆக்ஸிஜன் இரத்தத்தில் கலந்து முழு உடலுக்கும் ஆக்ஸிஜன் வழங்கலை அதிகரிக்கிறது. இதில் அதிக ஆக்ஸிஜன் மூளையையும் சென்றடைகிறது. இது மூளை செல்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், சேதமடைந்த செல்களை சரி செய்து, புதிய இரத்த நாளங்கள் உருவாகும் வேகத்தை அதிகரிக்கிறது.
இவ்வாறு மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி மிகவும் உதவி புரிகிறது. மேலும் மூளைத் திறனை மேம்படுத்த சில உடற்பயிற்சிகள் உதவுகின்றன. இது தவிர, ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வதன் மூலமும் மூளைத்திறனை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Stretching Benefits: ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Image Source: Freepik