எக்சர்சைஸ் பண்ணா மூளை ஷார்ப்பா இருக்குமா? ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் ரகசியம்

  • SHARE
  • FOLLOW
எக்சர்சைஸ் பண்ணா மூளை ஷார்ப்பா இருக்குமா? ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் ரகசியம்

இதற்கு உடற்பயிற்சி செய்யும் போது, மூளை நரம்புகள் வழியாக தசைகள் தூண்டப்படுவதே காரணமாகும். இதில் தசைகள் மூளைக்கு நன்மை செய்யும் மூலக்கூறுகளை வெளியிடுகிறது. ஆனால், இதற்கான செயல்முறை எப்போதும் தெளிவாக இல்லை. ஆனால், சமீபத்தில் இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தசைகளைத் தூண்டும் நரம்புகள் மூளைத்திறனை அதிகரிக்கும் காரணிகளின் வெளியீட்டை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இது குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Morning Stretches: உடல் எடையைக் குறைக்க உதவும் சிம்பிளான ஸ்ட்ரெட்சஸ்!

தசைகளின் செயல்பாட்டில் நியூரான்களின் தாக்கம்

உடற்பயிற்சி செய்யும் போது தசையிலிருந்து மூலக்கூறுகள் வெளியிடப்பட்டு, அவை இரத்த ஓட்டத்தில் சென்று, பின்னர் மூளைக்குச் சென்று தசைகள் மற்றும் மூளைக்கு இடையில் குறுக்கு வெட்டு என்றழைக்கப்படுவதை உருவாக்குகிறது. தசைகளின் இந்த செயல்பாடு, நியூரான்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வு தலைவர் Hyunjoon Kong அவர்கள் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மூளைத்திறனை மேம்படுத்த உடற்பயிற்சிக்கான காலம்

ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜி மற்றும் சமூக ஆரோக்கியத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சியை 6 முதல் 10 நிமிடங்கள் செய்வது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. இது திட்டமிடல் மற்றும் அறிவாற்றல் போன்ற உயர் நிலை அறிவாற்றல் திறன்களை கணிசமாக மேம்படுத்துகிறது.

மிதமான உடற்பயிற்சி என்பது வேகமாக நடப்பது போன்ற விஷயங்களை உள்ளடக்கியதாகும். மேலும் படிகட்டுகளில் ஏறி இறங்குதல், மெதுவான ஜாகிங் போன்ற செயல்கள் மிதமான உடற்பயிற்சியை அடிப்படையாகக் கொண்டது. அதே போல, சைக்கிள் ஓட்டுதல், HIIT (High-intensity interval training) உடற்பயிற்சிகள், நீச்சல் போன்றவை தீவிர உடற்பயிற்சியில் அடங்குபவையாகும்.

மேலும் தினந்தோறும் சிறிது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். உடற்பயிற்சியைத் தவிர்த்து, உட்கார்ந்து கொண்டே இருப்பது அறிவாற்றல் திறனை 1 முதல் 2% வரை குறையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறோமோ, அந்த அளவு அறிவாற்றல் திறன் மற்றும் மன மேம்படும்.

இந்த பதிவும் உதவலாம்: Neck Pain Exercises: தீராத கழுத்து வலியிலிருந்து நிவாரணம் பெற இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க

மற்ற ஆய்வுகள்

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சிதைவை மெதுவாக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும். இதில் வழக்கமானவற்றிற்கு மாறாக, புதிய மூளை செல்கள் உருவாகிறது. உடற்பயிற்சி செயல்பாடு ஹிப்போகாம்பஸின் அளவை அதிகரித்து, 60 மற்றும் 70 களில் கூட வயது காரணமாக ஏற்படும் நினைவாற்றல் இழப்பின் தாக்கத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் சிலருக்கு 6 முதல் 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அதிகமாகத் தோன்றலாம். இது குறித்து ட்ரான்சிஷனல் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில்,”மிதமான மற்றும் அதிக தீவிரத்தில் ஏரோபிக் உடற்பயிற்சிகளை 2 நிமிடங்கள் செய்வதும் கவனம், மூளைச்செறிவு மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரண்டு மணி நேரம் நினைவகமாக செயல்பட ஏதுவாக அமைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.”

அதே போல, நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட ஆய்வில், “விறுவிறுப்பாக நடந்த பங்கேற்பாளர்களில் அதிகபட்சமாக 60 முதல் 75 சதவீத இதயத் துடிப்பை இலக்காகக் கொண்டவர்களாவர். இவர்கள் வாரத்திற்கு மூன்று முறை 40 நிமிடங்களுக்கு விறுவிறுப்பாக நடந்து, ஹிப்போகாம்பல் அளவை 2%-ற்கும் சற்று மேல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது”.

அதன் படி, எந்த வகையான உடற்பயிற்சியும் ஜாகிங், உடல் எடை பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற நீங்கள் விரும்பும் செயல்பாட்டை மேற்கொள்வது மூளைத் திறனை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Exercise And Brain Function: மூளை ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி உதவுமா?

Image Source: Freepik

Read Next

Morning Stretches: உடல் எடையைக் குறைக்க உதவும் சிம்பிளான ஸ்ட்ரெட்சஸ்!

Disclaimer

குறிச்சொற்கள்