Menopause and osteoporosis: பெண்களின் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் மெனோபாஸ் நிலை! எப்படி தவிர்ப்பது?

பொதுவாக ஆஸ்டியோபோரோசிஸ் என்பது ஒரு எலும்பு பிரச்சனையாகும். ஆனால் மெனோபாஸ் நிலையில் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் அதிகரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், மெனோபாஸ் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு எலும்புகள் வலுவிழக்க வழிவகுக்கலாம். இதில் மெனோபாஸ் நிலை எவ்வாறு ஆஸ்டியோபோரோசிஸை ஏற்படுத்துகிறது என்பது குறித்து காண்போம்.
  • SHARE
  • FOLLOW
Menopause and osteoporosis: பெண்களின் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் மெனோபாஸ் நிலை! எப்படி தவிர்ப்பது?

How menopause increases risk of osteoporosis: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் முக்கிய நிகழ்வாகவே மாதவிடாய் சுழற்சி கருதப்படுகிறது. இது பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட வயதில் முடிவடையும். ஒரு பெண் வழக்கமாக 10 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட நேரமானது முதல் மாதவிடாய் அடையும் நேரமாகக் கூறப்படுகிறது. பெண்கள் கருவுறுதலுக்கான ஒரு முக்கிய காரணமாகவே மாதவிடாய் நிகழ்வு ஏற்படுகிறது. எனினும், இது குறிப்பிட்ட காலத்தில் முற்றிலும் நின்று விடும்.

இவ்வாறு இயற்கையாகவே, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று விடும் நிலையானது மெனோபாஸ் நிலை என்றழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தாயாகும் திறனை இழக்கிறார்கள். மேலும் மெனோபாஸ் நிலை அவர்களின் உடல் மற்றும் மன நலத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இது ஒரு நோயாகக் குறிப்பிட முடியாது. மாறாக, வயதுக்கு ஏற்ப பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய இயல்பான செயல்பாடு ஆகும். அந்த வகையில், மெனோபாஸ் நிலையால் எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதில் மெனோபாஸ் நிலை எவ்வாறு எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Menopause Effects On Health: மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது தான்.!

மெனோபாஸ் நிலை

மெனோபாஸ் நிலையானது மாதவிடாய் நிறுத்தத்தைக் குறிக்கிறது. இந்நிலையில் பெண்களின் பாலியல் ஹார்மோன்களின் அளவு குறையும். அதாவது ஒரு பெண்ணுக்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் மாதவிடாய் வராதபோது மாதவிடாய் நின்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலை பொதுவாக 44 - 52 வயதிற்குள் நிகழக்கூடியதாகும். சில நேரங்களில் கருப்பை அறுவை சிகிச்சை மூலம் கருப்பையை அகற்றும் போது இந்த மெனோபாஸ் நிலை ஏற்படலாம். எனினும், பெரும்பாலான பெண்கள் இந்த மெனோபாஸ் நிலைக்கான அறிகுறிகளை அனுபவிப்பதில்லை. எனினும், சில சிக்கலான அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்.

மெனோபாஸ் எலும்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

பொதுவாக மெனோபாஸ் என்பது எலும்பு ஆரோக்கியம், எடை அதிகரிப்பு, மற்றும் இதய ஆரோக்கியம் போன்ற ஒரு நபரின் ஆரோக்கிய அம்சங்களைக் கணிசமாக பாதிக்கலாம். மெனோபாஸ் நிலையில் ஈஸ்ட்ரோஜனின் வீழ்ச்சி ஏற்படலாம். இந்த வீழ்ச்சியே எலும்பின் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கலாம். இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கிறது. இது எலும்பு முறிவு மற்றும் பலவீனமான எலும்புகள் போன்றவை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

ஏனெனில், ஈஸ்ட்ரோஜன் என்பது எலும்பின் அடர்த்தியை பராமரிக்க உதவும் ஒரு சிறந்த ஹார்மோன் ஆகும். மாதவிடாய் காலத்தில் குறையும் இந்த ஈஸ்ட்ரோஜன் காரணமாக, விரைவான எலும்பு இழப்பு ஏற்படலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, மாதவிடாய் நின்ற முதல் சில ஆண்டுகளில், இது 20% வரை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் எலும்புகள் மிகவும் உடையக்கூடியதாக மாறலாம். போதுமான ஈஸ்ட்ரோஜன் இல்லாதபோது, எலும்பை உடைத்து மீண்டும் கட்டமைக்கும் உடலின் இயற்கையான செயல்முறை சமநிலையற்றதாக மாற்றுகிறது. இது எலும்பு முறிவுக்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு மெனோபாஸ் ஸ்டார்ட் ஆகுதுனு அர்த்தம்

மெனோபாஸ் நிலை ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கும் முறைகள்

மெனோபாஸ் நிலையின் போது பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்க உதவும் சில நடவடிக்கைகளைக் காணலாம்.

எடை தாங்கும் பயிற்சிகள்

பெண்கள் உடல் செயல்பாடுகளில் குறிப்பாக ஜாகிங், நடைபயிற்சி, நடனம் போன்ற எடை தாங்கும் பயிற்சிகள் மற்றும் பளு தூக்குதல் போன்ற எதிர்ப்பு பயிற்சிகள் எலும்பு அடர்த்தியை உருவாக்கவும், பராமரிக்கவும் உதவுகிறது. இவை எலும்பை உருவாக்கும் செல்களைத் தூண்டி, வலிமையாக்கி, எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

புரத உணவுகள்

எலும்புகளுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் ஒன்று புரதம் ஆகும். ஏனெனில், குறைந்தளவிலான புரத உட்கொள்ளல் எலும்புகளை வலுவிழக்கச் செய்யலாம். எனவே பீன்ஸ், பருப்புகள், மெலிந்த இறைச்சிகள் போன்ற புரதம் நிறைந்த உணவைச் சேர்த்துக் கொள்ளலாம். எனினும், அதிக புரத நுகர்வும் கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும். எனவே சமநிலையைப் பேணிக்காக்க வேண்டும்.

ஆரோக்கியமான உடல் எடை

குறைந்த உடல் எடை எலும்பு இழப்பை அதிகரிக்கிறது. அதே சமயம், அதிக உடல் பருமன் காரணமாக எலும்புகள் மற்றும் மூட்டுகளில் கூடுதல் அழுத்தம் உண்டாகலாம். எனவே எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது நல்லது.

கால்சியம், வைட்டமின் டி உட்கொள்ளலை அதிகரிப்பது

வலுவான எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியமாகும். மேலும், வைட்டமின் டி உடல் கால்சியத்தை மிகவும் திறம்பட உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எனவே பால், செறிவூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் இலை கீரைகள் போன்ற உணவுகள் நல்ல ஆதாரங்களாகக் கருதப்படுகிறது.

இவை அனைத்தும் மெனோபாஸ் நிலையின் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Menopause  symptoms: மெனோபாஸின் அறிகுறிகள் என்னென்ன? அதை எவ்வாறு கையாள்வது?

Image Source: Freepik

Read Next

Papaya During Periods: பப்பாளி சாப்பிட்டால் பீரியட்ஸ் சீக்கிரம் வருமா? உண்மை இங்கே!

Disclaimer