எலும்பு தேய்மானம் என்னும் நோய் பொதுவாக ஆண்களை விட பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்கிவிடுகிறது. பெண்களை 45 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கால்சியம் என்ற தாது உப்பு அவசியமாகின்றது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக்கொள்ளுகின்றன. நாம் முதுமையை நெருங்க நெருங்க இத்தன்மை மெதுவாக குறைந்து மறைந்து போய்விடுவதால் எலும்புகளில் கால்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது.
பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது. இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் டி குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக பெண்களில் "மெனோபாஸ்" எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் எலும்பு தேய்மானம் ஏற்பட காரணமாகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிக அவசியமான ஒன்று. ஏனெனில் இந்நோய் இருப்பதாக உணரும் முன்னரே பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விடும்.
எலும்பு தெய்மானத்தை தவிர்க்க பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டியது என்னவென பார்க்கலாம்....
- வயது 30ஐத் தொட்டவர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பச்சைக் காய்கறி, பால், முட்டை மற்றும் கடல் உணவுகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்க வேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம்வாக்கிங் செல்ல வேண்டியது கட்டாயம்.
- உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- ஏரோபிக்ஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் நல்ல பலன் தரும். எலும்புகளை உறுதி செய்யும்.
- எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டியது அவசியம்.
எலும்பு தேய்மானம் தடுக்க வழிகள்:
உடற்பயிற்சி :
எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 நாட்கள் வரை கட்டாயம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உப்பு உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும் :
உப்பை அதிகம் உட்கொள்ளும் போது, அது சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. அதிலும் ஏற்கனவே கால்சியம் குறைபாடு இருந்தால், அது மிகவும் ஆபத்தாய் முடியும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவருக்கு சிறுநீரில் கால்சியம் அதிகளவில் வெளியேறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காப்ஃபைன் உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும் :
உடலில் கால்சியம் உறிஞ்சுதலை, காப்ஃபைன் தலையிட்டு கெடுத்துவிடும். ஆகவே காப்ஃபைன் இருக்கும் சோடா, காபி மற்றும் சாக்லெட் போன்றவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும்.
கால்சியம் அதிகம் உட்கொள்ளுதல் :
கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
வைட்டமின் டி அதிகப்படுத்துதல் :
வைட்டமின் 'டி' உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பாக இத்தகைய வைட்டமின் 'டி' சத்தை சூரிய வெளிச்சமானது அதிகம் உற்பத்தி செய்கிறது. மேலும் பால், ஆரஞ்சு மற்றும் காலை உணவு தானியங்களில் வைட்டமின் 'டி' சத்தானது செறிந்துள்ளது.
உட்கொள்ளும் மருந்துகளில் கவனம் :
சில மருந்துகள் எலும்பு தேய்மானம் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன,
Image Source: Freepik