Doctor Verified

குறைந்த இரத்த அழுத்தம் கண்களைப் பாதிக்குமா? மருத்துவரிடம் தெரிந்து கொள்ளுங்கள்

How does low blood pressure affect your eyes: குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர். இதனால் மக்கள் பலரும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மக்களின் கண்களும் பாதிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் அது குறித்த விவரங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
குறைந்த இரத்த அழுத்தம் கண்களைப் பாதிக்குமா? மருத்துவரிடம் தெரிந்து கொள்ளுங்கள்


How does low blood pressure affect your eyesight: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உயர் இரத்த அழுத்தம் அமைகிறது. பொதுவாக இரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று உயர் இரத்த அழுத்தம், மற்றொன்று குறைந்த இரத்த அழுத்தம் ஆகும். இது ஹைபோடென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் பெரும்பாலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், மக்கள் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மக்கள் பல உடல்நலப் பிரச்சினைகளைகளையும் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. குறைந்த இரத்த அழுத்தத்தினால் மக்கள் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம், வியர்வை, சுவாசிப்பதில் சிரமம், பசியின்மை, குளிர் மற்றும் பசியின்மை போன்ற உடல்நலப் பிரச்சனைகலைச் சந்திக்க நேரிடலாம். இந்நிலையில், குறைந்த இரத்த அழுத்தம் கண்களைப் பாதிக்குமா என்ற கேள்வி மக்களின் மனதில் அடிக்கடி எழுகிறது?

இந்த பதிவும் உதவலாம்: உங்க இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க மருத்துவர் சொன்ன இந்த 5 உணவுகளை தவறாம சாப்பிடுங்க

இந்நிலையில் NIT ஃபரிதாபாத்தில் அமைந்துள்ள சாந்த் பகத் சிங் மகாராஜ் அறக்கட்டளை மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் சுதிர் குமார் பரத்வாஜி அவர்கள் குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக கண்களில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து காணலாம்.

குறைந்த இரத்த அழுத்தம் கண்களைப் பாதிக்குமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் இரத்த அழுத்த அளவு குறைவதால், மக்களின் கண்களில் அழுத்தம் அதிகரிக்கலாம். இதனால், மக்கள் எதிலும் கவனம் செலுத்துவது, பார்வை மங்கலாகுதல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக, மக்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குறைந்த இரத்த ஓட்டத்திற்கு வழிவகுப்பதால் கண்களின் விழித்திரைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை பிரச்சனைகள் ஏற்படலாம்.

கவனம் செலுத்துவதில் சிக்கல்

குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக, உடல் அல்லது கண்களுக்கு இரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இதனால் கண்களின் நரம்புகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக மக்கள் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். மேலும் மயக்கம் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம்.

கண் ஹைப்போபெர்ஃபியூஷன் பிரச்சினைகள் இருப்பது

நீண்ட காலமாக குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு, கண் ஹைப்போபெர்ஃபியூஷன் பிரச்சனை இருக்கலாம். இதன் காரணமாக, கண்களில் பாயும் இரத்த ஓட்டம் குறைகிறது. இது விழித்திரை மற்றும் பார்வை நரம்புக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு குறைந்த இரத்த அழுத்தம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: இரத்த அழுத்தத்தைத் திறம்பட குறைக்க இந்த ஐந்து உணவுகளை மட்டும் சாப்பிடுங்க போதும்

மங்கலான பார்வை

உடலில் இரத்த அழுத்த அளவு குறையும் போது, கண்களில் இரத்த ஓட்டம் குறையும் என பார்த்தோம். இதனால், விழித்திரைக்கு ஆக்ஸிஜன் ஓட்டம் குறையும் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக, மங்கலான பார்வையால் பாதிக்கப்படுகின்றனர். மங்கலான பார்வை பிரச்சனையால் புள்ளி பார்வை பிரச்சினை இருக்கலாம். குறிப்பாக, ஒருவர் விரைவாகவோ அல்லது திடீரெனவோ எழுந்து நிற்கும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

முடிவுரை

குறைந்த இரத்த அழுத்தத்தால் பலரும் சிரமப்படுகின்றனர். இதனால் சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனுடன், குறைந்த இரத்த அழுத்தம் கண்களில் அழுத்தத்தை அதிகரிக்கலாம். இதனால், அந்த நபருக்கு பார்வை மங்கலாக, புள்ளி பார்வை மற்றும் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இது தவிர, நீண்ட காலமாக குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அது கண் ஹைப்போபெர்ஃபியூஷன் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். இதனால் அவரின் விழித்திரை மற்றும் பார்வை நரம்பு சேதமடைகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், கண் பிரச்சினைகளைத் தவிர்க்க மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Low BP உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா? எப்போது.. எப்படி சாப்பிடணும்!

Image Source: Freepik

Read Next

விரைவில் தூக்கி எறிய வேண்டிய 3 படுக்கையறை பொருட்கள்.. மருத்துவர் தரும் டிப்ஸ் இதோ

Disclaimer