Doctor Verified

Berberine In Diabetes: இரத்த சர்க்கரையை நிர்வகிக்க பெர்பெரின் உதவுவது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Berberine In Diabetes: இரத்த சர்க்கரையை நிர்வகிக்க பெர்பெரின் உதவுவது எப்படி?


Berberine Benefits For Diabetes: இன்று அனைவரும் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒன்றாகவே நீரிழிவு நோய் உள்ளது. ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொருவரும் நீரிழிவு நோய் அல்லது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் போராடி வருகின்றனர். உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. இதில் உடற்பயிற்சி, ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், தியானம் போன்றவை அடங்கும். நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துவது சிலருக்கு சவாலாகத் தோன்றினாலும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சில வழிகள் உள்ளன. குறிப்பாக, இயற்கையாகவே இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கலாம். அந்த வகையில் உடலில் குளுக்கோஸை நிர்வகிக்க பெர்பெரின் உதவுகிறது. இந்த பெர்பெரின் குறித்து ப்யூர் நியூட்ரிஷன் நேச்சுரல்ஸ் என்ற ஊட்டச்சத்து நிபுணர் மைத்ரி திரிவேதி அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்.

பெர்பெரின்

பெர்பெரின் என்ற ஆல்கலாய்டு ஆக்ஸிஜனேற்றத்துடன் கூடிய தாவர வளர்சிதை மாற்றமாகும். இவை ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீரிழிவு மற்றும் டிஸ்லிபிடெமியா போன்ற நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் நீரிழிவு நோயானது வாழ்க்கை முறை மாற்றங்களின் நிலைமையை மாற்றியமைக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Fruits for diabetics: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் என்னென்ன?

இன்சுலின் எதிர்ப்பின் காரணமாக உணவு வழியாகச் செல்லும் சர்க்கரையை உடல் பெற்றுக் கொண்டு பயன்படுத்த முடியாதபோது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஆனால், இந்த இன்சுலின் எதிர்ப்பு சர்க்கரை உட்கொள்ளல் அதிகரிப்பதால் ஏற்படாது. இவை அதிகரித்த வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படுவதாகும். இந்த நீரிழப்பு மற்ற நோய்களான இருதய நோய்கள், எடை அதிகரிப்பு, டிஸ்லிபிடெமியா, ஹார்மோன் சமநிலையின்மை உள்ளடக்கிய பிரச்சைகளை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு நோயில் பெர்பெரின் பங்கு

பெர்பெரின் குறித்த ஆய்வுகள், இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது எனக் கூறுகிறது. இவை குடலில் உள்ள சர்க்கரையை சீராக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இவை கல்லீரலில் கிளைகோஜெனோலிசஸை நிர்வகிக்கிறது. மேலும் ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் உற்பத்தியை ஆதரிப்பதாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hyperglycemia Symptoms: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

இதில் குறிப்பாக, குளுக்கோஸ் வளர்ச்சிதை மாற்றத்தில் ஈடுபடும் அஸ்பார்டேட் டிரான்ஸ்மினேஸ் மற்றும் அலனைன் போன்ற நொதிகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. இவ்வாறு பெர்பெரின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. பெர்பெரின் ஆனது AMP செயல்படுத்தப்பட்ட புரோட்டீன் கைனேஸ் (AMPK) மற்றும் மைட்டோஜென் செயல்படுத்தப்பட்ட புரோட்டீன் கைனேஸ் (MAPK) போன்றவற்றை ஒழுங்குபடுத்துகிறது. இது இரத்தத்தில் இருந்து எலும்புத் தசைகளுக்கு குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துவதை, அதிகரிக்கவும் செய்கிறது. இதனால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. கூடுதலாக, நீரிழிவு நோயினால் ஏற்படும் மற்ற நோய்களுக்கு சிகிச்சையாகவும் பெர்பெரின் பயன்படுத்தப்படுகிறது.

நீரிழிவு நோயின் அளவு மற்றும் அதன் மேலாண்மை

ஒவ்வொரு நாளும் பெர்பெரின் எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் எழும். அதன் படி, 500 மில்லிகிராம் பெர்பெரின் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்வது நல்ல தொடக்கமாக இருக்கலாம். இருப்பினும் எந்த சப்ளிமென்ட்ஸையும் தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: High Blood Sugar Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை வியாதி தான்.

நீரிழிவு நோயை நிர்வகிக்க இந்த பெர்பெரின் தவிர, உணவு முறையைக் கையாள்வது அவசியம் ஆகும். அந்த வகையில் உணவு மாற்றத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆரோக்கியமான கொழுப்பு, தரமான புரத மூலங்கள் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அடங்கும். கூடுதலாக, புதிய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.

மேலும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அணுகுவது அவசியம். தூக்கம், உடற்பயிற்சி, தியானம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. நீரிழிவு நோயை மாற்றியமைத்து சிறந்த ஆரோக்கியம் பெற ஆரோக்கியமான மற்றூம் கூடுதல் ஊட்டச்சத்து தேவையாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetic Foot Symptoms: நீங்கள் கவனிக்க வேண்டிய நீரிழிவு பாத நோய் அறிகுறிகள்

Image Source: Freepik

Read Next

High Blood Sugar Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை வியாதி தான்.

Disclaimer