How To Stay Healthy In Monsoon Season: பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. சூடான கோடையில் சூரியனின் ஆக்ரோஷத்திற்கு ஆளான நாம், மழையை பார்த்ததும் பரவசமாகிவிடுவோம். இந்த நேரத்தில் மழையில் நனைவதும், டீ மற்றும் பஜ்ஜி செய்து சாப்பிடுவதும், பாடலை கேட்டுக்கொண்டே மழையை ரசிப்பது என்று இருப்பார்கள். அதே சமையம், அய்யோ மழை வந்துச்சு.. இனி டெங்கு, மலேரியா, சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் வந்துவிடுமே என்று பயத்தில் இருப்பார்கள்.
அதுவும் சரிதான். மழைக்காலம் வந்தவுடம், பருவக்கால நோய்களும் பின்னாடியே வந்துவிடும். மழைக்காலத்தை ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டாட, முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. மழைக்காலத்தில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
சுகாதாரத்தில் கவனம்
பருவமழை தொடங்கும்போதே வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். குறிப்பாக நீர் தேங்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். இல்லையெனில் டெங்கு, மலேரியா போன்ற உயிரைக்கொள்ளும் பேராபத்துகள் ஏற்படும்.
எதிர்ப்பு சக்தியை வலுபடுத்தவும்
மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை உட்கொள்ளவும். இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
ஆடை தேர்வு
மழைக்காலத்தில் வெளியே சென்று வருபவர்கள், என்னத்தான் கையில் குடை கொண்டு சென்றாலும், பாதி நனைந்து தான் வீட்டுக்கு வருவீர்கள். இதனால் வீட்டுக்கு வந்த உடன் ஆடையை மாற்றிக்கொள்ளவும். மேலும் உங்களை முழுமையாக மறைக்கும் ஆடையை அணியவும். இது கொசுக்களிடம் இருந்து உங்களை காக்க உதவும்.
இதையும் படிங்க: Monsoon Health Tips: மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை காக்க சில வழிகள்...
வெதுவெதுப்பான நீரை குடிக்கவும்
மழை நேரத்தில் ஜெல்லென்ற நீரை குடிப்பது, உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தலாம். இதனை தடுக்க எப்போதும் வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது. மேலும் இது தொண்டை பிரச்னைகளை தீர்க்கும்.
உடற்பயிற்சி
வெயில், மழை, பனி எந்த காலமாக இருந்தாலும், உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று. மழைக்காலத்தில் மந்தமான உணர்வு நமக்கு தோன்றும். இந்த சூழலில் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி உதவலாம்.
மழைக்காலத்தில் செய்யக்கூடாதவை
மழையில் நனைய வேண்டாம்
மழை பெய்யும் போது நனைய வேண்டும் என்று ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் அவ்வாறு செய்தால், சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆகையால் இதனை தவிர்க்கவும்.
வெளியில் சாப்பிட வேண்டாம்
எப்போதுமே முடிந்த அளவு வீட்டிலேயே சாப்பிடவும். மழைக்காலத்தில் வெளியே சாப்பிடுவது, மலேரியா போன்ற தீவிர நிலை பிரச்னைகள் ஏற்படும். மேலும் இது செரிமான பிரச்னைகளை ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால், சாலை ஓர கடைகளில் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஈரமாக இருக்க வேண்டாம்
மழையில் நனைந்து வீடு திரும்பிய பின் உடனடியாக உடைகளை மாற்றவும். இல்லையெனில் சளி, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
Image Source: Freepik