Diwali 2023: பண்டிகை காலங்களில் உணவு முறைக்கு கட்டுப்பாடு விதிப்பது சிரமம் தான். வருடத்திற்கு ஒருநாள் என பண்டிகை நாட்களில் உணவுகளையும், பலகார வகைகளையும் கட்டுப்பாடு இல்லாமல் புகுந்து விளையாடவோம்.
பண்டிகை காலங்களில் இதுபோல் உணவுகளை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இதற்கு முன்கூட்டியோ அல்லது பண்டிகை தினத்திற்கு பிறகோ இதை சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும். அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
செரிமான பிரச்சனைகளை சரி செய்வது எப்படி?
செரிமான பிரச்சனைகள் என்பது உடலில் செரிமான அமைப்பு என்னும் முக்கியமான ஆனால் சிக்கலான பகுதியாகும். இது வாயிலிருந்து மலக்குடல் வரை பரவுகிறது. உடலுக்கு பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. உடல் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இந்த செரிமானத்தில் பிரச்சனை வந்தால் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வேண்டும். இல்லையெனில் இது நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும்.
கெமோமில் டீ
கெமோமில் பூக்கள் நன்கு காய வைத்து உலர வைத்து பின் பயன்படுத்தப்படுகிறது. சுடு தண்ணீரில் அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு டீ தயாரித்து மக்கள் அருந்துகின்றனர்.
தசைபிடிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் குடல் நோய்க்குறி போன்ற பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு கெமோமில் ஒரு தீர்வாக இருக்கும். இதன் அழற்சி மற்றும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் குடல் தசைகளை ஆற்றும் மற்றும் செரிமானத்தால் உண்டாகக்கூடிய வயிற்றுவலி மற்றும் அசெளகரியத்தை போக்கும். க்ரீன் டீயும் குடிக்கலாம்.
தண்ணீர் - 1 கப்
கெமோமில் டீ - 1 டீஸ்பூன்
ஒரு கப் தண்ணீரில் கெமோமில் டீ சேர்க்கவும். இதை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். இதில் தேன் சேர்ப்பதற்கு முன்பு குளிர விடவும். இளஞ்சூட்டோடு இதை குடிக்கவும். செரிமானத்தில் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும்.
இஞ்சி
இஞ்சி சிறுதுண்டுகளாக நறுக்கியது - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
தேன் - இனிப்புக்கேற்ப
ஒரு கப் தண்ணீரில் இஞ்சியை தோலுரித்து நறுக்கிய துண்டுகளை நசுக்கி சேர்க்கவும். பாத்திரத்தில் கொதித்தவுடன் வடிகட்டி, ஆறியதும் தேன் சேர்த்து குடிக்கவும். இளஞ்சூடாக குடிக்கவும். உணவுக்கு அரை மணி நேரம் முன்பு அல்லது படுக்கைக்கு முன் என தினமும் இரண்டு வேளை இதை குடிக்கலாம்.
இஞ்சி செரிமான பிரச்சனைகளை போக்கும் சிறந்த மூலிகை. இதன் கார்மினேடிவ் தன்மை வீக்கம் மற்றும் வாயுக்களை அகற்ற உதவுகிறது. மேலும் செரிமானப் பிரச்சனையால் உண்டாக கூடிய குமட்டல் மற்றும் வாந்தியின் அறிகுறிகளை கட்டுப்படுத்துகிறது.
மல்லி விதைகள்
தனியா விதைகள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
தேன் - தேவைக்கு
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தனியா விதைகள் சேர்த்து கொதிக்க விடவும். இதை இறக்கி குளிர வைத்து வடிகட்டவும். பிறகு தேன் சேர்த்து குடிக்கவும். தேநீரை குளிர்வித்து சேர்த்து உடனே குடிக்க வேண்டும். இதை தினமும் ஒரு வேளை குடித்தால் போதுமானது.
கொத்துமல்லி விதைகள் அதாவது தனியா விதைகளின் கார்மினேடிவ் விளைவுகள் வயிற்று வலியை குணப்படுத்த உதவுகிறது. செரிமானம், வாயு மற்றும் குடல் பிடிப்பை சரி செய்ய உதவுகிறது.
பூசணிக்காய்
பூசணிக்காய் - 1 கப் (சிறிய கிண்ணத்தில் நறுக்கப்பட்டவை)
பூசணிக்காயை வெட்டி சிறு துண்டுகளாக உங்களுக்கு பிடித்தமாக சமைக்க வேண்டும். இதை ஸ்மூத்தியாகவோ அல்லது சூப்களாகவோ செய்து சாப்பிடலாம். செரிமான பிரச்சனை கொண்டிருப்பவர்கள் வாரத்தில் ஒரு முறை சாப்பிட வேண்டும்.
பூசணிக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்டவை. இது ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளவை. இது ஜீரணிக்க எளிதானது. செரிமானத்தால் வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்தது.
புதினா
புதினா இலைகள் - சிறிதளவு
தண்ணீர் - 2 கப்
தேன் - இனிப்புக்கேற்ப
புதினா இலைகளை நசுக்கி இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேர்க்கவும். இவை நன்றாக கொதித்ததும் அதை இறக்கி குளிரவைக்கவும். பிறகு தேன் சேர்த்து குடிக்கவும். தினமும் 2 வேளை குடித்து வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
புதினாவில் உள்ள மெந்தோல் அழற்சி எதிர்ப்பு ஆண்டிஸ்பாஸ்மோடிக் செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது. இது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. இது செரிமானம் தொடர்புடைய வயிற்று வலி மற்றும் அசெளகரியத்தை தணிக்கும்.
குமட்டல் நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் புதினா சேர்க்க வேண்டாம். இது நிலையை மோசமடைய செய்யும்.
பெருஞ்சீரகம்
பெருஞ்சீரக விதைகள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து இறக்கி குளிர்ந்தவுடன் இந்த நீரை குடிக்கலாம். தினமும் 3 முறை குடித்து வந்தால் செரிமான மண்டலம் சீராகும்.
பெருஞ்சீரகம் பெரும்பாலும் கார்மினேடிவ் மற்றும் செரிமான உதவியாக பயன்படுத்தப்படுகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் வயிற்று வலி மற்றும் வீக்கம் பெருங்குடல் தொடர்புடைய வயிற்று அசெளகரியத்தை நீக்குகிறது.
வைட்டமின் டி
செரிமான மண்டலம் சீராக வேலை செய்ய வைட்டமின் டி முக்கியம். உணவில் தயிர், மீன், தானியங்கள், சோயா மற்றும் முட்டை போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுக்கலாம். சூரிய ஒளியிலிருந்து உடல் தானாகவே வைட்டமின் டி பெற்றுவிடமுடியும்.
இதையும் படிங்க: Yoga For Pneumonia: நிமோனியா காய்ச்சலில் இருந்து உங்களை பாதுகாக்கும் யோகாசனம்!
வைட்டமின் டி ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை மீட்டெடுக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. அழற்சி குடல் நோய் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
Pic Courtesy: FreePik