Tomato For Skin: முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி பளீரென ஆக தக்காளியை இப்படி பயன்படுத்துங்க!

  • SHARE
  • FOLLOW
Tomato For Skin: முகத்தில் உள்ள கருமைகள் நீங்கி பளீரென ஆக தக்காளியை இப்படி பயன்படுத்துங்க!


How to make tomato face pack for glowing skin : நம் அழகை பராமரிக்க பல வகையான நடைமுறைகளை பின்பற்றுகிறோம். ஏனென்றால், பளபளப்பான சருமத்தை அனைவரும் விரும்புவதே இதற்குக் காரணம். பணம் செலவழிக்காமல், வெளியில் அலையாமல் வீட்டிலேயே பளபளப்பாக மாற்ற யார் தான் ஆசைப்பட மாட்டார்கள்.

அப்படி நீங்களும் விரும்பினால் தக்காளியை முகத்திற்கு பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு மிகவும் நல்லது. தக்காளியை வைத்து வீட்டில் விதவிதமான ஃபேஸ் பேக் செய்து பயன்படுத்துவது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்

தக்காளி மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

தக்காளி சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் தயிரை கலந்து பயன்படுத்தினால், சருமம் சீரானதாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1.
தயிர் - 2 ஸ்பூன்.

தக்காளி மற்றும் தயிர் ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

  • ஃபேஸ் பேக் தயார் செய்ய முதலில் தக்காளியை மசித்து கொள்ளவும்.
  • அதை ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
  • பிறகு அதனுடன் தயிர் சேர்த்து இரண்டையும் நன்றாக கலக்கவும்.
  • இப்போது அதை உங்கள் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • அதன் பிறகு, உங்கள் முகத்தை சாதாரண நீரில் சுத்தம் செய்து, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

குறிப்புகள்: உங்கள் முகத்தை கழுவ சூடான நீரை பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Black Neck Remedies: கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சிம்பிள் டிப்ஸ்!

தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்

தக்காளியுடன் தேனைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பதோடு, மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம். இந்த ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

தக்காளி - 1 அரைத்தது.
தேன் - 1 ஸ்பூன்.

தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

  • இதற்காக, முதலில் தக்காளியை மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
  • இப்போது அதில் தேன் சேர்க்கவும்.
  • பின் இந்த கலவையை நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.
  • இதற்குப் பிறகு, 15-20 நிமிடங்கள் விட்டு விடுங்கள்.
  • பின்னர் உங்கள் முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்து மாய்ஸ்சரைசர் தடவவும்.

Image Credit: freepik

Read Next

Skin Care Tips: நீங்கள் எப்பவும் இளமையாக தெரியனுமா? அப்போ இவற்றை முகத்தில் தடவுங்க

Disclaimer