Japanese Exercises To Lose Belly Fat: உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது, வயிறு, தொடை மற்றும் முகம் ஆகியவற்றை முதலில் பாதிக்கும். உடலில் கொழுப்பின் அளவு அதிகமாகும் போது, அவை வயிற்றி தான் முதலில் தேங்க ஆரமிக்கும். வயிற்றில் தேங்கும் இந்த பிடிவாதமான கொழுப்பு உங்கள் உடலின் கட்டமைப்பைக் கெடுப்பது மட்டுமல்லாமல், பல உடல்நலப் பிரச்சினைகளையும் உருவாக்குகிறது. எனவே, உடலை சரியான இயக்கத்துடன் வைப்பது மிகவும் அவசியம்.
உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் போது, நாம் சமச்சீர் மற்றும் குறைந்த அளவு கலோரி உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், தொப்பையைக் குறைக்கும் சில பயிற்சிகளையும் செய்ய வேண்டும். நம்மில் பலர் ஜப்பானியர்களை பார்த்து ஒரு முறையாவது நினைத்திருப்போம், “எப்படி இவர்கள் எல்லாம் தொப்பையே இல்லாமல் ஒல்லியாக மற்றும் வெள்ளியாக இருக்கிறார்கள் என”.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Reduce Chest Fat: மார்பு கொழுப்பை குறைப்பது எப்படி?
அதற்கு காரணம் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி தான் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உங்கள் வொர்க்அவுட்டில் ஜப்பானியப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், உங்கள் தொப்பையை குறைக்க உதவும். தொப்பையை குறைக்க உதவும் 5 ஜப்பானிய பயிற்சிகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தொப்பையை குறைக்க உதவும் 5 ஜப்பானிய உடற்பயிற்சிகள்

Toe Touch
இந்த பயிற்சியைச் செய்யும்போது, உங்கள் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள தடைகள் இறுகும். மேலும், இந்த வொர்க்அவுட் உடலில் சேரும் பிடிவாதமான கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறிவைத்து எரிக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Exercise To Overcome Stress: மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த உடற்பயிற்சி செய்யுங்க!
சுமோ ஸ்குவாட்ஸ் (Sumo Squats)

ஸ்குவாட் முழு உடல் பயிற்சியாக கருதப்படுகிறது. இது, உங்களின் உள் தொடைகள், வயிறு, பிட்டம் மற்றும் தொடை எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இந்த உடற்பயிற்சி உங்கள் முழு உடலின் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
ரோல்-அப் (Roll-Ups)

இப்பயிற்சியானது தொப்பையை குறைப்பது மட்டுமின்றி முதுகுத்தண்டை வலுப்படுத்தவும் உதவுகிறது. உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் நீங்கள் கண்டிப்பாக இதை சேர்க்க வேண்டும்.
பந்து ட்விஸ்ட் (Ball Twist)

இது தொப்பை கொழுப்பை எளிதாக குறைக்கும் ஒரு பயிற்சி. உட்கார்ந்த நிலையில் உடலை சாய்வாகச் சுழற்றும்போது, வயிற்றுத் தசைகள் இறுகுவதுடன், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இது தவிர, இது முதுகு மற்றும் கைகளின் தசைகளை பலப்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம் : தினமும் உடற்பயிற்சி செய்வது சலிப்பாக இருக்கிறது? ஜாலியாக உடற்பயிற்சி செய்வது எப்படி?
டவல் ஸ்விங்ஸ் (Towel Swings)

இது மிகவும் எளிமையான உடற்பயிற்சி ஆனால் மிகவும் பயனுள்ளது. டவல் ஸ்விங் செய்யும் போது, வயிற்றின் நடுப் பகுதியின் தசைகள் வலுவடைந்து, தொப்பையைக் குறைக்க உதவுகிறது. தொப்பை கொழுப்பைக் குறிவைக்க இது ஒரு பயனுள்ள மற்றும் சிறந்த பயிற்சியாகும்.
Pic Courtesy: Freepik