Pigmentation Remedies: முகமெல்லாம் கருப்பு கருப்பா இருக்கா? இந்த ஐந்து பொருள்கள் போதும்!

  • SHARE
  • FOLLOW
Pigmentation Remedies: முகமெல்லாம் கருப்பு கருப்பா இருக்கா? இந்த ஐந்து பொருள்கள் போதும்!


How To Reduce Face Pigmentation Naturally: இன்றைய காலகட்டத்தில் பலரும் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் போன்றவற்றால் உடல் ஆரோக்கியத்துடன் சரும ஆரோக்கியமத்தையும் பாதிக்கலாம். இதன் காரணமாக சருமத்தில் எரிச்சல், வீக்கம், அரிப்பு, நிறமி தோன்றுதல், கருந்திட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தோன்றலாம். இதில் மிகவும் தொல்லை தரும் விதமாக சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றலாம். இது பலரும் போராடக் கூடிய பொதுவான சீரற்ற சரும பிரச்சனைகளாக சீரற்ற சரும நிறம், கரும்புள்ளிகள் மற்றும் நிறமாற்றம் போன்றவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

இது போன்ற சரும பிரச்சனைகளைத் தீர்க்க சந்தையில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் இரசாயன விளைவுகள் இருக்கலாம். இவை சரும பிரச்சனைகளை மேலும் தூண்டுகிறது. இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கவும், சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுகளைக் குறைக்கவும் சில ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். இதில் சருமத்தில் கருந்திட்டுகளைக் குறைக்கும் இயற்கையான வீட்டு வைத்தியங்கள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dry Hands Remedies: கை வறண்டு போயிருக்கா? இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க

சருமத்தில் கருந்திட்டுகள் குறைய உதவும் வீட்டு வைத்தியம்

கற்றாழை ஜெல்

இது சருமத்தின் நிறமிக்கு உதவும் சிறந்த இயற்கை தீர்வு ஆகும். இந்த ஜெல்லில் அலோயின் உள்ளது. மேலும் கற்றாழையில் சருமத்திற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை ஆற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது நிறமி சிகிச்சைக்கு ஏற்றதாக அமைகிறது. இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து, சருமத்தில் கருந்திட்டுக்கள் உள்ள பகுதிகளில் நேரடியாக தடவ வேண்டும். இதை இரவு முழுவதும் அப்படியே வைத்து, காலையில் கழுவி விட மிகுந்த நன்மை பயக்கும். இதை வழக்கமான பயன்பாட்டுடன் இணைக்கும் போது சருமத்தின் தொனியில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காணலாம்.

மஞ்சள்

மஞ்சள் சிறந்த குணப்படுத்தும் பண்புகளுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது நிறமிக்கு சிறந்த சிகிச்சையளிக்கும் ஒரு மூலப் பொருளாகக் கருதப்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இவை கரும்புள்ளிகளைக் குறைக்கவும், சருமத்தின் நிறத்தை சமன் செய்யவும் உதவுகிறது. இதில் மஞ்சள் ஃபேஸ்பேக் தயார் செய்வதற்கு ஒரு டீஸ்பூன் அளவிலான மஞ்சள் தூளை தேன் அல்லது தயிருடன் கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இந்தக் கலவையைப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். இந்த ஃபேஸ்பேக்கை சிலமுறைப் பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான சரும பொலிவைத் தருகிறது.

எலுமிச்சை சாறு

இதில் உள்ள அதிகளவிலான வைட்டமின் C உள்ளடக்கம் மற்றும் அதன் இயற்கையான ப்ளீச்சிங் பண்புகள் சரும ஆரோக்கியத்திற்கு உதவும் மிகவும் பிரபலமான இயற்கை தீர்வுகளில் ஒன்றாகும். இந்த வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் கரும்புள்ளிகளை ஒளிரச் செய்வதுடன், சரும நிறத்தை சமன் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்த புதிய எலுமிச்சை சாற்றை, ஒரு காட்டன் பேட் ஒன்றில் பிழிந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதே சமயம், இந்த எலுமிச்சை சாறு சருமத்தை சூரிய ஒளிக்கு அதிக உணர்திறன் கொண்டதாக இருப்பதால், சன்ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்சரைசரைப் பின்பற்றுவது முக்கியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Multani Mitti Benefits: வாரத்திற்கு எத்தனை முறை முல்தானி மிட்டியை சருமத்தில் தடவலாம்?

ஆப்பிள் சைடர் வினிகர்

இது ஒரு இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் ஆகும். இவை சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தி, நிறமியை ஒளிரச் செய்கிறது. மேலும் இதில் அசிட்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இதில் லேசான எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள் உள்ளது. இவை புதிய, ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. சருமத்திற்கு ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்த, அதை சம அளவிலான தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் காட்டன் பேட் மூலம் தடவ வேண்டும். இதை சில நிமிடங்கள் வைத்து தண்ணீரில் கழுவிக் கொள்ளலாம். ஆப்பிள் சைடர் வினிகர் வலுவாக இருப்பதால், சருமத்திற்குப் பயன்படுத்துவது சில சமயங்களில் எரிச்சலடையச் செய்யலாம். எனவே இதனைப் பயன்படுத்தும் முன்பாக பேட்ச் டெஸ்ட் செய்வது முக்கியமாகும்.

உருளைக்கிழங்கு சாறு

இது கருந்திட்டுகள் மற்றும் நிறமியைக் குறைக்க உதவும் அறியப்பட்ட சிறந்த தீர்வாகும். இது சருமத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு உருளைக்கிழங்கில் உள்ள கேடகோலேஸ் என்ற நொதிகளே காரணமாகும். இவை நிறமியை குறைக்கவும், கரும்புள்ளிகளை குறைக்கவும் உதவுகிறது. இதைப் பயன்படுத்துவதற்கு, முதலில் உருளைக்கிழங்கைத் துருவி, துணியால் பிழிந்து சாற்றை எடுக்க வேண்டும். இந்த சாற்றைப் பருத்தி பஞ்சைக் கொண்டு நிறமி உள்ள பகுதிகளில் நேரடியாக தடவ வேண்டும். இதை 10-20 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவிக் கொள்ளலாம்.

இந்த வகை இயற்கை வைத்தியங்களை அன்றாட பழக்க வழக்கங்களில் சேர்ப்பதன் மூலம் கருந்திட்டுகள் நிறமியைத் தடுக்க முடியும். இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் சருமத்தின் நிறத்தில் முன்னேற்றத்தைக் காணலாம். எனினும் சில பொருள்கள் சருமத்திற்கு எரிச்சல், ஒவ்வாமை போன்றவற்றை ஏற்படுத்தலாம் என்பதால் இதைப் பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Skin Glow Face Mask: கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் போல உங்க சருமமும் ஆக வேண்டுமா?

Image Source: Freepik

Read Next

Sugar and Skin Health: அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள கொலாஜன் குறையுமா?

Disclaimer