$
Home Remedies for Hyper Pigmentation: பிக்மென்டேஷன் (pigmentation) அல்லது மங்கு என அழைக்கப்படும் முகக்கருமை சரும அழகை முற்றிலும் கெடுக்கும். இது சூரிய ஒளி, ஹார்மோன் மாற்றம், வயது அதிகரிப்பு என பல காரணங்களால் ஏற்படலாம். இவற்றை நீக்க சந்தைகளில் பல விலை உயர்ந்த கிரீம்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இது சரியான ரிசல்ட்டை நமக்கு தருவத்தில்லை. அதற்கு பதில் இதில் சேர்க்கப்படும் கெமிக்களால் சருமத்திற்கு தீங்கு ஏற்படும்.
ஆனால், இந்த பிரச்சினைக்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தீர்வு காணலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி சருமத்தை எப்படி ப்ளீச்சிங் செய்வது என்றும், கரும்புள்ளிகளை எப்படி நீக்குவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : சருமப் பொலிவு அதிகரிக்க வீட்டிலேயே ஸ்கின் பாலிஷிங் செய்வது எப்படி?
சரும ஆரோக்கியத்திற்கு உருளைக்கிழங்கு சாறு

பிக்மென்டேஷன் பிரச்சனையை போக்க உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதற்கு முதலில் உருளைக்கிழங்கைத் துருவி அதன் சாற்றை தனியே பிழிந்து எடுக்கவும். இப்போது, ஒரு காட்டன் எடுத்து அதில் உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவவும். பின்னர், 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
இறுதியாக, சருமத்தை குளிர்ந்த தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யவும். நீங்கள் சாறு எடுக்கும் கடினமான வேலை செய்ய விரும்பவில்லை என்றால், உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி வட்ட துண்டுகளாக வெட்டவும். இப்போது உருளைக்கிழங்கு துண்டுகளை நேரடியாக தோலில் தேய்க்கவும். சுமார் 10-15 நிமிடங்கள் விட்டு, பின்னர் தண்ணீரில் கழுவவும்.
உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரி

உங்கள் சருமம் சென்சிட்டிவாக இருந்தால், உருளைக்கிழங்குடன் வெள்ளரிக்காயையும் பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்திற்கு குளிர்ச்சியையும் தருகிறது. இதற்கு ஒரு உருளைக்கிழங்கு மற்றும் அரை வெள்ளரிக்காயை எடுத்து கழுவி தோலுரித்து நறுக்கவும். இப்போது அதை ஒரு மென்மையான பேஸ்ட் ஆக அரைக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் தோலில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும். இறுதியாக, சுத்தமான தண்ணீரில் தோலை சுத்தம் செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம் : Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!
உருளைக்கிழங்கு மற்றும் கற்றாழை ஜெல்

உருளைக்கிழங்கு மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவை சரும நிறமிகளை நீக்கவும், அழகான சருமத்தைப் பெறவும் உதவும். இது சரும நிறமிகளை நீக்குவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதற்கு இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு உருளைக்கிழங்கை நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இப்போது உங்கள் சருமத்தை சுத்தம் செய்து, தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை தோலில் தடவவும். சுமார் 20 நிமிடங்கள் இப்படியே விடவும். இறுதியாக, சுத்தமான தண்ணீரில் தோலை சுத்தம் செய்யவும்.
உருளைக்கிழங்கு மற்றும் பால்

உருளைக்கிழங்குடன் பாலைப் பயன்படுத்துவது சருமத்தை பீல் செய்யவும், அதன் அமைப்பை மேம்படுத்தவும் மற்றும் மங்குகளை அகற்றவும் உதவுகிறது. உண்மையில், பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தின் அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இதைப் பயன்படுத்த, உருளைக்கிழங்கை நறுக்கி அரைக்கவும். இப்போது தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை உங்கள் தோலில் தடவி 15-20 நிமிடங்கள் உலர விடவும். இறுதியாக, தண்ணீரின் உதவியுடன் உங்கள் சருமத்தை சுத்தம் செய்யவும்.
Pic Courtesy: Freepik