Heavy Rains in TN: வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த கேட்ஜெட்!

  • SHARE
  • FOLLOW
Heavy Rains in TN: வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த கேட்ஜெட்!


Heavy Rains in TN: உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அனைத்து விஷயங்களும் விரல் நுணியில் வந்துவிட்டது. இதில் மனிதர்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயம் மட்டும் விதிவிலக்கு அல்ல. மனிதர்களின் ஆரோக்கியம் சார்ந்து பல கேட்ஜெட்கள் சந்தையில் கிடைக்கத் தொடங்கிவிட்டன.

இதில் சில கேட்ஜெட்கள் ஆரோக்கியம் சார்ந்து பயன்படுத்துவது என்பது மிக எளிது. மேலும் சில கேட்ஜெட்களை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம். குறிப்பாக வீட்டில் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்கள் இருந்தால் கட்டாயம் ஆரோக்கியம் சார்ந்த சில கேட்ஜெட்களை வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம்.

வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆரோக்கிய கேட்ஜெட்கள்

அதேபோல் மழைக்காலத்தில் சில கேட்ஜெட்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டியது ரொம்ப நல்லது. இந்த ஆரோக்கியம் சார்ந்த கேட்ஜெட்களே முழு தீர்வு என்று கூறிவிட முடியாது. அவசரத்திற்கு இந்த வகை கேட்ஜெட்கள் பயனுள்ளதாக இருக்கும். அப்படி ஆரோக்கியம் சார்ந்த என்னென்ன கேட்ஜெட்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என பார்க்கலாம்.

தொடர்பில்லா தெர்மோமீட்டர்

கொரோனா காலக்கட்டத்தில் தொடங்கி தொடர்பில்லா தெர்மோமீட்டர் கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வீட்டிலேயே காய்ச்சல் வருவது போன்ற அறிகுறி இருந்தால் இந்த தெர்மோமீட்டர் மூலம் உடல் வெப்பநிலையை கண்டறி்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம்.

பள்ஸ் ஆக்ஸி மீட்டர்

இரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை கண்டறிய பள்ஸ் ஆக்ஸி மீட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவை கண்டறியும் ஒரு கருவி கையுடன் இருந்தால் அது மிகவும் உதவியாக இருக்கும். இது மிகவும் சின்னது, அதாவது கையளவு ஆக்ஸி மீட்டர் இதுவாகும்.

யூவி சானிடைசர் மற்றும் லேம்ப்ஸ்

மழைக்காலத்தில் பலவகை நோய்கள் தொற்றாக பரவ வாய்ப்பிருக்கிறது. வேலை காரணமாகவோ, பொருட்கள் வாங்கவோ வெளியே சென்று வீட்டுக்கும் திரும்பும் போது தொற்று பரவாமல் இருக்க கைகளை சோப்பு போட்டு கழுவுவது நல்லது. வாங்கி வரும் பொருட்களை மஞ்சள் தண்ணீர் கொண்டு கழுவுவதும் நல்லது.

அப்படி மீறி இருக்கும் கிருமிகளை கண்டறிய யுவி சானிடைசிங் மெஷின் மற்றும் விளக்குகள் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் நுண்கிருமிகளை கண்டறியவும், அதை அழிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆவி பிடிக்கும் ஸ்டீமர் கருவிகள்

சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க ஆவி பிடிக்கும் ஸ்டீமர் கருவிகளை பயன்படுத்தலாம். ஆவி பிடித்தால் நாசியில் உள்ள தொற்று நீங்கும். அதேபோல் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். அதேபோல் ஆவி பிடிப்பதன் மூலம் தொற்றுகள் நுரையீரலை சென்றடையாமல் தவிர்க்கலாம்.

குளுக்கோமீட்டர்

சர்க்கரை நோய் என்பது இப்போது வளர்ந்து வரும் பெரிய நோய்களில் ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலானோர் சர்க்கரை நோயாள் பாதிக்கப்படுகின்றனர். வயது வரம்பின்றி சர்க்கரை நோய் வரத் தொடங்கிவிட்டது. அப்படி, உங்கள் வீட்டில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால் இந்த கருவி வீட்டில் இருப்பது மிக நல்லது.

சர்க்கரை நோயாளிகள் உடலின் இரத்த குளுக்கோஸ் அளவை கண்டறிய உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் குளுக்கோமீட்டரை அவ்வப்போது பயன்படுத்துவது மிக நல்லது.

Image Source: Freepik

Read Next

Coffee Side Effects: தினசரி காபி குடிப்பீங்களா? இந்த பிரச்சனைகளை சந்திக்க ரெடியா இருங்க!

Disclaimer

குறிச்சொற்கள்