Hemoglobin Level Increasing Drinks: ஹீமோகுளோபின் என்பது உடலில் சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒரு சிறப்பு புரதமாகும். இது உடலைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் நுரையீரலிலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் போது ஆக்ஸிஹீமோகுளோபினாக கொண்டு செல்ல உதவுகிறது. மேலும் உடலிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை மீண்டும் கொண்டு செல்ல உதவுகிறது.
உடலில் ஹீமோகுளோபின் எங்கு உள்ளது?
ஹீமோகுளோபின்கள் எலும்பு மஜ்ஜை செல்களில் தயாரிக்கப்படுகிறது. இதுவே பின்னர் இரத்த சிவப்பணுக்களாக மாறுகின்றன. இரத்த சிவப்பணுக்களில் மட்டுமே காணப்படும் இந்த புரதம் இரத்த சிவப்பணுக்களின் அதிக எடையை உருவாக்குகிறது. அதிக ஹீமோகுளோபினைப் பெற அதிக இரும்புச்சத்துள்ள உணவுகள் அல்லது பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் அளவுக்கு அதிகமா பாதாம் சாப்பிடுவதில் இத்தனை விளைவுகள் இருக்கா?
இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்
உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து இரத்த சோகை பிரச்சனை ஏற்படலாம். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக மூச்சுத் திணறல், சோர்வு, மார்பில் வலி, வெளிர் தோல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்கு இரும்புச்சத்து நிறைந்த ஆதாரங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் பானங்கள்
சில சுவையான மற்றும் சத்தான பானங்களை உட்கொள்வதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.
கரும்புச்சாறு
இது ஒரு இனிமையான பானமாக மட்டுமல்லாமல் இரும்பு மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்களின் நல்ல ஆதாரமாகவும் கருதப்படுகிறது. இதன் இயற்கையான இனிப்பு, இரும்புச் சத்து உட்கொள்ளலை அதிகரித்து புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சத்தான பானமாக அமைகிறது.
பீட்ரூட் சாறு
பீட்ரூட்டில் இரும்பு, மாங்கனீஸ், ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பீடைன் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை சிறப்பாக பயன்படுத்த உதவுகிறது. மேலும் ஒவ்வொரு 100 கிராம் பீட்ரூட்டில் 0.8 மில்லிகிராம் அளவு இரும்புச்சத்து உள்ளது.
ஆம்லா சாறு
இந்திய நெல்லிக்காய் என்ற ஆம்லாவில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சாற்றை தினந்தோறும் உட்கொள்வது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இரும்புச்சத்துக்களை உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது. இது புத்துணர்ச்சியைத் தரும் வகையிலும், ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Energizing Foods: பட்டயக் கிளப்பும் வெயிலிலும் உற்சாகமா இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க
மாதுளை சாறு
இது சுவையான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். மாதுளையில் இரும்பு மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது ஹீமோகுளோபின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலை ஆதரிக்கும் சிறந்த பழமாகும். இது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குகிறது.
சத்து சர்பத்
இது வறுத்த சானா பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் பானமாகும். இந்த பானம் தயார் செய்ய தண்ணீர், எலுமிச்சைச் சாறு மற்றும் மசாலாப் பொருள்கள் தேவைப்படுகிறது. இந்த சத்து சர்பத் இரும்புச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக அமைகிறது. இதன் தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சிறந்த தேர்வாக அமைகிறது.
புதினா சாறு
புதினா இலைகள் இரும்புச்சத்து நிறைந்தவையாகும். அந்த வகையில் 100 கிராம் புதினா இலைகளில் சுமார் 16 மில்லிகிராம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதற்கு தினமும் காலையில் ஒரு கப் புதினா சாறு எடுத்துக் கொள்வது 4 மில்லிகிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது உடலில் இரும்புச்சத்து அளவை அதிகரிக்க உதவுகிறது.
இந்த வகை சாறுகளை அருந்துவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க
Image Source: Freepik