Dry Fruits laddu Recipe: விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முழு முதற் கடவுளான விநாயகருக்கு பிடித்த உணவுகளை சமைத்து இறைவனுக்கு படைத்து பூஜிப்பது வழக்கம். எந்த பண்டிகையாக இருந்தாலும் நாம் இனிப்பு உணவுகளை தயாரிப்பது வழக்கம். அவற்றை நாம் மகிழ்ச்சியாக உண்டு மகிழ்ந்தாலும், நமது வீட்டில் இருக்கும் நீரிழிவு நோயாளிகள் அந்த இனிமையான உணவுகளை சுவைக்க முடியாமல் வருத்தப்படுவார்கள்.
பொங்கல், பூரண கொழுக்கட்டை, பாயாசம் என அனைத்திலும் இனிப்பு இருப்பதால், இவை அவர்களின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்ற அச்சம். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரும் ட்ரை ஃபுரூட் லட்டு ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : டைப்-2 நீரிழிவு மூளையின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
இனிப்பு இல்லாத ட்ரை ஃபுரூட் லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
ஏலக்காய் - 2-3.
முந்திரி - 1 கப்.
திராட்சை - 1/4 கப்.
தேங்காய் துருவியது - 1கப்.
நெய் - 2 ஸ்பூன்.
ரவை - 1 கப்.
வெல்லம் - 1 துண்டு.
பேரீட்சை - 1/4 கப்.
தாமரை விதை - 1 கப்.
பாதாம் - 1 கப்.
ட்ரை ஃபுரூட் லட்டு செய்முறை:
இந்த லட்டு செய்ய முதலில் பாதாம், தாமரை விதை, உலர் திராட்சை, பேரீட்சை, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக வறுக்கவும். இப்போது இந்த வறுத்த பொருட்களை ஒரு தனி தட்டில் எடுத்து வைக்கவும்.
அதன் பிறகு, அதே கடாயில் தேங்காய் துருவல், பாதாம், ரவை சேர்த்து நன்கு வறுக்கவும். லேசாக வெந்ததும் அதனுடன் வெல்லம் சேர்த்து கலக்கவும்.
இப்போது நெய், மற்றும் உலர் பழங்களை கரடுமுரடாக அரைத்து, நன்கு கலக்கவும். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து கைகளில் நெய் தடவி லட்டுகளாக உருட்டவும்.
இந்த பதிவும் உதவலாம் : இரவில் ஏற்படும் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்!
கலவை சிறிது சூடாக இருந்தால் லட்டு எளிதாக செய்யலாம். இப்போது, சர்க்கரை நோயாளிகளை காக்கும் ட்ரை ஃபுரூட் லட்டு தயார்.
ட்ரை ஃபுரூட் லட்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
இனிப்பு இல்லாத ட்ரை ஃபுரூட் லட்டு உடலில் உள்ள பலவீனம் நீங்கி உடலுக்கு பலம் கிடைக்கும்.
ட்ரை ஃபுரூட் லட்டுவில் தேங்காயை கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்தசோகை நீங்கி நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ட்ரை ஃபுரூட் லட்டு சாப்பிடுவதால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைவாக காணப்படும். இது கூடுதல் உணவை சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Diabetes Diet: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 7 காலை உணவு விருப்பங்கள்
உங்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், இந்த லட்டுகளை சாப்பிடலாம். இதில் உள்ள விட்டமின்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
ட்ரை ஃபுரூட் லட்டுவில் உள்ள தாமரை விதை மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. நெய் எலும்புகளை வலுவாக்கும். அவற்றை அவளாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Pic Courtesy: Freepik