எக்காரணம் கொண்டு இறால் உடன் இந்த உணவுகளைச் சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?

கடல் உணவுகளில், மீனுக்கு அடுத்தப்படியாக இறால் பெரும்பாலானோருக்கு பிடித்த உணவாக உள்ளது. இறால் வறுவல், இறால் சம்மந்தி, இறால் கறி போன்ற இறால் உணவுகள் பிரபலமானவை. இருப்பினும், சில உணவுகளுடன் இறாலை சாப்பிடுவது சிலருக்கு திடீர் ஒவ்வாமை மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். 
  • SHARE
  • FOLLOW
எக்காரணம் கொண்டு இறால் உடன் இந்த உணவுகளைச் சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?

இந்த உணவுகளை இறாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது:

இறாலுடன் பால் அல்லது கிரீம் சாஸ் சேர்ப்பது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் பால் பொருட்களில் உள்ள கால்சியம், இறாலில் உள்ள புரதங்களுடன் இணையும் போது, அது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இது செரிமானக் கோளாறு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும்.

 இறாலுடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்:

ஏனெனில் இறாலில் மிதமான அளவு இரும்புச்சத்து உள்ளது. சிவப்பு இறைச்சி அல்லது கீரை போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் இறாலை சாப்பிடுவது இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கும். இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இது நன்மை பயக்கும் என்றாலும், கூடுதல் இரும்புச்சத்து தேவையில்லாதவர்களுக்கு அதிகப்படியான இரும்புச்சத்து உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்:

இறாலுடன் ரொட்டி, பாஸ்தா போன்ற மாவுச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இறாலுடன் அதிக ஸ்டார்ச் சாப்பிடுவது வயிறு உப்புசம் மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

 சிட்ரஸ் பழங்கள் கூடவே கூடாது:

இறால் உணவுகளில் சிறிதளவு எலுமிச்சை பெரும்பாலும் பிழியப்படுகிறது. ஆனால் இறாலுடன் அதிகமாக சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனென்றால், சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம், இறாலில் உள்ள புரதங்களுடன் இணைந்தால் வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.

Image Source: Freepik 

Read Next

Low Testosterone: டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்