Endovascular Surgery: 70 வயதான முதியவர் ஒருவரின் அடிவயிற்று பெருந்தமனியில் கட்டி ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் வெடித்து உயிரிழக்கலாம் என்ற நிலை இருந்துள்ள நிலையில் அவர் மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்று சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இருந்த கட்டி எப்படி கண்டறியப்பட்டு வெற்றிகரமாக அகற்றி உயிர் பிழைக்க வைத்து என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இதுகுறித்து அளித்த விளக்கத்தை சற்று விரிவாக பார்க்கலாம். கார்டியாக் சயின்சஸ் துறையின் தலைவர் டாக்டர். சிவக்குமார், இரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். பிரபு குமரப்பன் ஆகியோர் ஒருங்கிணைந்து, சருமத்தின் வழியாக EVAR என அறியப்படும் மருத்துவ செயல்முறையை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க: World Obesity Day 2025: ஆபத்து.! அபாயத்தை உருவாக்கும் உடல் பருமன்.! என்னவெல்லாம் செய்யும் தெரியுமா.?
இதய மயக்க மருந்தியல் துறையின் தலைவர் டாக்டர். S.குமார் மற்றும் அவர்களது குழுவினரின் ஆதரவுடன் இச்செயல்முறை, நிகழ்த்தப்பட்டது, ஃபுளோரோஸ்கோப்பிக் இமேஜிங் வழிகாட்டலின் கீழ், நோயாளியின் க்ராயின் பகுதியில் சிறிய துளையிட்டு, ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருக்கிறது.
கடினமான அறுவை சிகிச்சை செய்து முதியவரை காப்பாற்றிய மருத்துவர்கள்
பெரிய கீறல்கள் இடுவது மற்றும் பொது மயக்க மருந்து வழங்குவது ஆகியவற்றிற்கான தேவையை EVAR அவசியமற்றதாக்கி விடுகிறது. இச்செயல்முறை மேற்கொள்ளப்பட்ட போது உடலின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மயக்க மருந்து அளிக்கப்பட்டிருந்ததால், நோயாளி முழு உணர்வுடன் இருந்துள்ளார். க்ராயின் பகுதியில் செய்யப்பட்ட நுழைவு துளைகளை மூடுவதற்கு தனி உத்திகளை மருத்துவக் குழுவினர் பயன்படுத்தினர்.
இதன் காரணமாக, தையலிடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை. இந்த புதுமையான அணுகுமுறையானது, அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்கு ஏற்படும் அசௌகரியத்தை பெரிதும் குறைப்பதற்கு உதவி, மீண்டும் இயல்புநிலைக்கு திரும்புவதை துரிதமாக்கியிருக்கிறது.
முக்கிய கட்டுரைகள்
பாதுகாப்பாக உள்ள அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதியவர்
அறுவைசிகிச்சை செய்யப்பட்டதிலிருந்து மூன்று நாட்களுக்குள் இந்த முதியவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அதற்குப் பிறகு மூன்று மாத கண்காணிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பது இந்த சிகிச்சையின் பயனளிக்கும் திறனை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது.
முதியவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான இந்த வெற்றிகர சிகிச்சை குறித்து கார்டியாக் சயின்சஸ் துறையின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர். கணேசன், டாக்டர். சம்பத்குமார், டாக்டர். செல்வமணி மற்றும் டாக்டர். ஜெயபாண்டியன் ஆகியோருடன் இணை ஆலோசகர் டாக்டர் தாமஸ் சேவியர், மற்றும் திரு. திலீப் ஆகியோர் இணைந்து விளக்கம் அளித்துள்ளனர்.
அடிவயிற்று வலியோடு வந்த முதியவர்
கார்டியாக் சயின்சஸ் துறையின் தலைவர் டாக்டர். சிவக்குமார் இது குறித்து கூறுகையில், “கடுமையான அடிவயிற்று வலியோடு இந்நோயாளி எங்களிடம் அழைத்து வரப்பட்டிருந்தார். ஒரு மாத காலத்திற்கு அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை. அவரது அடிவயிற்று தமனியில் ஆபத்தான வீக்கம் இருப்பதை கண்டறிந்தோம். அதில், ஒரு டயரின் பலவீனமான பகுதி வீங்கி, புடைத்துக் கொண்டிருப்பது போன்றதே இது.
இந்த வீக்கமானது, 7.2 செ.மீ. அளவுடன் பெரிதாகவே இருந்தது. இந்த வீக்கம், அவரது இடுப்புத் தமனிகளை பாதித்திருந்தன. பெருந்தமனியில் கிழிசல் ஏற்படுகின்ற கடும் ஆபத்தை இந்த வீக்கமானது ஏற்படுத்தக்கூடியது. அவ்வாறு ஏற்படுமானால், சில நிமிடங்களுக்குள் உயிரிழப்பு நிகழ்ந்து விடும்.
அவரது வயதை கருத்தில் கொண்டு, அறுவை சிகிச்சை அல்லாத EVAR சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தோம். பெருந்தமனியில் துல்லியமான பழுதுநீக்கல் பணியை செய்வதற்கு இந்த நவீன செயல்முறை உதவியிருக்கிறது”.
இரத்தநாள அறுவைசிகிச்சை
இரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். பிரபு குமரப்பன் சிதம்பரம் இந்த அறுவைசிகிச்சை உத்தியின் பலன்கள் குறித்து விளக்கமளித்தார். சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மீண்டு குணமடையும் காலஅளவை கணிசமாக குறைக்கும் விதத்தில் துல்லியமான, திறன்மிக்க பழுதுநீக்கல் பணியை இந்த நவீன உள்நாள சிகிச்சை அணுகுமுறை சாத்தியமாக்குகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில், “வழக்கமான EVAR செயல்முறையில் முதுகுத்தண்டில் மயக்க மருந்து செலுத்தி அல்லது பொது மயக்க மருந்து வழங்கி, ஸ்டென்ட் - ஐ செலுத்துவதற்கு க்ராயின் பகுதியில் அறுவைசிகிச்சைக்கான கீறல்கள் போடப்படும். ஆனால், இந்நோயாளிக்கு நாங்கள் மேம்பட்ட, சருமத்தின் வழியாக உள்ள வழிமுறையை பயன்படுத்தினோம். இந்த கீறல்களை செய்வதற்குப் பதிலாக, க்ராயின் பகுதியில், சிறிய துளைகளின் வழியாக, சருமத்தின் ஊடாக, தமனிகளை அணுகினோம்.
பாதுகாப்பாக பொறுத்தப்பட்ட ஸ்டென்ட்
அதன்பிறகு எக்ஸ்ரே இமேஜிங்கைப் பயன்படுத்தி, பெருந்தமனியில் அழற்சி இருந்த பகுதிக்கும், இடுப்புத் தமனி பகுதிக்கும் பொருத்தப்பட வேண்டிய ஸ்டென்ட் - ஐ எடுத்துச் சென்றோம். போடப்பட்ட சிறிய துளைகள் சிறப்பு சாதனங்கள் மூலம் மூடப்பட்டன.
குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்விழப்பு மருந்தை பயன்படுத்தியதால், சிகிச்சை செயல்முறை முழுவதிலும் இந்நோயாளி முற்றிலும் சுயநினைவுடன் நிலையில் இருந்தார் என்பது முக்கியமானது.
மேலும் படிக்க: Morning walk vs evening walk: எடை குறைய காலை நடக்கனுமா.? அல்லது மாலை நடக்கனுமா.?
சிக்கலான இரத்தநாளப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க மேம்பட்ட உள்நாள சிகிச்சை உத்திகள் எந்த அளவிற்கு திறன் மிக்கதாக இருக்கின்றன என்பதை இந்த வெற்றிகர சிகிச்சை நேர்வு சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் நோயாளிகள் இயல்புநிலைக்கு திரும்பலாம், மேலும் பெரிய கீறல்கள் இல்லாத குறுகிய ஊடுருவல் உத்தியின் பலன்களை பெற்று பயனடையலாம்.
இச்செயல்முறைக்கு அடுத்த நாளன்றே நோயாளியால் எழுந்து நடக்க முடிந்தது. மூன்று நாட்களுக்குள் அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, மூன்று மாத கால மருத்துவ கண்காணிப்பு செயல்முறையானது மேற்கொள்ளப்பட்டது. தற்போது நோயாளி நலமாக இருக்கிறார்.