Stent: ரஜினிகாந்த் உடலில் இருக்கும் ஸ்டென்ட்! ஸ்டென்ட் என்றால் என்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Stent: ரஜினிகாந்த் உடலில் இருக்கும் ஸ்டென்ட்! ஸ்டென்ட் என்றால் என்ன தெரியுமா?

ரஜினிகாந்திற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மூத்த இதயவியல் மருத்துவர் சாய் சதீஷ் கூறுகையில், ரஜினியில் இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தியுள்ளார். திட்டமிட்டபடி அனைத்து சிகிச்சையும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. தற்போது ரஜினி நலமுடன் இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டென்ட் வைத்திய முறை

இதில் கேள்வி என்னவென்றால் ஸ்டென்ட் என்றால் என்ன, அது எதற்கு பொறுத்தப்படுகிறது, அதன் பயன் என்ன என்பதுதான். சமீப காலமாக பலரும் ஸ்டென்ட் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிரூப்பார்கள். ஸ்டென்ட் என்ற வார்த்தையை கேள்வி படாதவர்களுக்கு, இதயம் தொடர்பான சிகிச்சைக்கு செல்லும் பலருக்கும் தீர்வாக இருப்பது இந்த கருவிதான்.

ஸ்டென்ட் என்றால் என்ன?

ஸ்டென்ட் என்பது ஒருவகை கருவி. இது ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இது அடைக்கப்பட்டிருக்கும் இரத்த நாளங்களை விரித்து திறந்து வைக்க உதவுகிறது. இப்படி திறப்பன் மூலம் இது இதய தசைகளுக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை வழங்க வழிவகை செய்கிறது.

இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடைப்புகள் சேரத் தொடங்குகின்றன. இது காலப்போக்கில் தீவிரமடைந்து, இதய செயல்பாட்டையே பாதிக்கிறது. இதயம் ஒழுங்காக துடிக்காமல் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய தடுப்பு உள்ள குழாயில் சரியாக அந்த இடத்தில் ஸ்டென்ட்வ வைக்கப்படும் இது அந்த அடைப்பை அப்படியே குழாயை ஒட்டி விரித்து இரத்த ஓட்டத்தையும் அந்த குழாயின் செயல்பாட்டையும் சீராக்கும்.

ஸ்டென்ட் எப்படி பொருத்தப்படுகிறது?

அறுவை சிகிச்சை செய்யாமல் இரத்த குழாயில் ஸ்டென்ட் எப்படி பொருத்தப்படுகிறது என்ற கேள்வி வரலாம். உங்கள் இடுப்பு, கை, கால், கழுத்து உள்ள இரத்த குழாயில் ஒரு சிறிய ஓட்டை போன்று போட்டு அதன்மூலமாக ஒரு சிறிய நரம்பு வடிவ டியூப்பை செலுத்தி அடைப்பு உள்ள இடத்தை நவீன கருவி மூலம் கண்டறிந்து அந்த இடத்தில் ஸ்டென்ட் பொருத்தப்படும். சமீபகாலமாக இதய பாதிப்பு உள்ள பலருக்கும் இந்த அறுவை சிகிச்சை தான் செய்யப்படுகிறது.

ஒரு ஸ்டென்ட் எவ்வளவு காலம் நீடிக்கும்?

பெரும்பாலான ஸ்டென்ட்கள் உலோக கட்டமைப்புகளால் ஆனது. எனவே நிரந்தரமாக உடலில் இருக்கும். இது இரத்த நாள காப்புரிமையின் லுமினை சரிசெய்யவே வடிவமைக்கப்பட்டவை. பெரும்பாலான சமயங்களில் அது பயன்படுத்தப்பட்ட இடத்திலேயே அப்படியே இருக்கும். எந்தவித சிக்கலையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் சில சமயங்களில் மட்டுமே அங்கு ஆஞ்சியோ அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும்.

Image Source: FreePik

Read Next

World Smile Day: உலக புன்னகை தினத்தின் கதையை தெரிந்துக்கொள்வோமா..

Disclaimer

குறிச்சொற்கள்