Type 2 Diabetes And Its Symptoms: இன்று பரவலாக பெரும்பாலானோர் பாதிக்கப்படும் நோய்களில் நீரிழிவு நோயும் உள்ளது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படும் நோயாகும். குறிப்பாக இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பது, மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை உள்ளிட்ட நவீன வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களால் நீரிழிவு நோய் உண்டாகிறது.
நீரிழிவு நோயின் வகைகள்
நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று டைப் 1 மற்றும் மற்றொன்று டைப் 2. இதில் வகை 1 மரபணு காரணங்களால் பெரும்பாலானோர்க்கு ஏற்படும் நோயாகும். டைப் 2 நீரிழிவு உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஏற்படுவதாகும்.
முக்கிய கட்டுரைகள்
இதில் டைப் 2 நீரிழிவு நோயில் கணையத்தால் உடலின் தேவைக்கேற்ப இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாமல் போகலாம். இந்த சூழ்நிலையில் உடலில் உள்ள ஹார்மோன்களும் சரியாக செயல்படாது. குறிப்பாக அதிக கொழுப்பு, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்பவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அபாயம் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dry Fruits For Diabetics: நீரிழிவு நோயாளிகள் ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவது நல்லதா?
டைப் 2 நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்
டைப் 2 நீரிழிவு பிரச்சனையில் நோயாளியின் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாகலாம். இதனால், இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக உடல் பல்வேறு கடுமையான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். டைப் 2 நீரிழிவால் ஏற்படும் அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
அதிக தாகம்
உயர் இரத்த சர்க்கரை காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணம் அதிக தாகம் எடுப்பதாகும். இந்த அதிகப்படியான தாகத்தால் அதிகளவு தண்ணீர் குடிக்க நேரிடும். இது டைப் 2 நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகும்.
திடீர் எடையிழப்பு
வகை 2 நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக திடீரென எதிர்பாராத உடல் எடையிழப்பு நேரிடலாம். இதற்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் திரவங்களை இழப்பது மற்றும் அதிக கலோரிகளை எரிப்பது போன்றவை அடங்கும். மேலும், நீரிழிவு நோயாளிகள் இரத்த குளுக்கோஸை வளர்ச்சிதை மாற்றம் செய்ய முடியாமல் போகலாம். இது எடை இழப்புக்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Type 2 Diabetes: டைப் 2 நீரிழிவு இளசுகளை தாக்காமல் இருக்க இத ஃபாளோ பண்ணுங்க!
அதிகப்படியான பசி
டைப் 2 நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளில் அதிகம் பசி ஏற்படுவதாகும். இதில் ஒருவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி, அனைத்து குளுக்கோஸூம் இரத்த ஓட்டத்தில் செல்கிறது. இது அதிக இன்சுலின் உற்பத்தி செய்ய கணையத்திற்கு சமிக்ஞையை அனுப்புகிறது. இரத்தத்தில் உள்ள அதிகளவிலான இன்சுலின் அளவுகள், ஹார்மோனை சமன் செய்ய அதிக உணவைக் கோர மூளைக்கு சமிக்ஞை செய்கிறது.
உலர் தோல் மற்றும் வாய்
இந்த வகை நீரிழிவு நோயில் உடல் நிறைய திரவங்களை இழக்க நேரிடலாம். இது வறண்ட வாய் மற்றும் வறண்ட சருமத்திற்கு வழிவகுக்கிறது. இது நீரிழப்பிற்கான அறிகுறிகளாகும். உடலில் எலக்ட்ரோலைட்டுகளில் ஏற்றத்தாழ்வு காரணமாக மற்றும் ஈரப்பத இழப்பு காரணமாக பலரும் தோல் அரிப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
இவை வகை 2 நீரிழிவு நோய் இருப்பதற்கான பொதுவான அறிகுறிகளாகும்.
இந்த பதிவும் உதவலாம்: டைப்-2 நீரிழிவு மூளையின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
Image Source: Freepik