Dragon Fruit Milkshake: டிராகன் பழம் மில்க் ஷேக்ல இவ்ளோ நன்மைகள் இருக்கா? எப்படி செய்யலாம்

  • SHARE
  • FOLLOW
Dragon Fruit Milkshake: டிராகன் பழம் மில்க் ஷேக்ல இவ்ளோ நன்மைகள் இருக்கா? எப்படி செய்யலாம்

அதே சமயம், ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்து மிக்க பழங்களில், தேவையான அளவு பால் மற்றும் ஐஸ் சேர்த்து தயாரிக்கப்படும் மில்க் ஷேக் உடல்நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும். அதன் படி, இன்று அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று டிராகன் ஃபுரூட் ஆகும். இது இயற்கையாகவே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன், சுவையையும் தரக்கூடிய சிறந்த பழமாகும். இந்த பழத்தில் மில்க் ஷேக் தயார் செய்யும் முறைகளையும், அதன் நன்மைகளையும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

டிராகன் பழத்தின் ஊட்டச்சத்துக்கள்

டிராகன் பழத்தில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. புரதம், பொட்டாசியம், வைட்டமின் பி, சி, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன.

டிராகன் பழம் மில்க் ஷேக் தயாரிக்கும் முறை

டிராகன் பழங்களை வைத்து மில்க் ஷேக் தயாரிக்கும் முறை குறித்து இப்போது காணலாம்.

தேவையானவை

  • டிராகன் பழம்
  • பால்
  • நொறுக்கப்பட்ட ஐஸ்
  • தேவையான அளவு சர்க்கரை

செய்முறை

  • முதலில் டிராகன் பழங்களை அதன் தோலுரித்து, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இதில் பால் மற்றும் நொறுக்கப்பட்ட ஐஸ் கலந்து ஒரு பிளெண்டரில் சேர்க்கவும்.
  • இதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மென்மையாக கலக்கவும்.
  • சுவையான மற்றும் ஆரோக்கியமான டிராகன் பழம் மில்க் ஷேக் தயாராகி விட்டது.

இந்த பதிவும் உதவலாம்: டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்

டிராகன் பழம் மில்க் ஷேக் நன்மைகள்

  • டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன. அதே சமயம், தேவையான அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன.
  • இந்த பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் நிறைந்துள்ளதால், இது நாள்பட்ட நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • டிராகன் பழத்தில் உள்ள உள்ள நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற நிலைமைகளைக் குறைக்க உதவுகிறது.
  • மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
  • டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய்தாக்குதலிலிருந்து விடுவிக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Honey Dragon Fruits: தேன் கலந்த டிராகன் பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Vegan Diet: வீகன் டயட் இருக்கீங்களா?… நீங்கள் சாப்பிட வேண்டிய புரத உணவுகள் எவை?

Disclaimer