$
Fasting Tips for Pregnant Women: நவராத்திரி என்பது ஒன்பது நாள் கொண்டாடப்படக்கூடிய இந்து பண்டிகைஅயாகும். இது இலையுதிர் மாதங்களில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நிகழ்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தொடங்கி, அக்டோபர் 24 ஆம் நாள் முடிவடைகிறது. இந்த நவராத்திரி விழா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நவராத்திரி விரதத்தில் சில உணவுகளை உட்கொள்வதைத் தவிர்த்து அல்லது முழு உணவைத் தவிர்த்து விரதம் இருப்பர். சிலர் ஒன்பது நாள்களும், இன்னும் சிலர் குறிப்பிட்ட நாள்களில் விரதம் இருப்பார்கள். எனினும், கர்ப்பிணி பெண்கள் நவராத்திரியின் போது விரதம் இருப்பது அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் பெரும்பாலானோர்க்கு எழும் ஒன்று. இப்போது நவராத்திரியின் போது விரதம் இருக்கும் முறை மற்றும் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நர்ச்சர் IVF கிளினிக், மகளிர் மருத்துவ நிபுணர், மகப்பேறு மருத்துவர் மற்றும் IVF நிபுணர் மருத்துவர் அர்ச்சனா தவான் பஜாஜ் பயனுள்ல நுண்ணறிவுகளை வழங்கியுள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் நவராத்திரி விரதம் இருக்கலாமா?
சிலர் பண்டிகைக் காலங்களில் தவறாமல் விரதம் இருந்து வழிபட்டு வருவர். ஆனால், கர்ப்ப காலங்களில் இது போன்ற விரதம் மேற்கொள்வது சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒன்று. இந்த நவராத்திரி விரதம் ஒன்பது நாள்கள் கடைபிடிக்கக் கூடிய சிறப்பு பண்டிகையாகும். ஆனால், மருத்துவரின் கூற்றுப்படி, கர்ப்பிணி பெண்கள் ஒன்பது நாள்களுக்கான உண்ணாவிரதம் என்பது சிறந்த தேர்வாக இருக்காது.
இந்த பதிவும் உதவலாம்: Plums During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் பிளம்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
அவரின் கூற்றுப்படி, “கர்ப்பத்தின் எந்த மூன்று மாதங்களிலும் விரதம் இருப்பது குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கலாம். கர்ப்ப காலத்தில் உண்ணாவிரதம் இருப்பது, கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவது இதற்குக் காரணமாகலாம். அதே சமயம், எந்தவித சிக்கல்களும் இல்லாமல் ஆரோக்கியமான கர்ப்பமாக இருந்தால், உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், அதற்கு கட்டாயம் மருத்துவரை அணுகுவது அவசியம்” என்று கூறியுள்ளார்.

கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய நவராத்திரி உணவுக் குறிப்புகள்
கர்ப்பிணி பெண்கள் நவராத்திரி விரதம் மேற்கொள்பவராக இருந்தால் சில குறிப்புகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
உடலை நீரேற்றமாக வைத்திருத்தல்
பொதுவாக கர்ப்பிணி பெண்கள், நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியமாகும். போதுமான தண்ணீர், மோர் பால், எலுமிச்சை அல்லது தேங்காய் தண்ணீர் போன்ற பல்வேறு இயற்கையான திரவங்களை எடுத்துக் கொண்டு உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம் ஒரே நேரத்தில் நிறைய திரவங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக, மெதுவாக சிறிது சிறிதாக எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு உடல் போதுமான நீரேற்றத்துடன் உள்ளதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: First Month Pregnancy Symptoms: கர்ப்பத்தின் முதல் மாத அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
சிறிய உணவு
மருத்துவரின் கூற்றுப்படி, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு உணவு எடுத்துக் கொள்வதற்குப் பதில், இடைவெளிகளில் அடிக்கடி சிறிய உணவைச் சாப்பிடுவது அவசியமாகும். அஜீரணம் அல்லது அசிடிட்டி போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, உணவுக்கு இடையே 2-3 மணி நேர இடைவெளியைப் பராமரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நார்ச்சத்து நிறைந்த உணவு
செரிமான மேம்பாட்டிற்கு நார்ச்சத்து நிறைந்த உணவு முக்கியமானது. எனவே, நவராத்திரி விரதத்தின் போது நார்ச்சத்து நிறைந்த உணவுகளான கேரட், வெள்ளரி, தக்காளி போன்ற பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளலாம். கூடுதலாக, நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க முழு தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான தானியங்கள்
பொதுவாக, நவராத்திரி விரதத்தின் போது அரிசி, கோதுமை மற்றும் பிற பொதுவான தானியங்கள் தடை செய்யப்படுகின்றன. எனினும், அரிசிக்குப் பதில் களஞ்சிய தினையை எடுத்துக் கொள்ளலாம். இதனை கீர் அல்லது கிச்சடி வடிவில் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Test Kit: கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்துவது எப்படி?
பால் பொருள்கள்
தினமும், பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருள்களை குறைந்தது 2-3 பரிமாணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கால்சியம் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள் நவராத்திரி விரதத்தின் போது தவிர்க்க வேண்டியவை
மேலே கூறப்பட்டுள்ள உணவுக் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுடைய ஆரோக்கியமான உண்ணாவிரதப் பலன்களைப் பெறலாம். அதே சமயம், வறுத்த மற்றும் பாதுகாக்கப்பட்ட உணவுகளான உருளைக்கிழங்கு சிப்ஸ், ஆலு பூரிகள், சபுதானா பொரியல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உண்ணாவிரதத்திற்கு அக்ரூட், பாதாம், திராட்சைகள், வறுத்த மக்கானா உள்ளிட்ட உலர்பழங்கள் போன்றவற்றை சிற்றுண்டிகளாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Avoid Pregnancy Fruits: கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள் என்னென்ன தெரியுமா?