இன்றைய நவீன வாழ்க்கை முறையில் எல்லா துறையிலும் நைட் ஷிஃப்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. 24 மணி நேரமும் வேலை சீராக இயங்க ஷிஃப்ட் அடிப்படையில் வேலை நடக்கிறது. ஆனால் இதில் நைட் ஷிஃப்ட் ஆபத்தானது. உடல் ரீதியாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சமீபத்திய ஆய்வு ஒன்று, தொடர்ந்து மூன்று நாட்கள் நைட் ஷிப்ட் வேலை செய்வதால் மறைந்திருக்கும் உடல்நல அபாயங்கள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இரவில் தூங்காமல் வேலை செய்தால் என்ன ஆகும்?
நைட் ஷிஃப்ட் செய்வதால் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். நமது மூளையில் உள்ள முதன்மை உயிரியல் கடிகாரத்துடன் தொடர்புடைய செயல்முறைகள், உடலில் வேறு இடங்களில் அமைக்கப்பட்ட செயல்முறைகளை பின்பற்றுகின்றன. அவை இரவு, பகல் என்று பிரித்து செயல்படுகிறது. இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் இந்த சுழற்சி பாதிக்கப்படும்.

இதையும் படிங்க: நைட் ஷிப்டில் வேலை செய்பவரா நீங்கள்? இத தெரிஞ்சிக்கோங்க!
மூன்று நாள் இரவு தூங்காமல் ஷிஃப்ட் செய்தால், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஏற்படும். இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும். இது இரவு ஷிப்ட் தொழிலாளர்களிடமும் அதிகமாக உள்ளது.
ஆய்வு நிலவரல்
காலை மற்றும் இரவு வேலை செய்பவர்கள் இடையே எடுக்கப்பட்ட ஆய்வில், பகல் ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுடன் ஒப்பிடும்போது, நைட் ஷிப்ட் பார்ப்பவர்களின் உடல் செயல்பாடுகளில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
நைட் ஷிஃப்ட் வேலை செய்பவர்களின் குளுக்கோஸ் ஒழுங்குமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்சுலின் உற்பத்தி மற்றும் உணர்திறன் ஆகியவற்றில் சிரமம் ஏற்படுகிறது. மாற்றப்பட்ட குளுக்கோஸ் அளவுகள், உடல் உருப்புகளை சேதப்படுத்தலாம். இது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். மேலும் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Image Source: Freepik