மக்கள் தலைவலி, காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆன்லைன் வீட்டுவைத்தியம் தேடிய காலம் மெல்ல.. மெல்ல… மாறி, தற்போது புற்றுநோய்க்கே யூடியூப் வீடியோக்கள் மூலம் தீர்வு தேட ஆரம்பித்துள்ளனர். இதனால் பல தவறான தகவல்கள் சோசியல் மீடியாக்கள் மூலமாக பரவுகின்றன. அந்த வரிசையில் கொலஸ்ட்ரால், உடல் பருமன், எடையிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி இணையத்தை நாடுவோர் ஏராளம்.
அதிலும் குறிப்பாக மாமிசம் சாப்பிடுவோருக்கும், வீகன் உணவுமுறையை பின்பற்றுவோருக்கும் சோசியல் மீடியாக்களில் விவாதங்கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் “ஆட்டிறைச்சி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடுமா?” என்பது அசைவப்பிரியர்கள் பலருக்கும் தோன்றக்கூடிய பொதுவான சந்தேகமாக உள்ளது.
ஏனெனில் ஆட்டிறைச்சியை விட கோழி இறைச்சி அல்லது மீன் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்ற கருத்து நிலவிவருகிறது. இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்தமருத்துவர் அருண் குமார் தனது சோசியல் மீடியா மூலமாக தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
கொலஸ்ட்ரால் Vs கொழுப்பு:
கொலஸ்ட்ரால் என்பது கல்லீரல் உற்பத்தியாகக்கூடிய கெமிக்கல். இது நமது உடலுக்கு நாளொன்றுக்கு சுமார் 2000 மில்லி கிராம் தேவைப்படுகிறது.
அதேசமயம் கொழுப்பு என்பது வயிறு, தொடை, பின்பகுதி ஆகியவற்றில் கிலோ கணக்கில் தேங்கும் தேவையற்ற எடையாகும்.
உடலில் பயன்படுத்தாத கலோரிகள் ட்ரைகிளிசரைடுகளாக சேமிக்கப்படும். இது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.
யாரெல்லாம் மட்டன் சாப்பிடலாம்?
ஆடு, மாடு, பன்றி ஆகியவற்றின் இறைச்சி ரெட் மீட் என்றும், கோழி மற்றும் மீன் இறைச்சி ஒயிட் மீட் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் கொழுப்பு சத்து நிறைந்ததாக கருதப்படும் ரெட் மீட் வகைகளை யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
உடலில் ட்ரைகிளிசரைடுகள் (பயன்படுத்தப்படாத கலோரிகளால் உருவாகும் கொழுப்பு) அதிகமுள்ளவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடலாம். அதே சமயம் மாவுச்சத்து நிறைந்த உணவு பொருட்களான இட்லி, தோசை, அரிசி மற்றும் சர்க்கரை, எண்ணெயில் பொறித்த உணவுகளை கட்டாயம் நிறுத்த வேண்டும். எனவே ட்ரைகிளிசரைடுகள் அதிகமுள்ளவர்கள் லோ கார்ப் (LowCarb) டயட் மூலமாக மட்டுமே குறைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமுள்ளவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாதா? என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள அவர், உணவில் உள்ள கொலஸ்ட்ரால், நேரடியாக ரத்த கொலஸ்ட்ரால் (LDL) அளவை பாதிக்கும் என்ற தவறான கருத்து நீடித்து வந்தது.
ஆனால் பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி, உணவில் உள்ள கொலஸ்ட்ராலானது, ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது கிடையாது. எனவே இவர்கள் அளவாக அசைவம் சாப்பிடலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மட்டன் இரு வகையாக சாப்பிடுகிறோம். ஒன்று செம்மறி ஆடு , மற்றொன்று வெள்ளாடு. பொதுவாக ஆங்கிலத்தில் மட்டன் என்ற வார்த்தை செம்மறி ஆட்டின் இறைச்சியை குறிக்கிறது. ஆனால் இந்தியாவில் அதிக மக்கள் வெள்ளாட்டு இறைச்சியை பயன்படுத்துகின்றனர். இதன் இரண்டின் தன்மை மற்றும் கொழுப்பின் அளவு வேறு, வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, 100 கிராம் செம்மறி ஆட்டு கறியில் 136 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. அதேசமயம் வெள்ளாட்டு கறியில் வெறும் 80 கிராம் அளவிற்கு மட்டுமே கொலஸ்ட்ரால் உள்ளது.
நாட்டுக்கோழி அல்லது பிராய்லர் கோழி இரண்டையும் தோலுடன் சாப்பிடும் போது 100 கிராமில் 73 கிராம் அளவிற்கு கொலஸ்ட்ராலும், தோல் நீக்கிய 100 கிராம் கோழி இறைச்சியில் 55 கிராம் கொலஸ்ட்ராலும் உள்ளது.
ஆனால் மீனில் வெறும் 50 கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது. 100 கிராம் மாட்டிறைச்சியில் 90 கிராமும், பன்றி இறைச்சியில் 75 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.
மட்டன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடுமா?
ஒரு மனிதனின் உடலுக்கு தினந்தோறும் சராசரியாக 2000 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் தேவை என்பதால், தினமும் கால் கிலோ அளவிற்கு செம்மறி ஆட்டு கறி சாப்பிட்டாலும், அதிகபட்சம் 300 கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே உடலுக்கு கிடைக்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை.
அதேசமயம் எல்டிஎல் (கெட்ட கொழுப்பு) ஜீரணிக்க முடியாத அளவிற்கு என்சைம் குறைப்பாடு உள்ளவர்கள், ஆட்டிறைச்சி போன்ற நிறை கொழுப்புகள் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது என பரிந்துரைத்துள்ளார்.
इस जानकारी की सटीकता, समयबद्धता और वास्तविकता सुनिश्चित करने का हर सम्भव प्रयास किया गया है हालांकि इसकी नैतिक जि़म्मेदारी ओन्लीमायहेल्थ डॉट कॉम की नहीं है। हमारा आपसे विनम्र निवेदन है कि किसी भी उपाय को आजमाने से पहले अपने चिकित्सक से अवश्य संपर्क करें। हमारा उद्देश्य आपको जानकारी मुहैया कराना मात्र है।